Tuesday, 22 January 2019

முஜாஹதா


முஜாஹதா' என்னும் ஆன்மீக உழைப்பு இஸ்லாமிய எழுச்சியின் மூல நிபந்தனைகளில் ஒன்று. இதுவே இஸ்லாமிய சமூக மாற்றத்தின் அடிப்படையான ஷரத்தும்கூட. பாவச் செயல்கள் அதிகரித்து அநீதியும் அடக்குமுறையும் மேலோங்கி அல்லாஹ்வுடனான தொடர்புகள் அறுந்துபோகும் போது பெரும் ஆன்மீக வருமை மேலெழுகிறது. அதுவே சமூக வீழ்ச்சியின் தொடக்கமாகவும் அமைந்து விடுகிறது. முஸ்லிம் சமூகத்தின் நோயெதிர்ப்பு சக்தியாக விளங்கும் இந்த ஆன்மீக பலத்தைப் புறக்கணித்துவிட்டு எந்த மாற்றத்தையும் நாம் எதிர்பார்க்க முடியாது. "ஸலாஹீத்தீன் ஐய்யூபியின்" மிகப் பெரும் போரட்ட வெற்றிகளுக்குப் பின்னால் இருந்த்தெல்லாம் இந்த ஆன்மீக இரகசியமே.

-(இஸ்லாமிய எழுச்சியும் மேற்குலகும்)

Monday, 7 January 2019

சவால்களும் எமது பணிகளும்:-



இஸ்லாமிய வரலாற்றில் சம்பவங்களும் நிகழ்வுகளும் நடந்துகொண்டிற்கின்ற ஒரு சூழலில் இந்த சம்பவங்களுக்கும் நிகழ்வுகளுக்கும்   ஏற்ப சமூகத்தை வழிநடத்த வேண்டும்; இந்த மரபை இறைவன் இறுதி நபியின் (ஸல்) வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்து கடைசி வரைக்கும் பேனியிருக்கிறான். இருபத்திமூன்று ஆண்டுகள் சரியாக நடைபெற்ற நிகழ்வுகளை அடிப்படையா வைத்து கியாமத்து நாள்  வரைக்கும் மனித சமூகத்துக்கு வழிகாட்டுகின்ற ஒரு வகையிலே தான் அல்-குர்ஆன் இறக்கபட்டது. மிக சரியான நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்த ஒரு கால பகுதியிலே அது மனித சமூகத்தை யதார்த்தமாக வழிநடத்தியிருக்கிறது.

இந்த மரபின் பணி எப்போது சம்பங்களோ அசம்பாவிதங்களோ நடைபெறுகின்ற நேரங்களில் அவைகளுக்கான வழிகாட்டலை நாம் இறைவனுடைய மார்க்கத்திலிருந்து பெற்று கொள்ள வேண்டும். மார்க்கம் நிறைவானதாக இருந்தாலும், நிலைமைக்கும் சூழலுக்கும் ஏற்ப வழிக்காட்டல்களை அதிலிருந்து எடுத்து கொள்ளவேண்டும். அந்த வழிகாட்டலை சமூகத்துக்கு வழங்கி சமூகத்தை சரியான பாதையில் நெறிபடுத்து சமூக தலைமையின் கடமை.
.
இறைவன் அவனது திருமறையில் பல சரித்திரங்களை கூறுகின்றான் அவைகள் சரித்திரம் கூறுவதற்காக கூறவில்லை, ஒவ்வொரு வரலாறு முடிவிலும் இறைவன் கூறுகிறான் "நிச்சயமாக இதிலே அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில் பெரும் பாலோர் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை; என்று கூறுகிறான். சமகாலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான நடக்கும் இந்த தேசத்தில் இன கலவரங்களும், அசம்பாவிதங்களும் நடப்பது நமக்கு அறிவுட்டுவதற்காக, நமது வாழ்க்கையை திரும்பி பார்பதற்காக, படிப்பினை பெறுவதற்காக, நமது வாழ்வில் மாற்றங்கள் ஏற்படுத்துவதற்காக, மேலும் நாம் வாழ்வில் சரியான பாதையில் பயணிப்பதற்காக.
.
சமூகத்தில் பாசிச  இனவாதம் என்ற  நோய் வேகமாக பரவிகொண்டு வருகிறது இதை  ஒரு கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும், எப்படி ஒரு நோயாளி தனது நோயை மறந்து வாழ முடியாதோ அப்படிதான் நாம் இந்த பாசிச இனவாதத்தை மறந்து சமூகத்தை வழிநடத்த கூடாது எந்த நேரத்திலும் ஒரு எச்சரிக்கையுடன், விழிப்புடனும் இருக்க வேண்டும்..

