Thursday, 17 September 2020

Conversation with a Native Speaker from the UK

 

Conversation with a Native Speaker from the UK 

English conversation with a native speaker from the UK
practice English with me just @ Skype ID : https://join.skype.com/invite/YphtatT...

Friday, 15 May 2020

ஊரடங்கு நேரத்தில் வேட்டையாடும் அரசு



கொரோனா தொற்றால் உலகமே அச்சத்திலும் ஒரு நிச்சயமற்ற தன்மையை அனுபவித்த கொண்டு வருகிறது, நாடே இந்த தொற்றுநோய்க்கு எதிராக போராடி வருகின்ற நிலையில், இந்த ஊரடங்கு நேரத்தை   பயன்படுத்தி முஸ்லிம்களை கைது செய்து கொண்டுயிருக்கிறது இந்திய அரசு.


இந்த அசாதாரண சூழ்நிலையில் இந்த தொற்றுநோய் அதிலிருந்து உருவான பிரச்சினை, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், அவர்கள் பொது முடக்கத்தால் வீட்டிற்கு திரும்பிச் செல்ல முடியாத நிலை, பட்டினியால் வாடும் நிலை, அரசிடமிருந்து எந்த உதவியும் யில்லாதால் இறுதியில் அவர்கள் பல மணி நேரம் கால்நடையாக வீடுகளுக்கு செல்கின்றனர்,  இதை யெல்லாம் பற்றி கவலைபடாத அரசு இந்த ஊரடங்கு காலத்தை  ஈடுசெய் உற்பத்தியை பெருக்க பெரு முதலாளி பாதுகாக்க , பணி நேரத்தை  8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக மாற்ற  நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

இங்கு கொரோனாவுக்கு மத சாயம் பூசப்பட்டு மிகவும் கச்சிதமாக சங்பரிவார் அமைப்பு சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக ஒரு இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தை  முழுமையாக செயல்படுத்தியது, கொரோனா  தொற்றில் நூற்றுக்கு எண்பது சதவிகிதம் தப்லீக், இருபது சதவிகிதம் பப்ளிக் என்று தினந்தோறும் ஊடகத்தில் விஷத்தை கக்கியது, இது ஒரு இஸ்லாமோபோபியா பிரச்சாரத்தை முன்னேடுத்தது இந்தியத் துணைக்கண்டத்தில்.


மதங்களால் மக்களை பிரிக்கும் சட்டம் CAA, NRC, NPR, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற மக்கள் விரோத  சட்டத்தை  திரும்ப பெற கோரி தொடர் போராட்டத்தை முன்னின்று நடத்திய மாணவர்களை டெல்லி காவல்துறை திட்டமிட்டு கைது செய்து வருகின்றது, அதில் சமூக செயல்பாட்டாளர் ஜமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவி சஃபூரா சர்கார் (27) மூன்று மாத கர்ப்பிணி பெண் உள்ளிட்டு மாணவர்கள் பலர் ஊபா (Unlawful Activities Prevention Act) UAPA சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த  மூன்று மாத கர்ப்பிணி பெண் என்று கூட பார்க்காமல் இந்தியா அரசு கைது செய்து திகார் சிறையில் தனி அறையில் அடைத்துள்ளது   கடந்த ஏப்ரல் மாதத்தில்,  அதன் பின்னர்  கருப்பு சட்டத்தின் துனை கொண்டு ஊரடங்கு நேரத்தில் CAA எதிராக போரடியவர்களை தேடி தேடி நசுக்குகின்றது அரசு, இந்த புனித ரமழான் மாதத்தில்.

குடியுரிமைப் போராளிகள் பலரையும் பழிவாங்கும் விதமாக கைது செய்து வருகிறது மோடி தலைமையிலான அரசு, இன்றைய கொரோனா நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஊரடங்கு தடை, பொருளாதார மந்தம், பசியால் பட்னி சாவு, வாழ வழியில்லாமல் தற்கொலை, இவைகளுக்கு இடையில் இந்தத் அரசு கொடிய UAPA சட்டப் பிரிவுகளில் இரக்கமின்றி அறவழியில் போராடிய போராளிகள் மீது இந்த சட்டம் பாய்ந்துள்ளது.


