Friday, 20 December 2019

உயர் கல்வியும் இன்றைய நிலையும்: –




கீழ்திசை தேசங்களில், பல்கி பெருகி உள்ள பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி துறைகளில் பயிலும் மாணவர்களின்  எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டுயிருக்கிறது, அங்கு பயிலும் ஆய்வு (PhD) மாணவர்களின்  ஆராய்ச்சி அறிக்கை சமூகத்தின் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை, தற்போதைய நிலையில் சமூகம் எதிர் கொண்டிருக்கும் சூழலியல், மருத்துவம்,  முதலாளித்துவ பொருளாதாரம், புவிசார் அரசியல், சமூக நீதி, கல்வியியல், வேளாண்மை, மற்றும் நீர் மேலாண்மை, இது போன்ற துறைகளில் சமூகம் எதிர் கொள்ளும் இன்னல்களுக்கு எந்தவொரு மிக பெரிய அளவில் தீர்வுகளை, கீழ்திசை நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியாகும் ஆராய்ச்சி மாணவர்களின் (PhD) ஆய்வு  முடிவுகள் பெரும் விளைவை ஏற்படுத்தவில்லை சமூகத்திற்கு.


மாறாக சிறு மற்றும் குறு தொழில் பட்டறையில் பணிபுரியும் இளைஞர்கள் தன்னார்வமாக, தேவைக்கு ஏற்ப புதிய இயந்திர கண்டுபிடிப்புகளை படைக்கிறார்கள் நாம் செய்திகளில் காண்கிரோம்இவை போன்று ஏண் கீழ்திசை நாடுகளின் ஆய்வு துறையின் மூலம் பெரிய அளவில் மாற்றத்தை காணமுடியவில்லை, ஏண் இந்த நிலை,


இவைகளை யார் கட்டுபடுத்துகிறார்கள்;
மேற்க்கும், முதலாளித்துவம் சேர்ந்து, காலனித்துவ மற்றும் மூன்றாம் உலக நாடுகளில் ஆராய்ச்சி துறைகளில் மூலம் சுற்றுச்சூழலியல், மருத்துவம், பொருளாதாரம், அரசியல், வேளாண்மை, இயற்கை வளங்கள், போன்ற துறைகளில் புரட்சிகரமான மாற்றங்களோ, கருத்துக்களோ வந்துவிட கூடாது என்று அந்தந்த நாடுகளில் கல்வி துறையை பெரும் நிதி செலவில் கண்காணிக்கிறது மேற்குலக அரசியல்.

கட்டுபடுத்த முடியாத மணித சிந்தனையை ஒரு வரைமுறை படுத்தி எந்த ஒரு புரட்சிகர சிந்தனைகள், முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு எதிராக ஒரு ஆய்வும் வந்து விடாமல் பல்கலைக்கழங்களை கட்டுபடுத்துகின்றது அந்தந் நாட்டு கல்வி துறை, இவை மேற்கின் செயல் திட்டத்தை நிறைவேற்றுகிறது.


வரலாற்றில் புரட்சிகரமான மாற்றங்கள் விதைத்த புரட்சியாளர்கள்; தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், அல்லாமா இக்பால், காயிதே மில்லத், எம்.சி. சித்திலெப்பை, ஜமாலுத்தீன் அல்- ஆஃப்கானி, ஷாஹ் வலியுல்லாஹ், அப்துல் கலாம், இது போன்ற பல சமூக புரட்சியாளர்கள்... தற்போதைய பல்கலைக்கழக விதிகளின் படி இவர்கள் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டிருந்தால் இவர்கள் நிலை எப்படியிருந்திற்க்கும், நாம் சற்று ஆழமாக சிந்திக்க வேண்டும், சிந்தனையும், ஆய்வும், சமூகத்தின் வளமாகும், இது சமூகத்தின் உயிரோட்டம். மனித சிந்தனை ஆற்றலில் மேற்கத்தியமும் முதலாளித்துவம் எப்படி எல்லாம் செயல்படுகின்றன.

வெறுமனே ஆய்வு (PhD) படிப்பை மேற்கொள்வது முக்கியம் அல்ல, இந்த சமூகம் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு எத்தகைய தீர்வை அளிப்பது என்பதான் முக்கியம்.

