முஜாஹதா' என்னும் ஆன்மீக
உழைப்பு இஸ்லாமிய எழுச்சியின் மூல நிபந்தனைகளில் ஒன்று. இதுவே இஸ்லாமிய சமூக
மாற்றத்தின் அடிப்படையான ஷரத்தும்கூட. பாவச் செயல்கள் அதிகரித்து அநீதியும்
அடக்குமுறையும் மேலோங்கி அல்லாஹ்வுடனான தொடர்புகள் அறுந்துபோகும் போது பெரும்
ஆன்மீக வருமை மேலெழுகிறது. அதுவே சமூக வீழ்ச்சியின் தொடக்கமாகவும் அமைந்து
விடுகிறது. முஸ்லிம்
சமூகத்தின் நோயெதிர்ப்பு சக்தியாக விளங்கும் இந்த ஆன்மீக பலத்தைப்
புறக்கணித்துவிட்டு எந்த மாற்றத்தையும் நாம் எதிர்பார்க்க முடியாது.
"ஸலாஹீத்தீன் ஐய்யூபியின்" மிகப் பெரும் போரட்ட வெற்றிகளுக்குப்
பின்னால் இருந்த்தெல்லாம் இந்த ஆன்மீக இரகசியமே.
-(இஸ்லாமிய எழுச்சியும் மேற்குலகும்)
No comments:
Post a Comment