ஜாமிய பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், சஃபூரா, மீரண் ஹைதர், சமூக ஆர்வலர்கள் காலித் சைஃபி, இஷ்ரத் ஜஹான் மற்றும் வடகிழக்கு டெல்லியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் இந்த கருப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு முதலில் கொரோனா ஜிகாத் என்று இழிவு படுத்தியது, பின்னர் சமூகத்தின் ஜனநாயக ரீதியாக குரல் கொடுப்பவர்களின் குரல்வளையை நசுக்குகிறது.


மேலும் சிறுபான்மை அமைப்புகளின் தேசிய ஆணையத்தின் தலைவர் சஃபருல் இஸ்லாம் கான் (National Commission for Minorities) அவர்கள் மீது டெல்லி போலீஸ் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 28 அன்று சமூக ஊடகம் ஒன்றில் சஃபருல் இஸ்லாம் கான் அவர்கள் ஒரு பதிவிட்டிருந்தார். கொரோனா தாக்குதலை ஒட்டி இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராகப் பரப்பப்படும் வெறுப்பு அரசியலைக் குவைத் கண்டித்துள்ளதற்காக அதில் அவர் அதற்கு நன்றி தெரிவித்து இருந்தார், இந்தப்பதிவிற்காகவே இப்போது அவர் மீது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  அவர் மீதான இந்த நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. இந்த உரிமை கூட ஒரு ஆணையத்தின் தலைவருக்கு இல்லை என்றால் இது என்ன ஜனநாயகமா? சர்வாதிகாரமா?

ஷாஹின்பா போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது பழிவாங்கும் நோக்கில் இந்திய அரசு கடும் சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் வழக்குகள் தொடுத்து சிறையில் அடைப்பதை ஆம்னெஸ்டி இந்தியா வன்மையாகக் கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



ஜே.என.யூ (JNU) மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தாக்கிய கோமல் ஹர்மாவை டெல்லி காவல்துறை அனைத்து ஆதாரங்களும் வீடியோ பதிவுகள் இருந்தும் இது வரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை, ஆனால் எந்த வன்முறையும் இல்லாமல் ஜனநாயக வழியில் உரிமைக்காக போராடிய  கர்ப்பிணி பெண்  சஃபூரா சர்கார்  உள்ளிட்ட ஜாமியா மாணவர்களை சட்டவிரோதமான முறையில் அரசு கைது செய்துள்ளது.


 கடந்த பிப்ரவரியில் நடந்த டெல்லி கலவரத்தில் 53 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். கொலைகாரன்கள் எந்தக் கவலையும் இல்லாமல் சுதந்திரமாக வெளியில் அந்த துப்பாக்கித்தரர்கள் அலைகின்றனர், ஆனால் அப்பாவிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இந்த தேசத்திற்கு கோட்சேவின் துப்பாக்கி தேவையில்லை, மாறாக காந்தியின் கைத்தடி தான் வேண்டும்.
--
பாஜிலா பேகம் N.M




Monday, 17 February 2020

பாசிசமும் முதலாளித்துவமும்: -


பாசிசத்தின் கோர முகத்திற்க்கு இறையாகி கொண்டிருக்கின்றது, பன்முகத்தன்மை கொண்ட இந்தியா, இது ஜெர்மனில் அமைத்த நாஜி அரசாங்கம் போல், இங்கு "இந்து, இந்தி, இந்தியா” என்ற போர்வையில் பார்ப்பனிய ராஜ்ஜியத்தை கட்டமைக்கப்படுகின்றது. அனைவருக்குமான இந்தியா என்ற நிலையை மாற்றி சொந்த நாட்டு மக்களுக்குள்ளேயே ஒர் மத மோதல்களை தீவிரப்படுத்துவதுதான் இவர்களின் தத்துவமும், செயல்திட்டமும். அரசின் கல்வி, கலாச்சார, அறிவியல், வரலாற்று ஆராய்ச்சி மையங்கள் அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்டவர்களை, அவ்வமைப்புகளின் தலைவர்களாக, இயக்குநர்களாக நியமிப்பதோடு, அந்த அமைப்புகளையே இந்துத்துவா கருத்தியல் தளங்களாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது, இந்த அரசு.

