Tuesday, 26 March 2019

இயக்கமும் உலமாக்களும்:-



இந்திய தேசத்தில் இஸ்லாமியர்கள் சிறுக சிறுக தன் உரிமையை இழந்துவிடுமோ என்ற அபாயம் காத்திருக்கிறது என்று கூறினால்  முஸ்லிம்கள் நம்பமாட்டார்கள், மற்றவர்களும் நம்ப மறுப்பார்கள், ஆனால் எதார்த்தம் என்ன என்று புரிந்து கொள்ள வேண்டும். அரசியல், அதிகாரம், பொருளாதாரம், கல்வி, மார்க்க விடயங்கள் என்ற பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கும் இஸ்லாமிய சமூகம் ஒவ்வொரு துறையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிக் கொண்டு இருக்கிறது, சமூகம் இவைகளுக்கு எவ்வாறு எதிர்கொள்வது ஒரு அதிகாரமிக்க சமூகமாக மாறுவது எவ்வாறு, ஆனால் பெரும்பான்மையான சமூகத்தினர் பார்வையாளர்களாக இருந்தால், வாழ்விடத்தை இழந்து அகதிகளாக வெளியேறும் அவல நிலைக்கு தள்ளப்படுவோம். பேரழிவு, இயற்கை இடர்பாடு காலங்களில் தன் எழுச்சியாக முன்வந்து உதவும் ஒரு சமூகம், தேர்தல் காலங்களில் ஏன் தனது பிரதிநிதியை தேர்தெடுக்க பொருளாதார ரீதியாக உதவி செய்ய முன்வரவில்லை; இந்த சமகாலத்தில் இச் சமூகம் எதிர்கொள்ளும் அரசியல் மற்றும் சமூக வாழ்வியல் ரீதியான பிரச்சினைகள் நாள் தோறும் அதிகரித்து கொண்டு செல்கின்றன. இவைகளை எப்படி அனுகுவது, இவைகளுக்கான தீர்வு வழங்குவதில் சமூகத்தில் உள்ள அறிவுஜீவிகளின் கடமை; அவர்களை அடையாளம் காண்பது இச் சமூகத்தின் கடமை.

சமூகத்தின் தலைவிதிகளுக்கு முகம் கொடுக்கும்போது சமூகமோ தனிமனிதனோ தமக்குரிய பொறுப்புகளிலிருந்து தப்பித்து கொள்ள முடியாது” - அலிஷரீஅத்தி.

இங்கு சமூகம் கொள்கை ரீதியாகப் பிளவுவதை இஸ்லாம் ஆதரிக்கவில்லை; இஸ்லாமிய சிந்தனை மனிதனைப் பிரிவுகளற்ற ஐக்கியத்திற்குத் தயார்படுத்துகிறது. ஆனால் வாழ்வாதார பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நாம் ஜனநாயக நாட்டின் பொது தேர்தல் காலங்களில் கூட ஒர் அணியில் நிர்க்க மறுக்கிறோம் ஆனால் பல பிரிவாக இருக்கும் எதிரிகள் ஒரு அணியில் நின்று நம்மை தனிமைபடுத்துகின்றனர் பொது சமூகத்திலிருந்து.


இஸ்லாமிய இயக்கங்கள் ஒவ்வொன்றும் ஒரு தனி உலகைப் படைத்துக் கொண்டு சமூக பொது நடவடிக்கைகளை தனி தனியாக இயங்குவது முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் ரீதியான பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். முதலில் இயக்கங்கள் கொள்கைகாக தொடங்கி பின்னார் அது அதன் தலைமையின் தனிப்பட்ட சிந்தனையில் செயல்படுகின்றன; இங்கு சமூக சிந்தனையும் இல்லை ஒரு வெங்காயமும் மில்லை இது தான் இன்றைய இஸ்லாமிய அமைப்பின் நிலை.


வரலாற்றில்; அன்று இந்திய விடுதலைப் போரில் பெரும் பங்கு ஆற்றிய உலமாக்கள்; அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது, உலமாக்கள் பள்ளிவாசல்களை வெள்ளையனுக்கு எதிராகப் பயன்படுத்திய வரலாறு உண்டு; ஆனால் இன்று அரசியலில் தலைமையற்றவர்களாக இச் சமூகம். வெள்ளிக் கிழமை ஜீம்மா மேடைகள்  எல்லாம் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டன, ஜீம்மா மேடைகளில் உரமேற்றியதின் விளைவு இச் சமுதாயம் முழுமையாக ஆங்கிலேயரை எதிர்த்துப் போரடியது; ஆங்கிலேயரின் உடை, கலாச்சாரம், மொழி போன்றவை ஹராம் என பத்துவாக்கள் அளித்தனர் அந்த உலமாக்கள் வீரமிக்கு விளங்கினார்கள்.


