நாடு சுதந்திரம் அடைந்து அரசமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டபோது அம்பேத்கர் சட்ட அமைச்சரானார். மௌலானா அபுல்கலாம் ஆசாத் நாட்டின் முதல் கல்வி அமைச்சரானார்.
இவர்கள் இருவரும் கல்வியை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்றார்கள்.
சர்தார் வல்லபாய் படேல் தலைமையிலான நிலைக்குழுவுக்கு இந்த பரிந்துரை அனுப்பப்பட்டது.
படேல் 'அரசின் பொருளாதார நிலை,அனைவருக்கும் இலவச கல்வி அளிக்கும் நிலையில் இல்லை' என்று சொல்லி பரிந்துரையை நிராகரித்தார்.
கல்வி உரிமைக்கான குரல்வளை எழுந்த இடத்திலேயே நசுக்கப்பட்டது.எனினும் அம்பேத்கர் தனது சட்ட அறிவின் துணையுடன், அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் ' (directive principle of state policy) என்ற பரிவை உருவாக்கி,அதில் கல்வியைக் கொண்டு வந்தார்.
இதைத் தொடர்ந்து கேரளாவின் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையிலான அரசு 'கேரள கல்விச் சட்டத்தை' கொண்டு வந்தது.
அப்போது ஜோஸப் முண்டச்சேரி கல்வி அமைச்சராகவும், வி.ஆர்.கிருஷ்ணய்யர் சட்ட அமைச்சராகவும் இருந்தனர்.
இந்தியாவில் கல்வி உரிமைக்காகக் கொண்டு வரப்பட்ட முதல் சட்டம்.இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து கேரளாவில் ஏற்ப்ட்ட வன்முறையை காரணமாக சொல்லி,கேரள அரசை கலைத்தார் நேரு.
இந்த வரலாற்றை நாம் ஆழ்ந்து படிக்க வேண்டும்.
அப்போதுதான் அனைவருக்கும் கல்வி என்பதை மறுத்த வல்லபாய் படேலுக்கு 3000 கோடி ரூபாய் செலவில் சிலை வைக்கப்படுவதையும்,
அனைவருக்கும் கல்வி வேண்டும் என்று வலியுறுத்திய அபுல்கலாம் ஆசாத் வரலாற்றில் இருந்து அகற்றப்படுவதையும் புரிந்துகொள்ள முடியும்...
- கற்க கசடற_
தன்னுடைய வரலாற்றை
தன்னுடைய வேர்களை
இந்த இனம்
அறிந்துகொள்ளா
விட்டால் பட்ட மரம்மாய்
அழிந்து போகும்...
தன்னுடைய வேர்களை
இந்த இனம்
அறிந்துகொள்ளா
விட்டால் பட்ட மரம்மாய்
அழிந்து போகும்...
No comments:
Post a Comment