இன்றைய ஓட்டு அரசியலில், ஒரு
வாக்களிப்பின் மூலம் மாற்றம் நிகழ்ந்திடுமா!! இந்த சமூகத்தை பற்றிய சமூக அறிவோ, இயற்கை வளங்கள் பற்றிய புரிதலோ, வாழ்வுக்கு தேவையான கல்வியை வழங்குவதிலோ, சட்டங்கள் பற்றிய தெளிவை மக்களுக்கு வழங்காமல்,
இவைகளை பற்றிய அறிவு இல்லாத, இவைகளை வழங்க தயாராகயில்லாத
ஆட்சியாளர்களை தாம் நாம் ஒரு வாக்கு
மூலம் தேர்தெடுக்கப்படுகிறோம் , ஏன்னென்றால்
நமக்கும் இவைபற்றிய அறிவும் படிக்க வாய்ப்பு வழங்கவில்லை இன்றைய கல்விமுறையில்.
ஏனெனில் இந்த கல்விமுறையை வரைமுறைப்படுத்திய அன்றைய ஆங்கில அரசு அவர்களுக்கு சேவகம் செய்வோரை உருவாக்குவதே அதன்
வெளிப்படையான நோக்கம், அது தான் இன்றும்
தொடர்கிறது.
ஒரு வாக்கில் எந்த மாற்றமும்
ஏற்படாது, ஆட்சியாளர்கள்
மாறுவார்கள், காட்சிகள் மாறும்,
ஆனால் இவைகளை செயல்படுத்தும், நடைமுறை படுத்தும் அரசு இயந்திரங்கள் இன்னும் துருப்பிடித்து
தான் உள்ளது, அவர்களுக்கும் சமூகத்தை பற்றிய தெளிவுயில்லை.
இங்கு நாம் மக்களை அரசியல் படுத்தபட வேண்டும், சட்டத்தை பற்றிய அறிவு, வாழ்வியல் கல்வி, அதிகாரத்தை நோக்கி கேள்வி கேட்கும் கல்வி வேண்டும். நாம் இப்பொழுது படிக்கும்
கல்வியால் ஒரு மாற்றமும் எற்படது அதிகார வர்க்கத்திற்கு சேவை செய்பவர்களாகவே
செயல்படுவோம், இந்த ஒரு ஓட்டால்
ஏந்த வாழ்வியல் மாற்றமும் ஏற்படாது, ஆட்சியும், காட்சியும்
மட்டுமே மாறும்.
மாறி மாறி வரும் ஆட்சிகள் எல்லாம் மேற்கு உலகிற்காகவே செயல்படுகின்றது,
மேற்கு உலகம், மூன்றாம் உலக நாடுகளில் தனது சித்தாந்தத்தை நிலைநிறுத்த,
தனக்கான ஒர் சந்தையை அங்கு நிரந்தரமாக்க,
அங்கு உள்ள வளங்களை தன்வசபடுத்த மேலும்
அனைத்தும் அரசு நிறுவனங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு மாற்றுவது, அந்நாட்டு மக்களை ஒர் சந்தை பொருளாக மாற்றுவது, அதை தான் அவர்களின்
குறிக்கோள். அதாவது, "மேற்கல்லாத நாகரிகங்களை எதிர்த்துப் போராடு;
வெற்றிகொள்; கட்டுப்படுத்து. இதுவே புதிய நூற்றாண்டை ஆள்வதற்கான
அமெரிக்க அரசியல் மந்திரம்" - சாமுவெல்
பி.ஹன்டிங்டன். (அமெரிக்க வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்)
அந்த ஒரு நாள், ஒரு ஓட்டு, என்ற பெருமை விட்டுவிட்டு மற்ற அனைத்து நாட்களிலும் மக்களை அரசியல்படுத்துவோம், மாற்றத்தை ஏற்ப்படுத்துவோம்.
No comments:
Post a Comment