Friday, 21 December 2018

ஓட்டு அரசியல்:



இன்றைய ஓட்டு அரசியலில், ஒரு வாக்களிப்பின் மூலம் மாற்றம் நிகழ்ந்திடுமா!!  இந்த சமூகத்தை பற்றிய சமூக அறிவோ, இயற்கை வளங்கள் பற்றிய புரிதலோ, வாழ்வுக்கு தேவையான கல்வியை வழங்குவதிலோ, சட்டங்கள் பற்றிய தெளிவை மக்களுக்கு வழங்காமல், இவைகளை பற்றிய அறிவு இல்லாத,  இவைகளை வழங்க தயாராகயில்லாத ஆட்சியாளர்களை தாம் நாம் ஒரு வாக்கு மூலம் தேர்தெடுக்கப்படுகிறோம் , ஏன்னென்றால் நமக்கும் இவைபற்றிய அறிவும் படிக்க வாய்ப்பு வழங்கவில்லை இன்றைய கல்விமுறையில்.

ஏனெனில் இந்த கல்விமுறையை வரைமுறைப்படுத்திய  அன்றைய ஆங்கில அரசு அவர்களுக்கு சேவகம் செய்வோரை உருவாக்குவதே அதன் வெளிப்படையான நோக்கம், அது தான் இன்றும் தொடர்கிறது.

ஒரு வாக்கில் எந்த மாற்றமும் ஏற்படாது, ஆட்சியாளர்கள் மாறுவார்கள், காட்சிகள் மாறும், ஆனால் இவைகளை செயல்படுத்தும், நடைமுறை படுத்தும் அரசு இயந்திரங்கள் இன்னும் துருப்பிடித்து தான் உள்ளது, அவர்களுக்கும் சமூகத்தை பற்றிய தெளிவுயில்லை.

இங்கு நாம் மக்களை அரசியல் படுத்தபட வேண்டும், சட்டத்தை பற்றிய அறிவு, வாழ்வியல் கல்வி, அதிகாரத்தை நோக்கி கேள்வி கேட்கும் கல்வி வேண்டும். நாம் இப்பொழுது படிக்கும் கல்வியால் ஒரு மாற்றமும் எற்படது அதிகார வர்க்கத்திற்கு சேவை செய்பவர்களாகவே செயல்படுவோம், இந்த ஒரு ஓட்டால் ஏந்த வாழ்வியல் மாற்றமும் ஏற்படாது, ஆட்சியும், காட்சியும் மட்டுமே மாறும்.

மாறி மாறி வரும் ஆட்சிகள் எல்லாம் மேற்கு உலகிற்காகவே செயல்படுகின்றது, மேற்கு உலகம், மூன்றாம் உலக நாடுகளில் தனது சித்தாந்தத்தை நிலைநிறுத்த, தனக்கான ஒர் சந்தையை அங்கு நிரந்தரமாக்க, அங்கு உள்ள வளங்களை தன்வசபடுத்த மேலும் அனைத்தும் அரசு நிறுவனங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு மாற்றுவது, அந்நாட்டு மக்களை ஒர் சந்தை பொருளாக மாற்றுவது,  அதை தான் அவர்களின் குறிக்கோள். அதாவது, "மேற்கல்லாத நாகரிகங்களை எதிர்த்துப் போராடு; வெற்றிகொள்; கட்டுப்படுத்து. இதுவே புதிய நூற்றாண்டை ஆள்வதற்கான அமெரிக்க அரசியல் மந்திரம்" - சாமுவெல் பி.ஹன்டிங்டன்.  (அமெரிக்க வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்)

அந்த ஒரு நாள், ஒரு ஓட்டு, என்ற பெருமை விட்டுவிட்டு மற்ற அனைத்து நாட்களிலும் மக்களை அரசியல்படுத்துவோம், மாற்றத்தை ஏற்ப்படுத்துவோம்.





கூட்டு பொருளாதாரமும் சமுக மாற்றமும்:-





பண்பாட்டுரீதியாக பொருளாதார சிந்தனை என்பது சமூகத்தைப் பற்றிய சிந்தனையிலிருந்து தனியானதாக பிரிக்க முடியாது, ஆனால் இன்று முதலாளித்து சிந்தனை சமூகம் சார்ந்தது அல்ல, உற்பத்தி சார்ந்த அடிமை முறை. அதாவது, ஒரு வேலையிலிருந்து பிரிவோ, அல்லது வெளியேற்றப்பட்டாலோ, அந்த தொழிலாளி ஒரு பகுதி வேலையோடு ஆயுட்காலம் பினைந்து அவரை மூலதனத்துக்கு முழுமையாகக் பயன்படுத்தப்பட்டு பின்னர் பழைய இயந்திர ஸ்கிராப் போல் வெளியேற்றுவது இன்றைய முதலாளித்துவ சித்தாந்தம், இதுவே தற்போதைய நவின முதலாளித்துவ கல்விமுறை, இது நமது பண்பாட்டு வழிமுறை அல்ல.

