Thursday, 2 November 2017

அஞ்சு வண்ணத்தார் வாணிகம்"


 " அஞ்சு வண்ணத்தார் வாணிகம்"

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் காணப்படும் பழைய பாடற் திரட்டு.

இப்பாடலில் நாகப்பட்டினம் வர்ணிக்கப்படுகிறது. அங்குள்ள வியாபார நடவடிக்கைகள் குறிப்பிடப்படுகின்றன. 

மேற்கே இருந்து குதிரைகள் கொண்டு வரப்படுகின்றன, வடக்கிலிருந்து  பிடவை கிழக்கேயிருந்து பொன்,  தெற்கிலிருந்து முத்துக்கள் எடுத்து வரப்படுகின்றன.

இங்ஙனம் கப்பல்களிலே பல்வேறு வகையான பண்டங்கள் நாகைக்குக் கொண்டு வரப்படுகின்றன.

இப்பண்டமாற்று வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர் அஞ்சு வண்ணத்தார்.  இதன் பயனாக அஞ்சு வண்ணத்தவர் சிறப்புடன் வாழ்கின்றனர். 

அது காரணமாக அங்கு அறம் வளர்கிறது. அத்தகைய சிறப்புடைய ஊரிலே உள்ள கடற்கரையிலே சந்தனம் குவிந்து கிடக்கின்றது. ஏனைய பொருள்களும் அங்கும் இங்குமாகச் சிந்திக் கிடக்கின்றன. உப்பும் அங்கு உண்டு.

இத்தகைய கண்கவர் காட்சி மிக்கது நாகை என்னும் நாகப்பட்டினம். இந்த நாகப்பட்டினத்திலே அஞ்சுவண்ணத்தார் , Anju Vannar என அழைக்கப்பட்ட  முஸ்லிம் மக்கள் வணிகத்தில் சிறந்து விளங்கினார் என்பதையே இப்பழைய பாடல் குறிக்கிறது.

(நூல்: வரலாற்றின் வெளிச்சத்தில் போர்த்துக்கீசியர்கள் குஞ்ஞாலிகள் - செ.திவான் 
and Meera Abraham, Two Medieval Merchant Guilders of south India, New Delhi 1988.

------    ---     --------      --------- 

இந்த வரலாறு மீட்டு எடுக்கப்பட வேண்டும். நாம் மீண்டும் அந்தப் பொற்காலத்திற்குச் செல்ல வேண்டும்.

வேலை செய்கின்ற சமுதாயம், என்று பெயர் எடுத்து விட்டோம். இனி நாம் அடுத்தக் கட்ட நகர்வுக்கு தயார் செய்யவேண்டும். இனி நாம் மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் சமுதாயமாக மாற வேண்டும். ஒரு முதாலாளியாக மாற வேண்டும். தொழிலாளி ( சம்பள அடிமையிலிருந்து )  என்கின்ற ‘நிரந்திர’ த்திலிருந்து விடுபட வேண்டும், தற்சார்பு பொருளாதாரதை நோக்கி...

No comments:

Post a Comment