" பாசிஸ்டுகள் முன்கூட்டியே ஆயிரம் ஆண்டுகளுக்குத் திட்டம் தீட்டுகின்றனர்" என்றார் ஜெர்மானிய மார்க்ஸிய அறிஞர் வால்டெர் பெஞ்சமின், இது இப்போது இந்தியாவை ஆளும் வலதுசாரி அரசுக்கு மிக சரியாக பொருந்தும். (இந்தியா எதை நோக்கி?)

இந்திய மக்கள் எதிர்கொண்டிருக்கும் இருபெரும் சவால்கள், ஒன்று புதிய பொருளாதார கொள்கை, மற்றொன்று இந்துத்துவ பாசிசத்தின் கொடூர தாக்குதல்கள், இவை இரண்டும் பின்னி பிணைந்து பயணிக்கின்றது, இவைகள் பெரு முதலாளிகளை பாதுகாக்கிறது. இங்கு பாஜக அரசு; வளர்ச்சி, டிஜிட்டல் இந்தியா என்ற வெறும் வார்த்தை மட்டுமே, இதற்கு இடையே தீவிர பார்ப்பனிய அரசியலை அமல்படுத்துகின்றது.

பாசிசத்தின் பொருளாதாரக் கொள்கை முதலாளித்துவ அமைப்பை பாதுகாப்பதுதான். முதலாளித்துவத்தின் துனை இல்லாமல் பாசிச அரசியல் சக்திகள் அதிகாரத்தில் அமர்வதில்லை, இங்கு மார்வாடி பணியா பெரு முதலாளிக்கே இந்திய பொருளாதாரம் தாரைவாத்து கொடுக்கப்படுகின்றது, இயற்கை வளங்கள், விவசாய நிலங்கள் பிடுங்கி கொடுக்கப்படுகிறது, மீனவர்கள் கடற்கரையிலிருந்து அப்புறப்படுத்த படுகிறார்கள், கடற்கரை கைமாறுகிறது பெரு முதலாளிகளுக்கு, இதை எதிர்த்து போராடுபவர்களை தேசத் துரோகிகளாக சித்தரிக்கப் படுகின்றனர், இது தான் காவி அரசியல்.

புதிய பொருளாதார கொள்கையில்; நிலத்தின் மீதான போர் தொடுக்கப்பட்டுள்ளது, வேளாண் நிலங்களை "பெட்ரோலிய மண்டலங்களாக" அறிவித்து, வளர்ச்சி என்ற பெயரில் விளைநிலங்களை விவசாயிகளிடம் யிருந்து அபகரித்து, அவர்களை அன்றாட காய்ச்சிகளாக, நடுத்தெருவில் நிறுத்துகின்றது அரசு, பல விவசாயகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பல லட்சம் பேர் தங்களது நிலங்களை விட்டு புலம்பெயர்ந்து வாழ்வுக்காக கூலிகளாக செல்கின்றனர். ஒரே நாடு ஒரே வரி (GST) மூலம் சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர், தங்களது தொழிலிருந்து வெளியேற்றபட்டு செல்லாக்காசாக தூக்கிப்யேரியப்பட்டுள்ளனர்.

புதிய கல்விக் கொள்கை: இந்திய அரசமைப்பு சட்டம் வழங்கிய மாநில உரிமைகளை பறித்துவிட்டார்கள், மாநில அரசு அதிகாரத்திலிருந்து கல்வி இப்போது மத்திய அரசு அதிகாரத்திற்கு கிழ் கொண்டுவரப்பட்டுள்ளது, இப்போது கல்வி முற்றிலும் காவி மயமாக்கப்பட்டுள்ளது, அனைவருக்கும் தரமான இலவசக் கல்வியை அளிக்க மாறுகிறது அரசு, பல அரசு பள்ளிகள் மூடப்படுகிறது, இது தனியாருக்கு தாரைவாத்து கொடுக்கப்படுகிறது. புதிய புதிய தகுதி தேர்வு முறைகள் அறிமுக படுத்தபடுகின்றது, மருத்துவ கல்விக்கு நீட்  நுழைவுத் தேர்வு முறை, இது மேலும் அனைத்து கல்லூரிப் படிப்புகளுக்கும் நாடு முழுதும் நுழைவுத்தேர்வுக்கு வழிவகுக்கிறது இந்த புதிய கல்விக் கொள்கை. மேலும், ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு முறை. இது பள்ளி படிப்பிலிருந்து வடிகட்டவே இவர்வளின் நோக்கம். இந்த பாசிச அரசு அறிவுக்கூர்மையுள்ள மக்களை விரும்புவதில்லை, கேள்வி கேட்பவர்களையும், சிந்திக்கும் மக்களும் இவர்களுக்கு தேவையில்லை, அரசு சொல்வதை கேட்டு செயல்படும் குடிமக்களை தான் இந்த அரசு விரும்புகிறது, அதனால் தான் அவர்கள் விரும்பும் கல்விவை வழங்குகின்றது.