இங்கு மாத ஊதியத்தில் பணியற்றுபவரின் நிலையோ எண்ணெய்ப் பசையில் கால்கள் சிக்கிக்கொண்ட ஒரு பல்லியின் செயலற்ற நிலை எப்படியே"- அப்படிதான் தற்போது நிலை. ஆனால் பன்னாட்டு நிறுவனமோ நீருக்கு மேலே ஒரே இடத்தில் சிறகடித்து நிற்கும் மீன்கொத்தியின் லாவகம்போலவும், இயற்கை வளங்களையும், பண்பாட்டையும் அழிக்க துடிக்கின்றது.


கடந்த கால வரலாற்றில், தமிழர் கடல் பிராந்தியம் முழுவதும் 3000 ஆண்டுகால ஏற்றுமதி இறக்குமதி  வணிகம் செய்த மிக நெடிய வரலாறு தமிழகத்துக்கு உண்டு. அதில் 700 ஆண்டுகாலம் சோழ மண்டலக் கடற்கரை முழுவதும் தமிழக முஸ்லிம்கள் இந்த தமிழர் கடல் பிராந்தியத்தில் வாணிபம் கோலோச்சு இருந்தனர், ஆனால் காலனித்துவ ஆதிக்கம், அரசியல் மாற்றம் மற்றும் கல்வியின் வீழ்ச்சால் புதிய தொழில்நுட்பத்தை உள்வாங்காதால் பின்னடைவுக்கு சென்றனர்.

நமக்கான பொறுப்புகள் என்ன என்பது அறிந்து கொள்ளாத, பன்னாட்டு நிறுவனத்தின் பண்பட்ட அடிமையாய் மாத வருவாய் ஈட்டுபவர்களாக மாறிவிட்டோம், சமூகத்தை பற்றிய தொலைநோக்கு பார்வையில்லாததால், இந்த நகர்வு இப்போது பிரச்சினைகள் இல்லாதது போல் தெரியும், ஆனால் அது அடுத்த தலைமுறைகள் சமூக அதிகாரத்திலும், பொருளாதாரத்திலும் ஒரு வலுவான கட்டமைப்பை பெறாது.

மீண்டும் வாணிபத்தில்  கோலோச்ச, மிகுந்த போட்டி நிறைந்த வணிக உலகில், பன்னாட்டு நிறுவனங்கள், தனியார்மயமாக்கல் இவைகளுக்கு இடையில் தனியாகவோ அல்லது சிறு முதலீட்டில் ஒரு தொழிலை வெற்றிகரமாக நடத்துவது இயலாதது, இவைகளை எதிர்கொள்ள நாம் சமூகம் சமூகமாக கூட்டு பொருளாதாரம், / கூட்டு முயற்ச்சி என்ற அடிப்படையில் சமூகமாக இனைந்து தொழிலில் ஈடுபட வேண்டும், தொழில் என்பது சமூகமாக செய்ய வேண்டிய முறைமை என்பதை மார்வாடிகள், சிந்திகள், மலையாளிகளை ,பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த நிலையில் தான் நாம் வணிகத்தை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும். கூட்டு சமூகமாக செயல்படும் போது அதில் உள்ள உறுப்பினர்கள் முதலீட்டாளர்களாகவும் தொழிலில் உழைப்பாளரகவும் செயல்படுவதால் இதில் அவர்களுக்கு இலாப நட்டத்தில் நேரடியாக பங்கு பெருவதால் அவர்களின் செயல்பாடுகள் மிகவும் செம்மையாக செயல்படும். இது ஒரு சமூகமாக செயல்படுவதால் நல்லினக்கமும், மற்றும் தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி நகரும், அப்பொழுதுதான் சமூகத்தை புணரமைப்பு செய்யமுடியும்.

வேளாண்மையை  ஒரு சமூகமாக கூட்டு முதலீட்டில் முன்னெடுத்து  செல்வது மகத்தான அபிவிருத்தியும் வாழ்வாதார பாதுகப்பும் தரும்.  இதன் மூலமே சமூகத்தின் மறுவாழ்விற்கும் , இளைஞர்களின் தொழில் வாய்ப்பை வழங்கவும், பல்லின சமூகத்தில் தற்சார்பு வளர்ச்சியடைந்திட , நசுக்கப்பட்டு வரும் உழவு தொழிலை உயர்த்திட, கலப்படம் இல்ல இயற்கை உணவு பெற்றிட , மரபனு மாற்றப்பட்ட(Genetically modified foods ) உணவிலிருந்து விடுபட்டு இயற்கையோடு வாழ இது வழி செய்யும். வாழ்க்கையின் உண்மையை உணர்ந்து இந்த வாழ்வை வரலாறாக மாற்றியமைப்போம்.