ஆனால் இன்று உலமாக்கள் அரசியல்படுத்த படவில்லை, சமூகம் சார்ந்த விடயங்கள் பேசும் பொருளாக இல்லை மார்க விடங்கள் மட்டுமே அதிகமாக பகிரப்படுகின்றன. இதில் இன்றைய அரசியல் பற்றிய விடயங்கள் மிக குறைவு ஜீம்மா மேடைகளில், இது இப்போதைய இஸ்லாமிய கல்வி நிலையங்களில் விளைவு, மார்க கல்வி, உலக கல்வி என்று பிரிந்ததால் அதன் இந்த விளைவுகளை நாம் கண்கூடாக பார்க்கின்றோம், இவைகளில் மாற்றம் ஏற்பட அன்று விடுதலை போரில் சமூகத்தை பெறும் பங்காற்ற வைத்த உலமாக்கள் இன்று இச்சமூகத்தினரை முழுமையாக அரசியல்படுத்த படவேண்டும். சமூகம் அரசியல் விழிப்புணர்வு பெற்றால் நமது தலைமை தன்னால் மாறும், கடந்த எழுபது ஆண்டுகளா சுதந்திர வரலாற்றில் நமக்கான தலமையை தேர்தெடுக்கப்படாமல்,  நமக்கு திணிக்கப்பட்ட  தலைமையில் தான் உள்ளோம். இவைகள் மாற அரசியல் விழிப்புணர்வு பெற்ற சமூகமாக மாறுவோம்.


 எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை" (குர்ஆன்:13:11)

Thursday, 14 March 2019

சமூக சிந்தனைக் களம்



Think Tank / சமூக சிந்தனைக் களம்
இன்றைய செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) உலகில் அனைத்து துறையிலும் அந்தந்த துறையின் வளர்ச்சிக்கு மற்றும் வளர்ச்சியை நிலைநாட்ட,வரும் சவால்களை எதிர்கொள்ள இவ் உலகில் அடுத்து, அடுத்து வரும் தேவை என்ன என்று தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு கொண்டுடிருக்கின்றது ஒவ்வொரு நிறுவனமும், அப்போது தான் தனது  எதிர்காலத்தை நிர்னைக்க முடியும் எதிர்கொள்ள முடியும் போட்டி நிறைந்த இவ்வுலகில் எதிர்ந்து செல்ல முடியும் அதனால் தான் ஆராய்ச்சியும் அபிவிருத்தியும் முக்கியதுவம் பெருகின்றது.

 இது போல் ஒரு சிறந்த சித்தந்தத்தை தொடர் உயிரோட்டமுள்ள ஆய்வுகளினாலேயே  அதை வழிநடத்தினாலே வெற்றி  பெற முடியும். இல்லையெனில் அது ஒரு கோட்பாடக  தான் இருக்கும் நடைமுறையில் பயன்பாட்டில் இருக்காது.

உலகில் உள்ள ஒவ்வொரு கோட்பாடுகளும் அதனை நிலை நாட்ட அதை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல அது  அனுதினமும் அதை முன்னெடுப்பவர்கள் உயிரோட்டமுள்ள ஆராய்ச்சிலும் அடுத்து நகர்வு என்ன என்று அதை பின்பற்றுவர்களுக்கு கொடுத்து கொண்டு இருக்கிறார்கள், வாழ்வியலிம்;  கல்வியிலும் அதற்க்கு மேல் அதன் அரசியில் அதிகவனம்          இச் சமூகத்தை எப்படி வழிநடந்துவது எந்த தலைமையில் செல்ல வேண்டும் ஒவ்வொரு நகர்வுகளையும் அந்த சித்தந்தத்தை வழிநடத்துவார்கள் மிக நீண்ட தொலைநோக்கு ஆய்வு திட்டத்தில் ஈடுபட்டுகொண்டுயிருக்கிறார்கள் அதை அம் மக்களுக்கு எப்படி அதை எடுத்து செல்வது என்று ஒரு விளக்கங்களும் அவ்வப்போது செய்து கொண்டிருக்கின்றனர் அதனால் தான் அந்த சித்தாந்தம் இவ்வுலகை ஆழுகின்றது, இவ் உலகின் ஆதிக்கம் செலுத்துகின்றது.

