Friday, 17 January 2020

மதங்களால் மக்களை பிரிக்கும் சட்டம்.

hi


மதங்களால் மக்களை பிரிக்கும் சட்டம்: -

மதசார்பின்மை என்ற இந்திய துணைகண்டத்தை, இந்தியாவை ஆளும் மோடி அரசு டிசம்பர் 2019 ல் கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் மதச்சார்பின்மையை தகர்த்துள்ளது. இதற்கு எதிராக ஒட்டுமொத்த இந்திய துணைகண்டமே மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு கிளர்ந்தெழுந்துள்ளது.


இந்த வலதுசாரி பாஜக அரசு மீண்டும் இரண்டாவது முறையாக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்ததும், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து (370) சட்ட பிரிவு ரத்து, முத்தலாக் மசோதா, அடுத்து பாபர் மசூதி இடிப்பு வழக்கில் ஒரு மிக மோசடியான தீர்ப்பு வழங்கியது, பின்னர் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) இச் சட்டம் மூலம் இந்த தேசம் சட்டப் பூர்வமாக இந்து ராஷ்டிரமாக, ராம ராஜ்ஜியம்மாக, இந்திய அரசியல் சாசனத்திர்கு பதிலாக மனுஸ்மிருதியை அரசியல் சட்டமாக்குவதே இந்த வலதுசாரி அரசின் செயல்திட்டம்.


2014 டிசம்பர் 31-க்கு முன் இந்தியாவுக்குள் வந்துவிட்ட ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த ஹிந்துக்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிக்கள் ஆகிய ஆறு மதங்களைச் சேர்ந்த அகதிகளுக்கு மட்டும் இந்தியக் குடியுரிமை வழங்க வழிவகுக்கிறது "குடியுரிமை திருத்தச் சட்டம் 2019'. ஆனால், முஸ்லிம் அகதிகளுக்கும், இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்துள்ள ஈழத் தமிழர்கள், பூடானிலிருந்து புலம்பெயர்ந்த கிறிஸ்தவ அகதிகளுக்கும் குடியுரிமை வழங்க மறுக்கிறது. மேலும் உலகின் மிக மோசமான துன்புற்தலுக்கு ஆளான மியான்மரிலிருந்து- வந்த ரோஹிங்காயா முஸ்லிம்களுக்கும் பொருந்தாது, இது மனிதகுலத்திற்கு விரோதமானது, இது மனித உரிமை பறிப்பு நடவடிக்கை.


இதில் ஒரு விடயத்தை அவதானிக்க வேண்டும், இந்தியாவின் அண்டை நாடுகளான இஸ்லாமிய நாடுகளை மட்டும் சேர்த்துள்ளார்கள், மற்ற அண்டை நாடுகளை இச் சட்டத்தில் சேர்க்கப்படவில்லை, இந்த இஸ்லாமிய நாடுகளிலிருந்து வரும் முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும், ஆனால் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படது. இதை இஸ்லாம் என்ற மையப் புள்ளியில் வைத்து இந்த சட்டம் செயல்புரிகின்றது, இதிலிருந்து முஸ்லிம்களை "இஸ்லாமோபோபியா" என்று எதிரிகளாக கட்டமைத்து இந்த நாட்டு மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் இந்த தேசத்திற்கு ஆபத்தானவர்கள், அந்நியர்கள் அவர்கள் இந்த மண்ணுக்கு சொந்தகார்கள் அல்ல என்று அடையாள படுத்துவதின் மூலம் இந்த பாஜக அரசு தேர்தல்களில் அறுவடை செய்ய முயற்சிக்கிறது.


தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) குடியுரிமை திருத்த சட்டத்தை விட மிகவும் ஆபத்தான பேரழிவு சட்டம், இது ஒரு இன அழிப்பு திட்டம், இச் சட்டத்தின் படி இந்தியர்கள் அனைவரும் நான் இந்தியர் என்பதை ஆவணங்கள் மூலம் நிரூபிக்க வேண்டும். பெரும்பான்மையான கிராம மக்கள் தங்களுடைய பிறந்த தேதியை அறிய மாட்டார்கள், மேலும் அவர்களின் தாய் அல்லது தந்தையின் பிறப்பு சான்றிதழ்கள் எப்படி இருக்கும். இருப்பினும் ஆவணத்தில் சிறு தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டல் அந்த ஆவணங்கள் நிராகரிக்கப்பட்டும். இந்த (NRC) தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் இடம் பெற விட்டால் அவர் இந்தியக் குடிமகன் என தன்னை குடியுரிமை தீர்ப்பாயம் சென்று நிரூபிக்க வேண்டும்.