காஷ்மீர் திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது, அம் மாநில தன்னாட்சி அதிகாரத்தை ஒழிப்பதுதான் வலதுசாரி பரிவாரத்தின் நீண்ட நாள் செயல்திட்டம், அதை இப்போது நிறைவேற்றிவிட்டது பாஜக அரசு, இது தனது இந்து ராஜ்ஜிய கனவு, மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட கம்பெனியின் நலன்களுக்காக மாநிலத்தின் சுய ஆட்சி உரிமைகள் பறிக்கப் படுகின்றன.
ஊடகங்கள் கட்டு படுத்த படுகின்றன, இவைகள் உண்மையான செய்தியை வெளியிட மறுக்கிறது, எதைப் பேச வேண்டும், எதை பேச கூடாது, எதை விவாதிக்க வேண்டும் என்பதை பாஜக தீர்மானிக்கிறது, அதை அப்படியே ஊடகங்கள் செயல்படுகிறது.
இந்த தேசத்தில் இஸ்லாமியர்கள் மீது இந்துத்துவ பாசிச கும்பல், பசு பாதுகாப்பு படை என்று சொல்லி மாட்டுக்கறி இருந்ததாக, சாப்பிட்டதாக, என்று கூறி பல முஸ்லிம்கள் கொடுமையான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர், மேலும் இந்த குண்டர்கள் ‘’லவ் ஜிகாத், கர்வாபசி’’, என்ற பெயரில், காவி பயங்கரவாத தாக்குதல்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்படுகின்றன, அவர்களின் வாழ்வாதாரங்கள் சூறையாடப்படுகின்றன. இது இப்போது சட்டத்தின் துணைகொண்டு வலதுசாரி பாஜக அரசு நடத்த விரும்புகின்றது. அதாவது, குடியுரிமை திருத்த சட்டம் CAA (2019) தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) மூலம். இது இந்திய இறையாண்மைக்கு எதிரான சட்டம். இஸ்ரேலின் 'அலியாஹ்' “Aliyah- Law of Return” (திரும்புதல் சட்டம்) சட்டத்தின் மறு வடிவமே இது, உலகின் எப்பகுதியிலிருந்தும் வருகிற யூதர்களுக்குக் குடியுரிமை வழங்கும் இஸ்ரேலின் 'அலியாஹ்' எனப்படும் சியோனிசக் கொள்கையின் அடிப்படையில் இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