எந்த ஒரு தேசத்திற்கும் அதன் சீரழிவு அதன் மெய்யியல் வீழ்ச்சியிலிருந்துதான் தோற்றம் பொறுகிறது. அதன் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஏனைய அறிவியல்களுக்கும் கல்வித்துறைக்கும் அச்சீரழிவு பரவுகிறது’’- (Al Alfghani )

நாம் இங்கு ஒரு சிந்தனை களத்தை கட்டமைக்க வேண்டும் இது இலாப- நோக்கற்ற அமைப்பாக முழுமையாக சமூக சிந்தனை மற்றும் சமூகம் சார்ந்த அனைத்து விடயங்களையும் பற்றிய ஒரு நீண்ட ஆய்வு, ஒரு தொலைநோக்கு பார்வையில் அமையவேண்டும். ஆளும் அரசின் கொள்கை, புதிய புதிய சட்டங்கள் இவைகளை நாம் எவ்வாறு எதிர்கொள்வது இவைகளை பற்றிய நீண்ட ஆய்வை நாம் தொடர்ந்து செயல்படுத்தபட வேண்டும். மேலும் உணவுமுறை, இன்றை நவீன மருத்துவம், வேளாண்மை, தொழில்நுட்பம், நமது இன்றைய கல்வி நிலை, பொருளாதாரம், இயற்கை வளம், நமது வாக்கு வங்கி அரசியல், வரலாறு, பண்பாடு, கலாச்சாரம், தியாகங்கள், இவைகளை பற்றிய தொடர் நீண்ட ஆய்வுகளை செய்து தற்போதைய இஸ்லாமிய சமூகத்தை வழிநடத்தும் அரசியல் தலைமைக்கும், உலமாக்களுக்கும் ஆய்வு அறிக்கைகளை கொடுத்து கொண்டு இருக்க வேண்டும்.


அதன்படி நடைமுறை படுத்த பரிந்துறைக்க வேண்டும், சமூதாயத்தை மேலும் அரசியல்மயமாக்கப்பட வேண்டும், அனைத்து நிலைகளிலும் நமது தலைமையின் அரசியல் மற்றும் இதர நடவடிக்கைகள் என்ன என்று தெளிவாக விளங்க வேண்டும். இதை நாம் செம்மையாக நடைமுறை படுத்தினால், சமூகத்தை அரசியல்படுத்தினால் நமது தலைமைகள் சிறந்த வழியில் நம்மை வழிநடத்துவார்கள், இங்கு ஒரு சீட்டுக்கும் இரண்டு சீட்டுக்கும் அரசியல் அனாதையாக நிர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

"ஆரம்பகால (ஆதி) முஸ்லிம்களிடம் அறிவியல் இருக்கவில்லை. ஆனால் மெய்யியல் மீதான ஆவல் அவர்களிடம் வளர்ச்சி பெற்றதற்கு இஸ்லாத்திற்குத் தான் நாம் நன்றி கூற வேண்டும். அதன் காரணமாக உலகின் பொது நடவடிக்கைகளையும் மனிதர்களுக்கான அவசியத் தன்மைகளையும் அவர்கள் ஆராயத் தொடங்கினர்."- ஆஃப்கானி


இதன் விளைவாக, 8ஆம் நூற்றாண்டைத் தொடர்ந்து சுமார் 400 வருட காலம் அறிவியலும் அதன் வளர்ச்சியும் மற்றும், உலக அரசியல் முஸ்லிம்களின் கைகளில் இருந்தது. சிந்தனையும் கருத்துக்களும் அடிப்படையில் ஒரு தனி மனிதனே சமூகமோ அடையும் வெற்றியே அரசியல், பொருளியல் துறைகளில் அதன் வெற்றிகளுக்குக் காரணமாக அமைகிறது. சிந்தனையும் ஆய்வும் வாழ்வின் முக்கிய வளமாகும் ஒரு சமூகத்தின் உயிரோட்டம். ஒரு நல்ல சிந்தனை ஆய்வு களத்தை உருவாக்குவோம் எதிர்க்காலத்தை நம் வசப்படுத்துவோம்

Thursday, 7 March 2019

கைமாறும் கடற்கரை




காலம் காலமாய் தற்சார்பு வாழ்வியலில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூகம் இப்போது அந்த வாழ்வியலில் இருந்து சிறுக சிறுக புலம்பெயர்ந்து தனது வாழ்வியலை விட்டு நகர்கிறது; கடலும் கடல் சார்ந்து மட்டுமே நம்பி வாழும் மீனவர்களைக் தமிழக கடற்கரையிலிருந்து அப்புறப்படுத்துகின்ற வேலையை, கச்சிதமாக செய்து வருகின்றது இந்திய அரசு.