Wednesday, 16 October 2019

ஆற்றங்கரை:




ஆற்றங்கரையில் தான் நாகரிகம் பிறந்தது, அந்த ஆற்றங்கரைகளில் தான் உழவுப் பண்பாடு படைக்கப்பட்டது, அங்கு வோளாண்மை வளர்ச்சி பெற்றது. அங்கு ஆற்று நீர் கிடைக்கும் வரைதான் வேளாண்மை தொடரும், அந்த வோளண்மை தொடரும் வரைதான் அங்கு வாழும் இனம் அந்த மண்ணில் நிலையான வாழ்வை தொடரும், ஒரு இனம் ஒர் இடத்தில் நிலைபெற்று வாழும் போதுதான் தனக்கான தற்சார்பு வாழ்வியலை நிறுவுகிறது, பொருளியலை பெருக்குகின்றது, அதன் சூழலில் தன் பண்பாட்டை நிறுவுகிறது, அப்போது தான் அதன் கலாச்சாரமும், மொழியும் செழிக்கின்றன, அதன் தொடர்ச்சியாக அவ் இனம் வரலாறு படைக்கின்றது.

 


ஆனால் அங்கு ஆற்று நீர் அவ்விடத்திலிருந்து பறிக்கப்படும் போது, அல்லது நீர் நிலை குறையும் போது அந்த வரலாற்று படைத்து செழித்து வாழ்ந்த இனம் அங்கு வாழ வழியில்லாமல், அவ்விடத்திலிருந்து புலம்பெயர்ந்து செல்கிறது அதன் வாழ்வுக்காக. நீரற்றுப் போவது நிலையான வாழ்க்கைக்கு மிக அச்சுறுத்தலை தருகின்றது.

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு”


ஒர் இனம் தன் தாயகத்தில் நிலைத்து வாழும் போது தான் அதன் இன அடையாளத்தையும் பண்பாட்டையும் அதன் மொழியையும் காக்க முடியும். புலம்பெயர்ந்து சென்றால், பண்பாட்டை இழக்க நேரிடும், அதன் மொழி காணாமல் போகும், அந்த இன அடையாளம் அழிந்து போகும். அதன் வரலாறும் மறந்து போகும்.


இவைதான் இங்கு; தமிழகத்தில் காவேரிபடுகையில் ஆற்று நீர் உள்ளவரைதான் வேளாண் செழிக்கும், அதன் உழவு தொழில் தொடரும் வரைதான், அந்த இனம் தன் வாழ்விடத்தை விட்டு புலம்பெயராது, பண்பாடு சிதையாது, கலாச்சாரம் காக்கப்படும், அதன் சொந்த மண்னை விட்டு வெளியேறாத வரை அதன் அடையாளங்கள் காக்கப்படும், அதன் மொழியும், வரலாறும் அழியாது.




ஆனால் இங்கு காவிரி நீரை தர மறுப்பதும், காவேரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் 48 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட இரண்டு அணைகளைக் கட்ட இருக்கும் கர்நாடக அரசின் முயற்சிகளை மறைமுகமாக ஊக்குவிக்கிறது இந்திய அரசு, மேலும் காவேரிபடுகை முழுவதும் மீத்தேன், ஷேல் மீத்தேன், நிலக்கரி எடுப்பது என பல மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்தி, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரிப்படுகையை சுவடு தெரியாமல் அழித்தொழிப்பதே, இந்தியாவை ஆளும் பார்பாணிய பணியா முதலாளித்துவ அரசின் நோக்கம்.


இங்கு தான் நாம் நம் அரசியலை முன்னெடுக்க வேண்டும், ஓரு நுட்பமான புரிதல் வேண்டும், தமிழக மக்களைப் பிரித்திட சாதிகளும், மதங்களும், இவற்றோடு இணைத்து அரசியல் கட்சிகள் இருக்கின்றன. இவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த மண்ணின் மக்கள் என்ற உணர்வோடு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும், இல்லையென்றால், பன்னாட்டு பெறும் முதலாளிக்கு ஏலம் விட்டு விடுவார்கள் காவரிபடுகை முழுவதும். நாளை சுதந்திரமாக காவிரிபடுகையில் உழுதுண்டு வாழ்வோமா? அல்லது புலம்பெயர்து செல்வோமா!! காலம் தான் பதில் சொல்லும்...

