Saturday, 10 November 2018

பயணம்


ஒரு பயணியாக
இந்த அரபு தேசத்தில்
பொருளீட்ட சென்றோம்
ஆனால் வாழ்நாள் முழுவதும்
பயணங்களிலேயே கழிகிறது...


பாலைவன புழுதி
காற்றில் திசை மாறிபோகும்
பயணியை போல்
அவ்வப்போது நாம்
இலக்கு மாறுகிறது
வழிகாட்ட ஆளுமை
இல்லாமல்!!!


பல கனவுகலோடும்
கடந்து செல்லும்
வாழ்க்கை,


அந்த வாழ்க்கை துணையோ
வெறுமையாக அங்கு!!
அவனோ துறவியாக
இங்கு !!! - மறுபூமியில்..


பெற்று எடுத்த பிள்ளையும்
பெற்றோர் யிருந்தும்
அனாதையாய் இங்கு..
என்ன வாழ்வோ !!!


வாழ்வை போதித்த
அந்த உன்னத மார்க்கம்
மலர்ந்த பாலைவன
சோலையில்,


ஒரு சமூகம் இருவரும்
பிரிந்து தனிமையில்
நகர்கிறது, பின் எதற்கு
இரு மணம் இணைந்த
திருமணம்!!!


இங்கு மார்க்கத்திற்கு
மதம் என்ற விளக்கம்
கற்பித்தோம், வாழ்வின்
வீழ்ச்சிக்கு சென்றோம்!!


நாம் சிந்தனை ஆளுமைகளை
உருவாக்கவில்லையோ அல்லது
அவர்களை அடையாலம்
காணவில்லையோ!!!


மீண்டும் அந்த
 கடவுச்சீட்டுடன் நம்
அடுத்த தலைமுறை
வாழ்வு நகர்கிறது அந்த
பயணத்தை நோக்கி 🛫

No comments:

Post a Comment