பாஜக ஆளுகிற மாநிலங்களில் இந்த சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை, காவல்துறை மூலம் கடுமையாக ஒடுக்குகிறது மாநில அரசு. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் 300 இஸ்லாமியக் குடும்பங்கள் வசித்து வந்த குடியிருப்புகளை, கர்நாடக மாநில பாஜக அரசு புல்டோசர் மூலம் இடித்து, அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது. இங்கு வசித்து வந்த இஸ்லாமியர்கள் இந்தியர்கள் அல்ல, அவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று பாஜக எம்எல்ஏ ஒருவர் கிளப்பிவிட்ட புரளியை, உண்மை என்று எடுத்துக் கொண்டு, நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை இடித்துத் தரைமட்டம் ஆக்கியுள்ளனர். வங்கதேசம் எங்கே இருக்கிறது என்று கூட தெரியாது, அந்த எளிய மக்களுக்கு, மேலும் இங்கு வசித்து வந்த இஸ்லாமியர்களை, உடனடியாக கர்நாடகாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் காவல்துறை மூலம் உத்தரவிட்டுள்ளது. அந்த மாநில பாஜக அரசு, அவர்கள் அந்த மாநிலத்தின் பூர்வகுடி மக்கள், ஆண்டாண்டு காலமாக அந்த மண்ணில் வாழ்ந்து வரும் மக்கள், அவர்கள் எங்கே போவார்கள்?  இந்த சட்டம் முற்றிலும் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களின் சொத்துக்களை முடக்கப்படுகின்றது, காவல்துறை மூலம் சூறையாடப்படுகிறது, அவர்களுக்கு எதிராக அரசு பயங்கரவாதம் நிகழ்தபடுகின்றது, சுதந்திரம் (ஆஸாதி) என முழக்கமிட்டால் தேசத் துரோக வழக்கு பாயும் என்று உத்தரப்பிரதேச மாநில பாஜக முதல்வர் யோகி ஆதித்தியநாத் மிரட்டல் விடுகிறார். இது வரை இந்த சட்டத்திற்கு எதிராக போராடிய 27 பேர் போலீஸாரின் கொடூர துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்ற ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக வளாகத்திற்குள் போலீசார் பலவந்தமாக நுழைந்து மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தினர், இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர், மிருகத்தனம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 “நாடாளுமன்ற ஜனநாயகத்தைத் தவறாகப் பயன்படுத்தி இறுதியில் அதை ஒழித்துக்கட்டினர் பாஸிஸ்டுகள்” என்கிறார் ஜெர்மானியச் சிந்தனையாளர் ஹன்னா அரெண்ட் (Hanna Arendt). இதுதான் இப்போது இந்த தேசத்தில் படிப்படியாக அறங்கேறிக்கொண்டிருக்கிறது.    வலதுசாரி அரசியலை பற்றி இவ்வாறு கூறினார் ராமச்சந்திர குஹா, இந்தியா; “1920-களின் இத்தாலியைப்போலவோ, 1950-களின் அர்ஜெண்டைனாவைப் போலவோ அதன்வழியில் சென்று, வலதுசாரிக் கட்சியால் அரசியல் ஆளப்படுவதும், அதன் தலை வராக வலதுசாரிக் கும்பல் தலைவன் தேர்வு பெறுவதும் - பொதுவிவகாரங்கள் அறிஞர்களாலும், சிந்தனையாளர்களாலும் முடிவு செய்யப்படாமல் குண்டர்களாலும், அவர்களின் வெறுப்புணர்வுகளாலும் தீர்மானிக்கப்படுவதும் நடக்கும்.” (இந்தியா எதை நோக்கி? - ராமச்சந்திர குஹா)



பாசிச அரசின் இந்த கருப்பு சட்டத்திற்கு எதிராக மக்கள் மன்றத்தில்தான் தீர்வு கிடைக்கும், நீதிமன்றங்கள் முறைகேடான தீர்ப்பே வழங்கும் இந்த ஆட்சியில், பாபர் மசூதி தீர்ப்பு ஒரு உதாரணம், சமூக-அரசியல் சார்ந்த பிரச்சினைகளை ஒருங்கிணைந்த, ஜனநாயக ரீதியான போராட்டம் மூலமே வெல்ல முடியும், ஜல்லிக்கட்டு உரிமையை வென்றெடுத்து போல், ஜனநாயக சக்திகள் ஒன்றிணைத்து, பாசிசத்தை வீழ்த்துவோம், இந்திய இறையாண்மையை பாதுகாப்போம்.


Friday, 17 January 2020

மதங்களால் மக்களை பிரிக்கும் சட்டம்.

hi


மதங்களால் மக்களை பிரிக்கும் சட்டம்: -

மதசார்பின்மை என்ற இந்திய துணைகண்டத்தை, இந்தியாவை ஆளும் மோடி அரசு டிசம்பர் 2019 ல் கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் மதச்சார்பின்மையை தகர்த்துள்ளது. இதற்கு எதிராக ஒட்டுமொத்த இந்திய துணைகண்டமே மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு கிளர்ந்தெழுந்துள்ளது.