Monday, 7 October 2019

குருவிக் கூடு:-


ஒர் அடர்ந்த காடு; அக்காட்டில் ஏராளமான விலங்குகள், பறவைகள், ஒரு மரத்தில் ஒரு சின்னஞ்சிறு குருவி, அழகான கூடு ஒன்றை சொந்தமாகக் கட்டிக்கொண்டு சுதந்திரமாக வாழ்கிறது, எங்கிருந்தோ ஒருவன் வருகிறான். அடுத்து, அவனுக்குச் சொந்தக்காரர்கள் சிலர் வருகிறார்கள், மகிழ்ச்சியக அங்கேயே உணவு சமைத்து சாப்பிட முடிவெடுக்கிறார்கள். ஓடிக்கொண்டிருந்த மானை அடித்துத் தூக்கிக் கொண்டு வருகிறான்.

அதை வேகவைக்க, சுள்ளிகளில் நெருப்புப் பற்ற வைப்பது சிரம்மாக இருக்கிறது, அவன் கண்ணில் குருவிக்கூடு படுகிறது, குருவிக்கூடு மென்மையான நார்களாலானது, அதை எடுத்துத் தீப்பற்ற வைத்ததும் உடனே பற்றிக் கொண்டது. மான் இறைச்சியைக் சுட்டு விருந்தாக்கி வயிறு புடைக்க உண்டார்கள்.

பின்னர், அதே பாதை வழியே தொடர்ந்தார்கள், குருவிக்கு இப்போது கூடு யில்லை, சாம்பலாகிக் கிடக்கும் கூட்டில் இனி வாழ முடியாது, காட்டில் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது.

அதுபோல்; எங்கிருந்தோ வருகிறார்கள், ' இலாப வெறியோடு' தமிழகத்தில் தொழிற்சாலைகளை நிறுவுகிறார்கள். அதற்கு எரிபொருள் தேவை, காவிரிப்படுகை, காரைக்குடி, இராமநாதபுரம் பகுதிகளைப் பிளந்து, எண்ணெய்-எரிவாயு- நிலக்கரியை எடுத்து எரியூட்டுகிறார்கள், வேட்டைக்காரன் குருவிக்கூட்டை எடுத்து நெருப்புப் பற்ற வைத்தது போல, காவிரி படுகை நன்றாக பற்றி எரிகிறது. தொழிற்சாலைகள் நடக்கின்றது.

குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் போய்விடுவார்கள், கூடு இழந்த குருவி போல, வாழ்விடம் இழந்த தமிழ் மக்கள்! கூட்டை இழந்த குருவி இன்னொரு கூடு கட்டிக்கொள்ள முடியும். ஆனால் தமிழர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை. இழந்தால் இழந்நதுதான்...

- மீத்தேன் அகதிகள்-

Saturday, 6 April 2019

ஹிரா முதல் இஸ்தான்பூல் வரை



இயக்கங்களே, சமூகமோ
உனது பெருமைகளை
நீ கொண்டபோதும்; அது
உன் சமய விழுமியங்களை
நீ விலகியதன் மூலம்
நேரான பாதையை நீ
தவற விட்டுவிட்டாய்;

இவ்வுலாக கலாச்சாரத்தில்
மூழ்கியது சமூகம்;
இயக்க தலைமையோ பதவி
மோகத்தில்!! தனது இயக்கங்களுக்குள்
எதிர் அணியாக!!, நமக்கு
எதிராக அணி உண்டு
என்று மறந்த நிலையில்;


இவ்வுலகில் பெரும் பண்பாட்டை
கட்டியெழுப்பிய சமூகம்
நாகரீகத்தின் உச்சநிலையில்;
ஆனால் இன்று பிறர்
சிந்தனையின் அடிமைகளாய்,

ஹிரா குகை முதல்
இஸ்தான்புல் வரை ஒர்
தூது சாம்ராஜ்ஜியத்தை
கட்டியெழுப்பிய சமூகம்;

இன்று அதன் வரலாற்றை
மறந்து, வாழ்வியலை
தொலைத்து, பண்பாட்டை விற்று,
அரசியலை அடகு வைத்து,
தற்சார்பு வாழ்வியலை மறந்து;
மற்றொரு கலாச்சாரத்தை
கடன் வாங்கி பயணிக்கிறது இச் சமூகம்.