 தமிழக கடற்கரைகலில்;, மீனவர் குடியிருப்புகளுக்கும் கடற்கரைக்கும் இடையில் சாலைகள் அமைத்து மீனவர்களைக் அப்பகுதிலிருந்து பிரிக்கிறார்கள், எப்படி பாலஸ்தீன நிலப்பரப்பில் இஸ்ரேல் பெரிய மதில் சுவர்களை எழுப்பி ஆக்ரமிப்பது போல், புறவழிச் சாலைகள் அமைத்து மீனவர்களுக்கும்  கடற்கரைக்கும் உள்ள தொடர்பை தடுத்து நிர்த்துகின்றது, இந்த கடல் பகுதிலிருந்து மீனவர்களை அப்புறப்படுத்துவது தான் இந்திய பேரரசரின் செயல் திட்டம்.

கடலை மட்டுமே நம்பி வாழும் மீனவர்களை கடற்கரையிலிருந்து அப்புறப்படுத்தும் வகையில் புதிய, புதிய, சட்டங்கள் கொண்டுவரும் இந்திய அரசு வளர்ச்சி என்ற போர்வையில் நெடு தூரம் உள்ள தமிழக கடற்கரை 1078 கி.மி முழுவதும் பன்னாட்டு பெரும் முதலாளிகளுக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட உள்ளது. இதுவரை பல மீனவ கிராமங்கள் தனது பாரம்பரிய வாழ்வியலை விட்டு வெளியேற்ற பட்டுவிட்டனர், கார்ப்பொரேட் நிறுவனத்தின் பிடிக்குள் கடற்கரை போய்கொண்டிருக்கிறது


இந்த நிலப்பரப்பில் உணவு தேவைக்கு பெரும் பங்களிப்பு செய்து வரும் மீனவர்கள், அவர்களின் வாழ்வில் புயல், சூறாவளி, ஆழிப்பேரலை, கடல் சீற்றம் இவைகளோடு மட்டுமே போராடி கொண்டிருந்த தமிழக மீனவர்கள் ஆனால் இன்று தனது தற்சார்பு வாழ்வை நிலைநாட்ட கடலையும் கடற்தொழிலையும் பாதுகாக்க இந்த அரசுக்கு எதிராக போராட வேண்டியுள்ளது.



மேலும், கடல் மாலை திட்டம் ( Sagar Mala Project) துறைமுகங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது என்ற இந்த திட்டம் அப்பகுதியில் தொழில் செய்து வரும் மீனவர்களை அப்புறப்படுத்துவது தான் முதல் பணி, இத் திட்டம் பன்னாட்டு  நிறுவனங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும், இதில் 10 வணிகத் துறைமுகங்களும், 100 க்கும் மேல் கடற்கரையில் ரிசார்ட்டுகள் என கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது, இதில் பல மின் நிலையங்கள் கடற்கரையில் வர உள்ளன.


கடற்கரைகள் முழுமையாக துறைமுகங்களின் கிழ் வசப்படுத்தப்பட்டு அவற்றின் கட்டுப்பாட்டிற்குள் வரும், மேலும் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கப்படும், இங்கு கடற்கரை கிராமங்களில் பாரம்பரியமாக வாழும் மீனவர்கள் மற்றும் விவசாயிகள் முழுமையாக இப்பகுதியை விட்டு விரடியடிக்கப்படுவார்கள். கடற்கரையும் யில்லை தற்சார்பான மீன்பிடித் தொழிலுமில்லை, இப்போது கடல் முழுவதும் பன்னாட்டு முதலாளிகளுக்குத் தேவைப்படுகிறது; கடலில் பல இடங்களில் எண்ணெய்-எரிவாயுக் குழாய் அமைக்கப்படுகிறது, அப்பகுதியை பெட்ரோலிய மண்டலமாக அறிவிக்கப்படுகிறது; மீனவர்கள் தனது மீன்பிடித் தொழிலிருந்து வெளியேற வேண்டும் அப்கடல் பகுதியை பறிமுதல் செய்ய வேண்டும், அவர்கள் கூலியாக மாற வேண்டும் என்பதற்காகவே தமிழாக கடற்பகுதியிலேயே தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை தாக்குகிறது, சித்திரவதை செய்கிறது இதுதான் இந்த அரசின் செயல் திட்டம். இந்த பேரழிவுத்திட்டத்தை  எதிர்த்திட ஒர் அணி திரள்வோம்.