இந்த வலதுசாரி பாஜக அரசு மீண்டும் இரண்டாவது முறையாக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்ததும், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து (370) சட்ட பிரிவு ரத்து, முத்தலாக் மசோதா, அடுத்து பாபர் மசூதி இடிப்பு வழக்கில் ஒரு மிக மோசடியான தீர்ப்பு வழங்கியது, பின்னர் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) இச் சட்டம் மூலம் இந்த தேசம் சட்டப் பூர்வமாக இந்து ராஷ்டிரமாக, ராம ராஜ்ஜியம்மாக, இந்திய அரசியல் சாசனத்திர்கு பதிலாக மனுஸ்மிருதியை அரசியல் சட்டமாக்குவதே இந்த வலதுசாரி அரசின் செயல்திட்டம்.


2014 டிசம்பர் 31-க்கு முன் இந்தியாவுக்குள் வந்துவிட்ட ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த ஹிந்துக்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிக்கள் ஆகிய ஆறு மதங்களைச் சேர்ந்த அகதிகளுக்கு மட்டும் இந்தியக் குடியுரிமை வழங்க வழிவகுக்கிறது "குடியுரிமை திருத்தச் சட்டம் 2019'. ஆனால், முஸ்லிம் அகதிகளுக்கும், இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்துள்ள ஈழத் தமிழர்கள், பூடானிலிருந்து புலம்பெயர்ந்த கிறிஸ்தவ அகதிகளுக்கும் குடியுரிமை வழங்க மறுக்கிறது. மேலும் உலகின் மிக மோசமான துன்புற்தலுக்கு ஆளான மியான்மரிலிருந்து- வந்த ரோஹிங்காயா முஸ்லிம்களுக்கும் பொருந்தாது, இது மனிதகுலத்திற்கு விரோதமானது, இது மனித உரிமை பறிப்பு நடவடிக்கை.


இதில் ஒரு விடயத்தை அவதானிக்க வேண்டும், இந்தியாவின் அண்டை நாடுகளான இஸ்லாமிய நாடுகளை மட்டும் சேர்த்துள்ளார்கள், மற்ற அண்டை நாடுகளை இச் சட்டத்தில் சேர்க்கப்படவில்லை, இந்த இஸ்லாமிய நாடுகளிலிருந்து வரும் முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும், ஆனால் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படது. இதை இஸ்லாம் என்ற மையப் புள்ளியில் வைத்து இந்த சட்டம் செயல்புரிகின்றது, இதிலிருந்து முஸ்லிம்களை "இஸ்லாமோபோபியா" என்று எதிரிகளாக கட்டமைத்து இந்த நாட்டு மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் இந்த தேசத்திற்கு ஆபத்தானவர்கள், அந்நியர்கள் அவர்கள் இந்த மண்ணுக்கு சொந்தகார்கள் அல்ல என்று அடையாள படுத்துவதின் மூலம் இந்த பாஜக அரசு தேர்தல்களில் அறுவடை செய்ய முயற்சிக்கிறது.


தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) குடியுரிமை திருத்த சட்டத்தை விட மிகவும் ஆபத்தான பேரழிவு சட்டம், இது ஒரு இன அழிப்பு திட்டம், இச் சட்டத்தின் படி இந்தியர்கள் அனைவரும் நான் இந்தியர் என்பதை ஆவணங்கள் மூலம் நிரூபிக்க வேண்டும். பெரும்பான்மையான கிராம மக்கள் தங்களுடைய பிறந்த தேதியை அறிய மாட்டார்கள், மேலும் அவர்களின் தாய் அல்லது தந்தையின் பிறப்பு சான்றிதழ்கள் எப்படி இருக்கும். இருப்பினும் ஆவணத்தில் சிறு தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டல் அந்த ஆவணங்கள் நிராகரிக்கப்பட்டும். இந்த (NRC) தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் இடம் பெற விட்டால் அவர் இந்தியக் குடிமகன் என தன்னை குடியுரிமை தீர்ப்பாயம் சென்று நிரூபிக்க வேண்டும்.


