Wednesday, 16 October 2019

ஆற்றங்கரை:




ஆற்றங்கரையில் தான் நாகரிகம் பிறந்தது, அந்த ஆற்றங்கரைகளில் தான் உழவுப் பண்பாடு படைக்கப்பட்டது, அங்கு வோளாண்மை வளர்ச்சி பெற்றது. அங்கு ஆற்று நீர் கிடைக்கும் வரைதான் வேளாண்மை தொடரும், அந்த வோளண்மை தொடரும் வரைதான் அங்கு வாழும் இனம் அந்த மண்ணில் நிலையான வாழ்வை தொடரும், ஒரு இனம் ஒர் இடத்தில் நிலைபெற்று வாழும் போதுதான் தனக்கான தற்சார்பு வாழ்வியலை நிறுவுகிறது, பொருளியலை பெருக்குகின்றது, அதன் சூழலில் தன் பண்பாட்டை நிறுவுகிறது, அப்போது தான் அதன் கலாச்சாரமும், மொழியும் செழிக்கின்றன, அதன் தொடர்ச்சியாக அவ் இனம் வரலாறு படைக்கின்றது.

 


ஆனால் அங்கு ஆற்று நீர் அவ்விடத்திலிருந்து பறிக்கப்படும் போது, அல்லது நீர் நிலை குறையும் போது அந்த வரலாற்று படைத்து செழித்து வாழ்ந்த இனம் அங்கு வாழ வழியில்லாமல், அவ்விடத்திலிருந்து புலம்பெயர்ந்து செல்கிறது அதன் வாழ்வுக்காக. நீரற்றுப் போவது நிலையான வாழ்க்கைக்கு மிக அச்சுறுத்தலை தருகின்றது.

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு”


ஒர் இனம் தன் தாயகத்தில் நிலைத்து வாழும் போது தான் அதன் இன அடையாளத்தையும் பண்பாட்டையும் அதன் மொழியையும் காக்க முடியும். புலம்பெயர்ந்து சென்றால், பண்பாட்டை இழக்க நேரிடும், அதன் மொழி காணாமல் போகும், அந்த இன அடையாளம் அழிந்து போகும். அதன் வரலாறும் மறந்து போகும்.


இவைதான் இங்கு; தமிழகத்தில் காவேரிபடுகையில் ஆற்று நீர் உள்ளவரைதான் வேளாண் செழிக்கும், அதன் உழவு தொழில் தொடரும் வரைதான், அந்த இனம் தன் வாழ்விடத்தை விட்டு புலம்பெயராது, பண்பாடு சிதையாது, கலாச்சாரம் காக்கப்படும், அதன் சொந்த மண்னை விட்டு வெளியேறாத வரை அதன் அடையாளங்கள் காக்கப்படும், அதன் மொழியும், வரலாறும் அழியாது.




ஆனால் இங்கு காவிரி நீரை தர மறுப்பதும், காவேரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் 48 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட இரண்டு அணைகளைக் கட்ட இருக்கும் கர்நாடக அரசின் முயற்சிகளை மறைமுகமாக ஊக்குவிக்கிறது இந்திய அரசு, மேலும் காவேரிபடுகை முழுவதும் மீத்தேன், ஷேல் மீத்தேன், நிலக்கரி எடுப்பது என பல மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்தி, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரிப்படுகையை சுவடு தெரியாமல் அழித்தொழிப்பதே, இந்தியாவை ஆளும் பார்பாணிய பணியா முதலாளித்துவ அரசின் நோக்கம்.


இங்கு தான் நாம் நம் அரசியலை முன்னெடுக்க வேண்டும், ஓரு நுட்பமான புரிதல் வேண்டும், தமிழக மக்களைப் பிரித்திட சாதிகளும், மதங்களும், இவற்றோடு இணைத்து அரசியல் கட்சிகள் இருக்கின்றன. இவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த மண்ணின் மக்கள் என்ற உணர்வோடு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும், இல்லையென்றால், பன்னாட்டு பெறும் முதலாளிக்கு ஏலம் விட்டு விடுவார்கள் காவரிபடுகை முழுவதும். நாளை சுதந்திரமாக காவிரிபடுகையில் உழுதுண்டு வாழ்வோமா? அல்லது புலம்பெயர்து செல்வோமா!! காலம் தான் பதில் சொல்லும்...

Monday, 7 October 2019

குருவிக் கூடு:-


ஒர் அடர்ந்த காடு; அக்காட்டில் ஏராளமான விலங்குகள், பறவைகள், ஒரு மரத்தில் ஒரு சின்னஞ்சிறு குருவி, அழகான கூடு ஒன்றை சொந்தமாகக் கட்டிக்கொண்டு சுதந்திரமாக வாழ்கிறது, எங்கிருந்தோ ஒருவன் வருகிறான். அடுத்து, அவனுக்குச் சொந்தக்காரர்கள் சிலர் வருகிறார்கள், மகிழ்ச்சியக அங்கேயே உணவு சமைத்து சாப்பிட முடிவெடுக்கிறார்கள். ஓடிக்கொண்டிருந்த மானை அடித்துத் தூக்கிக் கொண்டு வருகிறான்.

அதை வேகவைக்க, சுள்ளிகளில் நெருப்புப் பற்ற வைப்பது சிரம்மாக இருக்கிறது, அவன் கண்ணில் குருவிக்கூடு படுகிறது, குருவிக்கூடு மென்மையான நார்களாலானது, அதை எடுத்துத் தீப்பற்ற வைத்ததும் உடனே பற்றிக் கொண்டது. மான் இறைச்சியைக் சுட்டு விருந்தாக்கி வயிறு புடைக்க உண்டார்கள்.

பின்னர், அதே பாதை வழியே தொடர்ந்தார்கள், குருவிக்கு இப்போது கூடு யில்லை, சாம்பலாகிக் கிடக்கும் கூட்டில் இனி வாழ முடியாது, காட்டில் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது.

அதுபோல்; எங்கிருந்தோ வருகிறார்கள், ' இலாப வெறியோடு' தமிழகத்தில் தொழிற்சாலைகளை நிறுவுகிறார்கள். அதற்கு எரிபொருள் தேவை, காவிரிப்படுகை, காரைக்குடி, இராமநாதபுரம் பகுதிகளைப் பிளந்து, எண்ணெய்-எரிவாயு- நிலக்கரியை எடுத்து எரியூட்டுகிறார்கள், வேட்டைக்காரன் குருவிக்கூட்டை எடுத்து நெருப்புப் பற்ற வைத்தது போல, காவிரி படுகை நன்றாக பற்றி எரிகிறது. தொழிற்சாலைகள் நடக்கின்றது.

குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் போய்விடுவார்கள், கூடு இழந்த குருவி போல, வாழ்விடம் இழந்த தமிழ் மக்கள்! கூட்டை இழந்த குருவி இன்னொரு கூடு கட்டிக்கொள்ள முடியும். ஆனால் தமிழர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை. இழந்தால் இழந்நதுதான்...

- மீத்தேன் அகதிகள்-