Tuesday, 26 March 2019

இயக்கமும் உலமாக்களும்:-



இந்திய தேசத்தில் இஸ்லாமியர்கள் சிறுக சிறுக தன் உரிமையை இழந்துவிடுமோ என்ற அபாயம் காத்திருக்கிறது என்று கூறினால்  முஸ்லிம்கள் நம்பமாட்டார்கள், மற்றவர்களும் நம்ப மறுப்பார்கள், ஆனால் எதார்த்தம் என்ன என்று புரிந்து கொள்ள வேண்டும். அரசியல், அதிகாரம், பொருளாதாரம், கல்வி, மார்க்க விடயங்கள் என்ற பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கும் இஸ்லாமிய சமூகம் ஒவ்வொரு துறையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிக் கொண்டு இருக்கிறது, சமூகம் இவைகளுக்கு எவ்வாறு எதிர்கொள்வது ஒரு அதிகாரமிக்க சமூகமாக மாறுவது எவ்வாறு, ஆனால் பெரும்பான்மையான சமூகத்தினர் பார்வையாளர்களாக இருந்தால், வாழ்விடத்தை இழந்து அகதிகளாக வெளியேறும் அவல நிலைக்கு தள்ளப்படுவோம். பேரழிவு, இயற்கை இடர்பாடு காலங்களில் தன் எழுச்சியாக முன்வந்து உதவும் ஒரு சமூகம், தேர்தல் காலங்களில் ஏன் தனது பிரதிநிதியை தேர்தெடுக்க பொருளாதார ரீதியாக உதவி செய்ய முன்வரவில்லை; இந்த சமகாலத்தில் இச் சமூகம் எதிர்கொள்ளும் அரசியல் மற்றும் சமூக வாழ்வியல் ரீதியான பிரச்சினைகள் நாள் தோறும் அதிகரித்து கொண்டு செல்கின்றன. இவைகளை எப்படி அனுகுவது, இவைகளுக்கான தீர்வு வழங்குவதில் சமூகத்தில் உள்ள அறிவுஜீவிகளின் கடமை; அவர்களை அடையாளம் காண்பது இச் சமூகத்தின் கடமை.

சமூகத்தின் தலைவிதிகளுக்கு முகம் கொடுக்கும்போது சமூகமோ தனிமனிதனோ தமக்குரிய பொறுப்புகளிலிருந்து தப்பித்து கொள்ள முடியாது” - அலிஷரீஅத்தி.

இங்கு சமூகம் கொள்கை ரீதியாகப் பிளவுவதை இஸ்லாம் ஆதரிக்கவில்லை; இஸ்லாமிய சிந்தனை மனிதனைப் பிரிவுகளற்ற ஐக்கியத்திற்குத் தயார்படுத்துகிறது. ஆனால் வாழ்வாதார பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நாம் ஜனநாயக நாட்டின் பொது தேர்தல் காலங்களில் கூட ஒர் அணியில் நிர்க்க மறுக்கிறோம் ஆனால் பல பிரிவாக இருக்கும் எதிரிகள் ஒரு அணியில் நின்று நம்மை தனிமைபடுத்துகின்றனர் பொது சமூகத்திலிருந்து.


இஸ்லாமிய இயக்கங்கள் ஒவ்வொன்றும் ஒரு தனி உலகைப் படைத்துக் கொண்டு சமூக பொது நடவடிக்கைகளை தனி தனியாக இயங்குவது முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் ரீதியான பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். முதலில் இயக்கங்கள் கொள்கைகாக தொடங்கி பின்னார் அது அதன் தலைமையின் தனிப்பட்ட சிந்தனையில் செயல்படுகின்றன; இங்கு சமூக சிந்தனையும் இல்லை ஒரு வெங்காயமும் மில்லை இது தான் இன்றைய இஸ்லாமிய அமைப்பின் நிலை.


வரலாற்றில்; அன்று இந்திய விடுதலைப் போரில் பெரும் பங்கு ஆற்றிய உலமாக்கள்; அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது, உலமாக்கள் பள்ளிவாசல்களை வெள்ளையனுக்கு எதிராகப் பயன்படுத்திய வரலாறு உண்டு; ஆனால் இன்று அரசியலில் தலைமையற்றவர்களாக இச் சமூகம். வெள்ளிக் கிழமை ஜீம்மா மேடைகள்  எல்லாம் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டன, ஜீம்மா மேடைகளில் உரமேற்றியதின் விளைவு இச் சமுதாயம் முழுமையாக ஆங்கிலேயரை எதிர்த்துப் போரடியது; ஆங்கிலேயரின் உடை, கலாச்சாரம், மொழி போன்றவை ஹராம் என பத்துவாக்கள் அளித்தனர் அந்த உலமாக்கள் வீரமிக்கு விளங்கினார்கள்.