இந்தியாவில் உள்ள பல கோடி ஏழை எளிய மக்கள், நாடோடிகள், இயற்க்கை பேரிடர்களில் பாதிக்கப்பட்டவர்கள் எந்த ஆவணங்களுமே இல்லாமல் பல கோடி இந்தியர்கள் எங்கே போவார்கள்? இம் மக்கள் இந்த NRC தேசிய குடிமக்கள் பதிவேட்டு சட்டம் மூலம் தங்களது குடியுரிமை இழப்பார்கள், ஆனால் இதில் முஸ்லிம்களை தவிர அனைவரும் CAA எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019'. மூலம் இந்திய குடிமகனாக வாழ முடியும் எந்த ஆதாரமும் இல்லாமல் மதத்தின் அடிப்படையில். ஆனால் முஸ்லிம்களின் நிலை அவர்கள் அந்நியர்களாக முத்திரை குத்தி தடுப்பு முகாம்களில் அடக்கப்படுவார்கள். இது ஜெர்மனில் ஹிட்லர் யூதர்களை தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்ததையை போல, ஹிட்லரின் யூத இன அழிப்பு கொள்கையை இங்கு பாசிச பாஜக அரசு சட்டப்பூர்வமாக செயல்படுத்துகின்றது.


இதுதான் அவர்களின் நூறு ஆண்டு கால திட்டம்; ராஷ்ட்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (RSS)இரண்டாம் தேசியத் தலைவர் எம்.எஸ்.கோல்வல்கர் தான் எழுதிய, 1939 ஆம் ஆண்டு வெளியான "நாம் அல்லது நமது தேசிய வரையறை-  (We or Our Nationhood Defined) என்ற நூலில் இப்படி கூறுகிறார் "முஸ்லிம்களும், ஐரோப்பிய கிறிஸ்தவர்களும் இந்தியக் குடிமக்களாக இருக்க விரும்பினால் அவர்கள் தமது மதநம்பிக்கைகளை, பண்பாடுகளை, பழக்கவழக்கங்களைக் கைவிட்டுவிட்டு, முழுமையான ஹிந்துவாக மாறிவிட வேண்டும் என்றும், முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இந்த நாட்டில் குடிமக்களுக்குரிய எந்த உரிமையையும் கோராமல் வாழலாம்' என்றும் குறிப்பிடுகிறார்.

இதைத்தான் இந்தியாவை ஆளும் பாஜக அரசு சட்ட ரீதியாக செயல்படுத்த துடிக்கிறது. மதச்சார்பற்ற இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அழித்தொழிப்பது என்பதே இதன் நோக்கம்.

இஸ்லாமியர்கள் இந்த மண்ணின் பூர்வகுடி மக்கள், கைபர் கணவாய் வழியாய் வந்த ஆரிய கூட்டம் இல்லை. தியாகத்தால் இந்திய சுதந்திரப் போராட்டத்தை வடிவமைத்தவர்கள் முஸ்லிம்கள். 

"இந்திய விடுதலைக்காக சிறை சென்றவர்களிலும் உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது." – (பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங்- 1975).  நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் உருவாக்கிய கடல் கடந்த இராணுவமான இந்திய தேசிய இராணுவத்தில் தளபதி பொறுப்பு முதற்கொண்டு பல்வேறு பதவிகளை முஸ்லிம்கள் அலங்கரித்திருந்தனர். நேதாஜி வியந்து போற்றும் அளவு அதிகப்படியான பொருளாதார உதவிகளையும் இஸ்லாமிய வணிகர்கள் அளித்தனர். இந்திய சுதந்தரப் போரட்டத்தின் வீர சகாப்தம் திப்பு சுல்தானிடமிருந்து தொடங்குகிறது. வர்த்தகம் செய்ய அல்ல, இந்தியாவை வளைத்துப் போடவே ஆங்கிலேயர்கள் வந்திருக்கிறார்கள் என்பதைத் தொலைநோக்குப் பார்வையுடன் அடையாளம் கண்டு எதிர்த்த முதல் இந்தியர் அவர். மேலும் பல தியாக வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள்.