நமக்கு எதிராக நடக்கும் சம்பவங்களும், இன மோதல்கள், இவைகளுக்கு எதிராக எவ்வாறு எதிர்வினையாற்றுகிறோம், அந்த நேரங்களில் நாம் ஓடுகிறோம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று நிவாரணம் வழங்குகிறோம், மறுவாழ்வுக்கு தேவையான பெரும் உதவிகள் செய்து, ஆங்காங்கே சில கண்டன  போராட்டங்கள் நடத்தி விட்டு செல்கிறோம் மீண்டும் ஓரு பிரச்சினை வந்தால் இது போல் உதவிகள் செய்து எதிர்வனையார்றுகிறோம். பிரச்சினைகள் நடந்தால் சில கண்டன குரல்கள் பதிவு செய்து விட்டு வழக்கமான நமது பணிகளுக்கு திறும்பிவிடுகிறோம். இது போல்  செயல்படடால் பின் விளைவுகள் மிக பயங்கரமாக இருக்கும்.


இவைகளை எதிர்கொள்ள சமூகத்திற்காக  நேரத்தை ஒதுக்கும் ஒரு கலாச்சாரமாக நாம் மாற வேண்டும்., பிரச்சினை நடந்தாலும் நடக்காவிட்டாலும் சமூகம் சார்ந்து மிகுந்த விழிப்புணர்வுடன் எச்சரிக்கையுடன் நாம் பயணிக்க வேண்டும், இல்லை; தன்னுடைய வளர்ச்சி, தன்னுடைய பெருமை, தன்னுடைய புகழ், தன்னுடைய பதவி தன்னுடைய அதிகாரம் தன்னுடைய வருமானம் தன்னுடைய குடும்பம் என்று ஒர் இனம் போய்கொண்டு இருந்தால் தன்னுடைய வேர்களை காப்பாற்றாத இனமாக இது வீழ்ந்து போகும்.


சமூக அமைப்புகளும், இயக்கங்களும், தங்களுக்குள் ஒரு தனி உலகைப் படைத்துக் கொண்டு சமூக நடவடிக்கைகளை தனி சமூகமாக செயல்படுவது  இஸ்லாமிய சமூக அமைப்பிற்கு அரசியலுக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

நாம் ஒரு மூடிய சமூகமாக இல்லாமல் நமக்கு எதிராக நடக்கும் பாசிச சத்திகளின் செயல்களை ஆவன படுத்தி அவைகளை  பொது சமூகம் மற்றும் உலக சமூகங்களில் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் அதற்கான அனைத்து தயாரிப்புகளும், உத்திகளையும் பயன்படுத்தி, அவர்களை இச் செயல்களுக்கு ஒரு அழுத்தமான கண்டன குரல்களை பதிவுசெய்ய நாம் செயல்பட வேண்டும்.


இன்றைய உலக ஒழுங்கு ஏற்ப போராட்டம் நடந்த மிக பெரிய ஆயுதம்மான;  ஊடகங்களையும், சட்ட ரீதியாகவும், கருத்தியல் ரீதியாக போராட்டங்களை நாம் முழுமையாக பயன்படுத்தும் சமூகமாக மாறவேண்டும், ஜனநாயக ரீதியாக அனைத்து வழிகளிலும் இந்த பாசிசத்தை எதிர்த்து செல்ல வேண்டும். இந்த பாசிச இனவாத நோய்யை கட்டுபாட்டில் கொண்டுவரவிட்டால், சமூகத்தை ஒரு தட்டில் வைத்து எதிரியின் கையில் கொடுப்பது போல் ஆகிவிடும். இப்படி ஒரு திடமான செயற்பாடு எற்ப்படாவிட்டால் மிகவும் அபாயகரமான எதிர்காலம் நோக்கி நாம் செல்வது தவிர்க்க முடியாது போகும்.விழிப்புடன் செயல்படுவோம்.


Friday, 4 January 2019

எனது ஒரு கட்டுரை

One of My articles published in today's Vidivelli (SriLankan ) Newspaper! (03/01/2019) எனது ஒரு கட்டுரை இன்றைய விடிவெள்ளி இலங்கை நாளிதழில்