இயக்கங்களே, சமூகமோ
உனது பெருமைகளை
நீ கொண்டபோதும்; அது
உன் சமய விழுமியங்களை
நீ விலகியதன் மூலம்
நேரான பாதையை நீ
தவற விட்டுவிட்டாய்;
இவ்வுலாக
கலாச்சாரத்தில்
மூழ்கியது சமூகம்;
இயக்க தலைமையோ
பதவி
மோகத்தில்!! தனது இயக்கங்களுக்குள்
எதிர் அணியாக!!,
நமக்கு
எதிராக அணி உண்டு
என்று மறந்த
நிலையில்;
இவ்வுலகில்
பெரும் பண்பாட்டை
கட்டியெழுப்பிய
சமூகம்
நாகரீகத்தின்
உச்சநிலையில்;
ஆனால் இன்று
பிறர்
சிந்தனையின்
அடிமைகளாய்,
ஹிரா குகை முதல்
இஸ்தான்புல் வரை
ஒர்
தூது
சாம்ராஜ்ஜியத்தை
கட்டியெழுப்பிய சமூகம்;
இன்று அதன்
வரலாற்றை
மறந்து, வாழ்வியலை
தொலைத்து, பண்பாட்டை விற்று,
அரசியலை அடகு
வைத்து,
தற்சார்பு
வாழ்வியலை மறந்து;
மற்றொரு
கலாச்சாரத்தை
கடன் வாங்கி
பயணிக்கிறது இச் சமூகம்.
No comments:
Post a Comment