இன்று முஸ்லிம்களுக்கு எதிராக உத்திரப்பிரதேசத்திலும், அசாமிலும் மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் மிகப்பெரிய துயரத்திர்கு தள்ளப்பட்டு உள்ளனர், அவர்களின் வாழ்வாதாரம் நசுக்கப்பட்டுள்ளது. 

உலக வரலாற்றில் சர்வாதிகாரம் நிலைத்து இருந்ததாக சரித்திரம்யில்லை, வரலாறு மீண்டும் தன்னை தானே புதுபித்து கொள்ளும்.

-நூர் முகம்மது-

Friday, 3 January 2020

வேர்களிடம் கேள் விலாசத்தை கூறும்



1973 ஆம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றை வெளியிட்டது. அதில் நேதாஜியின் இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. அதில் முஸ்லிம்களின் பெயர்கள் இடம் பெற்று இருந்தன:- பள்ளப்பட்டி மணிமொழி மவ்லானா இராஜகிரி அப்துல்லா இளையான்குடி கரீம் கனி திருப்பத்தூர் அபூபக்கர் & தாஜிதீன் அத்தியூத்து அபூபக்கர் பக்கரி பாளையம் அனுமந்த கான் சென்னை அமீர் ஹம்சா சென்னை ஹமீது செங்குன்றம் கனி வண்ணாரப்பேட்டை ஹயாத்கான் புதுவலசை இபுராஹிம் வனரங்குடி இபுராஹிம் இளையான்குடி அப்துல் கபூர் மேலுர் அப்துல் ஹமீது சோழசக்கர நல்லுர் அப்துல் ஜப்பார் தத்தன்னூர் அப்துல் காதர் பட்டுக்கோட்டை அப்துல் காதர் திருப்பூர் அப்துல ரஜாக் காவேரிப்பட்டினம் அப்துல் மஜித் குருவம் பள்ளி அப்துல் மஜீத் கண்ணாத்தாள் பட்டி அப்துல் முத்தலிபு லெப்பைக் குடிகாடு அப்துல் சலாம் ராம்நாடு அப்துல் வஹாப் மானாமதுரை அப்துல் பாசித் திருவிடைச்சேரி அப்துல் வஹாப் அத்தியூத்து இப்ராஹிம் சென்னை ஜாபர் ஹக்கமி சிங்க மங்களம் ஜெய்னுல் ஆபிதீன் திருப்பத்தூர் காதர் பாட்ஷா புதுவலசை முஹம்மது லால் கான் பார்த்திபனூர் கச்சி மைதீன் அறந்தாங்கி முகம்மது செரிபு திருச்சி வரகனேரி முகம்மது யூசுப் தூத்துக்குடி முஹம்மது கல்லுரிஜனி சிவகங்கை முகம்மது இபுராஹிம் சென்னை முகம்மது உமர் மதுரை மொய்தீன் பிச்சை அம்மன்சத்திரம் முஹம்மது மீராசா திருப்பத்தூர் பீர் முஹம்மது கும்பகோணம் ரஹ்மத்துல்லா & சுல்தான் குடியாத்தம் நஜீமுல்லாஹ் கிருஷ்ணகரி தாவூத் சாயிபு இராமநாதபுரம் சையாது கனி பரங்கிப் பேட்டை தாஜிதீன் மன்னார்குடி சிக்கந்தர் கம்பம் சிக்கந்தர் முதுகுளத்தூர் சுல்தான் இராமநாதபுரம் தாஜ்தீன் தியாகத்தால் இந்திய சுதந்திரப் போராட்டத்தை வடிவமைத்தவர்கள் முஸ்லிம்கள்,( மேலும் பல வரலாற்று சான்றுகள் ...) -(மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு) கைபர் கணவாய் வழியாய் வந்த ஆரிய கூட்டமே, யாரிடம் கேட்கிறாய் ஆதாரம்.. என்ன கேட்கிறாய் எங்களிடம் என் மண்ணிலே வாழ்வதற்கான ஆதாரம் கேட்கிறாயா? இந்த மண்ணில் ஆழப்புதைந்திருக்கும் வேர்களிடம் கேட்டால் கூறும் எங்களது வரலாற்றை.. கற்பி! ஒன்றுசேர்!! புரட்சிசெய்!!!