இந்தியாவில் உள்ள பல கோடி ஏழை எளிய மக்கள், நாடோடிகள், இயற்க்கை பேரிடர்களில் பாதிக்கப்பட்டவர்கள் எந்த ஆவணங்களுமே இல்லாமல் பல கோடி இந்தியர்கள் எங்கே போவார்கள்? இம் மக்கள் இந்த NRC தேசிய குடிமக்கள் பதிவேட்டு சட்டம் மூலம் தங்களது குடியுரிமை இழப்பார்கள், ஆனால் இதில் முஸ்லிம்களை தவிர அனைவரும் CAA எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019'. மூலம் இந்திய குடிமகனாக வாழ முடியும் எந்த ஆதாரமும் இல்லாமல் மதத்தின் அடிப்படையில். ஆனால் முஸ்லிம்களின் நிலை அவர்கள் அந்நியர்களாக முத்திரை குத்தி தடுப்பு முகாம்களில் அடக்கப்படுவார்கள். இது ஜெர்மனில் ஹிட்லர் யூதர்களை தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்ததையை போல, ஹிட்லரின் யூத இன அழிப்பு கொள்கையை இங்கு பாசிச பாஜக அரசு சட்டப்பூர்வமாக செயல்படுத்துகின்றது.


இதுதான் அவர்களின் நூறு ஆண்டு கால திட்டம்; ராஷ்ட்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (RSS)இரண்டாம் தேசியத் தலைவர் எம்.எஸ்.கோல்வல்கர் தான் எழுதிய, 1939 ஆம் ஆண்டு வெளியான "நாம் அல்லது நமது தேசிய வரையறை-  (We or Our Nationhood Defined) என்ற நூலில் இப்படி கூறுகிறார் "முஸ்லிம்களும், ஐரோப்பிய கிறிஸ்தவர்களும் இந்தியக் குடிமக்களாக இருக்க விரும்பினால் அவர்கள் தமது மதநம்பிக்கைகளை, பண்பாடுகளை, பழக்கவழக்கங்களைக் கைவிட்டுவிட்டு, முழுமையான ஹிந்துவாக மாறிவிட வேண்டும் என்றும், முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இந்த நாட்டில் குடிமக்களுக்குரிய எந்த உரிமையையும் கோராமல் வாழலாம்' என்றும் குறிப்பிடுகிறார்.

இதைத்தான் இந்தியாவை ஆளும் பாஜக அரசு சட்ட ரீதியாக செயல்படுத்த துடிக்கிறது. மதச்சார்பற்ற இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அழித்தொழிப்பது என்பதே இதன் நோக்கம்.

இஸ்லாமியர்கள் இந்த மண்ணின் பூர்வகுடி மக்கள், கைபர் கணவாய் வழியாய் வந்த ஆரிய கூட்டம் இல்லை. தியாகத்தால் இந்திய சுதந்திரப் போராட்டத்தை வடிவமைத்தவர்கள் முஸ்லிம்கள். 

"இந்திய விடுதலைக்காக சிறை சென்றவர்களிலும் உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது." – (பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங்- 1975).  நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் உருவாக்கிய கடல் கடந்த இராணுவமான இந்திய தேசிய இராணுவத்தில் தளபதி பொறுப்பு முதற்கொண்டு பல்வேறு பதவிகளை முஸ்லிம்கள் அலங்கரித்திருந்தனர். நேதாஜி வியந்து போற்றும் அளவு அதிகப்படியான பொருளாதார உதவிகளையும் இஸ்லாமிய வணிகர்கள் அளித்தனர். இந்திய சுதந்தரப் போரட்டத்தின் வீர சகாப்தம் திப்பு சுல்தானிடமிருந்து தொடங்குகிறது. வர்த்தகம் செய்ய அல்ல, இந்தியாவை வளைத்துப் போடவே ஆங்கிலேயர்கள் வந்திருக்கிறார்கள் என்பதைத் தொலைநோக்குப் பார்வையுடன் அடையாளம் கண்டு எதிர்த்த முதல் இந்தியர் அவர். மேலும் பல தியாக வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள்.


இன்று முஸ்லிம்களுக்கு எதிராக உத்திரப்பிரதேசத்திலும், அசாமிலும் மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் மிகப்பெரிய துயரத்திர்கு தள்ளப்பட்டு உள்ளனர், அவர்களின் வாழ்வாதாரம் நசுக்கப்பட்டுள்ளது. 

உலக வரலாற்றில் சர்வாதிகாரம் நிலைத்து இருந்ததாக சரித்திரம்யில்லை, வரலாறு மீண்டும் தன்னை தானே புதுபித்து கொள்ளும்.

-நூர் முகம்மது-

No comments:

Post a Comment