ஆனால் இன்று உலமாக்கள் அரசியல்படுத்த படவில்லை, சமூகம் சார்ந்த விடயங்கள் பேசும் பொருளாக இல்லை மார்க விடங்கள் மட்டுமே அதிகமாக பகிரப்படுகின்றன. இதில் இன்றைய அரசியல் பற்றிய விடயங்கள் மிக குறைவு ஜீம்மா மேடைகளில், இது இப்போதைய இஸ்லாமிய கல்வி நிலையங்களில் விளைவு, மார்க கல்வி, உலக கல்வி என்று பிரிந்ததால் அதன் இந்த விளைவுகளை நாம் கண்கூடாக பார்க்கின்றோம், இவைகளில் மாற்றம் ஏற்பட அன்று விடுதலை போரில் சமூகத்தை பெறும் பங்காற்ற வைத்த உலமாக்கள் இன்று இச்சமூகத்தினரை முழுமையாக அரசியல்படுத்த படவேண்டும். சமூகம் அரசியல் விழிப்புணர்வு பெற்றால் நமது தலைமை தன்னால் மாறும், கடந்த எழுபது ஆண்டுகளா சுதந்திர வரலாற்றில் நமக்கான தலமையை தேர்தெடுக்கப்படாமல்,  நமக்கு திணிக்கப்பட்ட  தலைமையில் தான் உள்ளோம். இவைகள் மாற அரசியல் விழிப்புணர்வு பெற்ற சமூகமாக மாறுவோம்.


 எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை" (குர்ஆன்:13:11)

Thursday, 14 March 2019

சமூக சிந்தனைக் களம்



Think Tank / சமூக சிந்தனைக் களம்
இன்றைய செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) உலகில் அனைத்து துறையிலும் அந்தந்த துறையின் வளர்ச்சிக்கு மற்றும் வளர்ச்சியை நிலைநாட்ட,வரும் சவால்களை எதிர்கொள்ள இவ் உலகில் அடுத்து, அடுத்து வரும் தேவை என்ன என்று தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு கொண்டுடிருக்கின்றது ஒவ்வொரு நிறுவனமும், அப்போது தான் தனது  எதிர்காலத்தை நிர்னைக்க முடியும் எதிர்கொள்ள முடியும் போட்டி நிறைந்த இவ்வுலகில் எதிர்ந்து செல்ல முடியும் அதனால் தான் ஆராய்ச்சியும் அபிவிருத்தியும் முக்கியதுவம் பெருகின்றது.

 இது போல் ஒரு சிறந்த சித்தந்தத்தை தொடர் உயிரோட்டமுள்ள ஆய்வுகளினாலேயே  அதை வழிநடத்தினாலே வெற்றி  பெற முடியும். இல்லையெனில் அது ஒரு கோட்பாடக  தான் இருக்கும் நடைமுறையில் பயன்பாட்டில் இருக்காது.

உலகில் உள்ள ஒவ்வொரு கோட்பாடுகளும் அதனை நிலை நாட்ட அதை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல அது  அனுதினமும் அதை முன்னெடுப்பவர்கள் உயிரோட்டமுள்ள ஆராய்ச்சிலும் அடுத்து நகர்வு என்ன என்று அதை பின்பற்றுவர்களுக்கு கொடுத்து கொண்டு இருக்கிறார்கள், வாழ்வியலிம்;  கல்வியிலும் அதற்க்கு மேல் அதன் அரசியில் அதிகவனம்          இச் சமூகத்தை எப்படி வழிநடந்துவது எந்த தலைமையில் செல்ல வேண்டும் ஒவ்வொரு நகர்வுகளையும் அந்த சித்தந்தத்தை வழிநடத்துவார்கள் மிக நீண்ட தொலைநோக்கு ஆய்வு திட்டத்தில் ஈடுபட்டுகொண்டுயிருக்கிறார்கள் அதை அம் மக்களுக்கு எப்படி அதை எடுத்து செல்வது என்று ஒரு விளக்கங்களும் அவ்வப்போது செய்து கொண்டிருக்கின்றனர் அதனால் தான் அந்த சித்தாந்தம் இவ்வுலகை ஆழுகின்றது, இவ் உலகின் ஆதிக்கம் செலுத்துகின்றது.

