Thursday, 7 March 2019

கைமாறும் கடற்கரை




காலம் காலமாய் தற்சார்பு வாழ்வியலில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூகம் இப்போது அந்த வாழ்வியலில் இருந்து சிறுக சிறுக புலம்பெயர்ந்து தனது வாழ்வியலை விட்டு நகர்கிறது; கடலும் கடல் சார்ந்து மட்டுமே நம்பி வாழும் மீனவர்களைக் தமிழக கடற்கரையிலிருந்து அப்புறப்படுத்துகின்ற வேலையை, கச்சிதமாக செய்து வருகின்றது இந்திய அரசு.

 தமிழக கடற்கரைகலில்;, மீனவர் குடியிருப்புகளுக்கும் கடற்கரைக்கும் இடையில் சாலைகள் அமைத்து மீனவர்களைக் அப்பகுதிலிருந்து பிரிக்கிறார்கள், எப்படி பாலஸ்தீன நிலப்பரப்பில் இஸ்ரேல் பெரிய மதில் சுவர்களை எழுப்பி ஆக்ரமிப்பது போல், புறவழிச் சாலைகள் அமைத்து மீனவர்களுக்கும்  கடற்கரைக்கும் உள்ள தொடர்பை தடுத்து நிர்த்துகின்றது, இந்த கடல் பகுதிலிருந்து மீனவர்களை அப்புறப்படுத்துவது தான் இந்திய பேரரசரின் செயல் திட்டம்.

கடலை மட்டுமே நம்பி வாழும் மீனவர்களை கடற்கரையிலிருந்து அப்புறப்படுத்தும் வகையில் புதிய, புதிய, சட்டங்கள் கொண்டுவரும் இந்திய அரசு வளர்ச்சி என்ற போர்வையில் நெடு தூரம் உள்ள தமிழக கடற்கரை 1078 கி.மி முழுவதும் பன்னாட்டு பெரும் முதலாளிகளுக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட உள்ளது. இதுவரை பல மீனவ கிராமங்கள் தனது பாரம்பரிய வாழ்வியலை விட்டு வெளியேற்ற பட்டுவிட்டனர், கார்ப்பொரேட் நிறுவனத்தின் பிடிக்குள் கடற்கரை போய்கொண்டிருக்கிறது


இந்த நிலப்பரப்பில் உணவு தேவைக்கு பெரும் பங்களிப்பு செய்து வரும் மீனவர்கள், அவர்களின் வாழ்வில் புயல், சூறாவளி, ஆழிப்பேரலை, கடல் சீற்றம் இவைகளோடு மட்டுமே போராடி கொண்டிருந்த தமிழக மீனவர்கள் ஆனால் இன்று தனது தற்சார்பு வாழ்வை நிலைநாட்ட கடலையும் கடற்தொழிலையும் பாதுகாக்க இந்த அரசுக்கு எதிராக போராட வேண்டியுள்ளது.



மேலும், கடல் மாலை திட்டம் ( Sagar Mala Project) துறைமுகங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது என்ற இந்த திட்டம் அப்பகுதியில் தொழில் செய்து வரும் மீனவர்களை அப்புறப்படுத்துவது தான் முதல் பணி, இத் திட்டம் பன்னாட்டு  நிறுவனங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும், இதில் 10 வணிகத் துறைமுகங்களும், 100 க்கும் மேல் கடற்கரையில் ரிசார்ட்டுகள் என கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது, இதில் பல மின் நிலையங்கள் கடற்கரையில் வர உள்ளன.


கடற்கரைகள் முழுமையாக துறைமுகங்களின் கிழ் வசப்படுத்தப்பட்டு அவற்றின் கட்டுப்பாட்டிற்குள் வரும், மேலும் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கப்படும், இங்கு கடற்கரை கிராமங்களில் பாரம்பரியமாக வாழும் மீனவர்கள் மற்றும் விவசாயிகள் முழுமையாக இப்பகுதியை விட்டு விரடியடிக்கப்படுவார்கள். கடற்கரையும் யில்லை தற்சார்பான மீன்பிடித் தொழிலுமில்லை, இப்போது கடல் முழுவதும் பன்னாட்டு முதலாளிகளுக்குத் தேவைப்படுகிறது; கடலில் பல இடங்களில் எண்ணெய்-எரிவாயுக் குழாய் அமைக்கப்படுகிறது, அப்பகுதியை பெட்ரோலிய மண்டலமாக அறிவிக்கப்படுகிறது; மீனவர்கள் தனது மீன்பிடித் தொழிலிருந்து வெளியேற வேண்டும் அப்கடல் பகுதியை பறிமுதல் செய்ய வேண்டும், அவர்கள் கூலியாக மாற வேண்டும் என்பதற்காகவே தமிழாக கடற்பகுதியிலேயே தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை தாக்குகிறது, சித்திரவதை செய்கிறது இதுதான் இந்த அரசின் செயல் திட்டம். இந்த பேரழிவுத்திட்டத்தை  எதிர்த்திட ஒர் அணி திரள்வோம்.



No comments:

Post a Comment