ஆழமாக உரையாடுவோம், விவாதிப்போம். அவற்றினூடாக, வெளியேறும் வழிகளையும் விடைகளையும் கண்டடைவோம். வரலாறு நமக்காகக் காத்திருக்காது. நாம்தான் வரலாற்றில் தலையீடு செய்ய வேண்டும். அப்போதுதான் மாற்றம் சாத்தியப்படும்.


தனி மனிதனுக்கு எவ்வாறு நினைவாற்றல் முக்கியமோஅது போல தான் ஒரு சமூகத்திற்கு அதன் வரலாறு முக்கியம்


- Noor Mohamed -







Tuesday, 4 December 2018

வணிகச் சமூகம்



ஒற்றை பாதையில்
வெகு தூரம் செல்கிறோம்
நிலவு ஒளியில்
வாழ்கை முழுவதும்
பயணங்களிலே தொடர்கிறது...


தம்மில் இன்பமும்
துன்பமும் அந்த
பாதையில் கழிகிறது
நம் இதை விதி என
நம்பினோம் எல்லாம்
தலைவிதி என்று.

ஒரு முட்டாள்தனமான
சிந்தனையில் சிக்கியது
வாழ்வு; பயணத்தின்
மாற்றுவழி அறியாமையால்
இந்த நிலை..


பகுத்தறிவை ஊட்டிய
மார்க்கத்தின் பிள்ளை;
விதி என்று நம்பி
வாழ்வை துளைத்தது
இந்த நெடு பயணத்தில்.

எந்த சுகமும் காணாது
கண்ணீருடன் இந்த
கூலி வேலை இழந்தால்
வேறு ஒன்றும் அறியாது
இந்த Gulf  விட்டு..
பிழைப்புக்கு என்று
நமது நினைப்பு!!!


கூடு விட்டு கூடு
மாறும்போது நீ
கொடுத்தவர்களும்
எதிர்பார்பார்கள்; நீ இன்னும்
கொடுக்க வேண்டும் என்று;
உன்னிடம் ஒன்றும்
இல்லாத போதும்;

வாழ்வும் புரியவில்லை
வாழ்த பின்னும்
மாற வில்லை ஏன்
இந்த நிலையோ!!

நாம் ஒரு வணிக
சமூகத்தின் வாரிசுகள்
என்று மறந்தது ஏனோ..


ஆசிய ஐரோப்பிய நாடுகளுக்கு
ஏற்றுமதி இறக்குமதி  வணிகம்
செய்த மிக நெடிய வரலாறு
முஸ்லிம் சமூகத்துக்கு
தமிழகத்தில் உண்டு.

பழவேற்காடு முதல்
சூரத் வரை இந்த
நீண்ட கடலும் கரை
நம் முன்னோர்கலிடம்
வாணிபத்தில் மிகுந்தது
பல நாடுகளுக்கு;


நமது கல்வின் வீழ்ச்சியும்
அரசியல் மாற்றத்தாலும்
கூலி களாக மாறினோம்
இவையை விதி யான
உன்னத உலமாக்கள்
நம்ப வைத்தனர்.


வாழ்வை புதுபிக்கா
தனது வரலாற்றை
அறியாததால்
இந்த நிலை...


தனி மனிதனுக்கு
எவ்வாறு நினைவாற்றல்
முக்கியமோ;  அது போல
தான் ஒரு சமூகத்திற்கு
அதன் வரலாறு முக்கியம்.

தேசியம்;



தேசியவாதம் மூலம்
மேற்கு உலகு மனிதகுலத்தை
பின்னோக்கி தள்ளியது;
இது மனிதனை மிருகமாக்கியது;

மரபுசார் நாகரிகத்தை
சீரழித்தது; சர்வாதிகாரமும்
போரும் இப் பூவுலகை
இடுகாடாக மாற்றியது.

தேசியம் மூலம் அவரது
நாட்டின் அன்பும் பிறர்
மீது வெறுப்பும் வளர்த்தெடுத்தது
இந்த நவீன தேசியம்;

இந்த தேசிய கொள்கையில்
வர்க்க ரீதியோ;
இன ரீதியோ; தேசிய
ரீதியோ; எந்த முழு
மனிதகுலத்திற்கும் நீதியும் ஒழுக்கமும் இல்லை;
ஒரு வெங்காயமும் இல்லை...

இவைகள் கீழ்த்திசை
தேசங்களில் சுதந்திரத்திற்காக
 திணிக்கப்பட்டது;

இது காலனித்துவத்தின்
அடுத்த பரிமாணம்
இந்த தேசியம்..

இது ஐரோப்பாவின் புதிய அடிமைகள்;