எந்த ஒரு தேசத்திற்கும் அதன் சீரழிவு அதன் மெய்யியல் வீழ்ச்சியிலிருந்துதான் தோற்றம் பொறுகிறது. அதன் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஏனைய அறிவியல்களுக்கும் கல்வித்துறைக்கும் அச்சீரழிவு பரவுகிறது’’- (Al Alfghani )

நாம் இங்கு ஒரு சிந்தனை களத்தை கட்டமைக்க வேண்டும் இது இலாப- நோக்கற்ற அமைப்பாக முழுமையாக சமூக சிந்தனை மற்றும் சமூகம் சார்ந்த அனைத்து விடயங்களையும் பற்றிய ஒரு நீண்ட ஆய்வு, ஒரு தொலைநோக்கு பார்வையில் அமையவேண்டும். ஆளும் அரசின் கொள்கை, புதிய புதிய சட்டங்கள் இவைகளை நாம் எவ்வாறு எதிர்கொள்வது இவைகளை பற்றிய நீண்ட ஆய்வை நாம் தொடர்ந்து செயல்படுத்தபட வேண்டும். மேலும் உணவுமுறை, இன்றை நவீன மருத்துவம், வேளாண்மை, தொழில்நுட்பம், நமது இன்றைய கல்வி நிலை, பொருளாதாரம், இயற்கை வளம், நமது வாக்கு வங்கி அரசியல், வரலாறு, பண்பாடு, கலாச்சாரம், தியாகங்கள், இவைகளை பற்றிய தொடர் நீண்ட ஆய்வுகளை செய்து தற்போதைய இஸ்லாமிய சமூகத்தை வழிநடத்தும் அரசியல் தலைமைக்கும், உலமாக்களுக்கும் ஆய்வு அறிக்கைகளை கொடுத்து கொண்டு இருக்க வேண்டும்.


அதன்படி நடைமுறை படுத்த பரிந்துறைக்க வேண்டும், சமூதாயத்தை மேலும் அரசியல்மயமாக்கப்பட வேண்டும், அனைத்து நிலைகளிலும் நமது தலைமையின் அரசியல் மற்றும் இதர நடவடிக்கைகள் என்ன என்று தெளிவாக விளங்க வேண்டும். இதை நாம் செம்மையாக நடைமுறை படுத்தினால், சமூகத்தை அரசியல்படுத்தினால் நமது தலைமைகள் சிறந்த வழியில் நம்மை வழிநடத்துவார்கள், இங்கு ஒரு சீட்டுக்கும் இரண்டு சீட்டுக்கும் அரசியல் அனாதையாக நிர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

"ஆரம்பகால (ஆதி) முஸ்லிம்களிடம் அறிவியல் இருக்கவில்லை. ஆனால் மெய்யியல் மீதான ஆவல் அவர்களிடம் வளர்ச்சி பெற்றதற்கு இஸ்லாத்திற்குத் தான் நாம் நன்றி கூற வேண்டும். அதன் காரணமாக உலகின் பொது நடவடிக்கைகளையும் மனிதர்களுக்கான அவசியத் தன்மைகளையும் அவர்கள் ஆராயத் தொடங்கினர்."- ஆஃப்கானி


இதன் விளைவாக, 8ஆம் நூற்றாண்டைத் தொடர்ந்து சுமார் 400 வருட காலம் அறிவியலும் அதன் வளர்ச்சியும் மற்றும், உலக அரசியல் முஸ்லிம்களின் கைகளில் இருந்தது. சிந்தனையும் கருத்துக்களும் அடிப்படையில் ஒரு தனி மனிதனே சமூகமோ அடையும் வெற்றியே அரசியல், பொருளியல் துறைகளில் அதன் வெற்றிகளுக்குக் காரணமாக அமைகிறது. சிந்தனையும் ஆய்வும் வாழ்வின் முக்கிய வளமாகும் ஒரு சமூகத்தின் உயிரோட்டம். ஒரு நல்ல சிந்தனை ஆய்வு களத்தை உருவாக்குவோம் எதிர்க்காலத்தை நம் வசப்படுத்துவோம்