Saturday, 27 October 2018

"மைசூரின் புலி"

"மைசூரின் புலி" என அழைக்கப்படும் திப்பு சுல்தான்;
மதச்சார்பின்மையின் மகத்தான முன்னோடி!

1916 ஆம் ஆண்டு மைசூரில் தொல்லியல் துறையின் அப்போதைய இயக்குநராகப் பணிபுரிந்த ராவ் பகதூர் கே.நரசிமாச்சார், கடிதங்களடங்கியக் கட்டு ஒன்றை சிரிங்கேரி கோவிலில் கண்டெடுத்தார்.

அவை கோவில் மடாதிபதியின் முகவரிக்கு திப்புவால் எழுதப்பட்டிருந்தவையாகும்
.
அந்தக் கடிதங்கள் திப்புவின் மதச்சார்பற்றக் கொள்கைகள் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சுவதாக இருக்கின்றன.

அந்தக் கடிதங்களிலிருந்து 1791 ஆம் ஆண்டு மராத்தியப் படைத்தளபதிகளில் ஒருவனான ரகுநாத் ராவ் பட்வர்த்தன் தலைமையிலான குதிரைப் படையொன்று சிரிங்கேரிக்குள் புகுந்து சூறையாடியிருக்கிறது.

அப்போது பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.எண்ணற்றோர் படுகாயமடைந்திருக்கின்றனர்.அவர்களில் பிராமணர்களும் அடக்கம்.

மடாலயத்தின் சொத்துகள் அபகரிக்கப்பட்டன.மடத்திலிருந்த புனிதப் பொருட்களை மதியாது, அவமரியாதையாக நடந்து கொண்டிருக்கின்றனர்.

அங்கிருந்தப் பெண் கடவுள் சாரதாவின் சிலையைத் தூக்கியெறிந்துவிட்டனர். இதையடுத்து, அங்கேயிருக்க இடமில்லாமல் மடாதிபதி இடம் பெயர்ந்து கரக்காலாவுக்கு வந்துவிட்டார்.

அவர் திப்புவுக்கு மராத்தியக் குதிரைப் படையின் அட்டகாசத்தை விளக்கி ஒரு கடிதம் எழுதி, சிலையைப் புத்துதாரணம் செய்ய உதவி கேட்டிருந்தார்.அதைக் கேட்டு கோபமும்,துக்கமுமாகிப் போன திப்பு அக்கடிதத்துக்குப் பதிலளித்தார்.

அதில்,'புனிதமான அந்த இடத்தில் இதுபோன்ற கேவலமானப் பாவச்செயல்களில் ஈடுபட்டவர்கள், தங்களின் குற்றச்செயல்களுக்கான விளைவுகளை நிச்சயம் அனுபவிப்பார்கள்'.

கலியுகத்தின் செய்யுளான 'தவறுகள் செய்யும்போது சிரித்தவர்கள் அதற்கானத் தண்டனையை பெறும்போது அழுவார்கள்'
( Hasadh-bin kriyate karma rudadbhir anubhuyate )----

அதிற்கான நாள் வெகுதூரத்தில் இல்லை. குருவுக்குத் துரோகமிழைத்தவர்கன் பரம்பரை அழிவுக்குள்ளாகும் என்று எழுதியவர், உடனடியாக பெத்னூர் அஸாபுக்கு உத்தரவிட்டு 200 ரஹாதிஸ் பணம் ரொக்கமாகவும்,200 பணமதிப்புக்கு அரிசியும் மற்ற பொருட்களும், சாரதா சிலையை புத்துதாரணம் செய்ய உதவியும் செய்தார்.

புத்துதாரணம் நடந்த தினத்தன்று பிராமணர்களுக்கு உணவளித்தவர்,'தனது வளமைக்கும் எதிரிகளின் அழிவுக்கும் பிரார்த்திக்கும்படி' கேட்டுக் கொண்டார்.

சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதும் திப்பு பிரசாதமும் பரிவட்டத்துண்டும் பெற்றுக் கொண்டார். பதிலுக்கு சாமி சிலைக்கு ரவிக்கைத் துணி உள்ளிட்ட ஆடைகளும்,சுவாமிக்கு ஒரு ஜோடி சால்வையும் அனுப்பி வைத்தார்....

மதச்சார்பற்ற ஆட்சிமுறைக்காக அவரைப் போற்றுவது இன்றைய சூழலில் மிகவும் பொருத்தம்.

( திப்பு சுல்தான்
மொஹிபுல் ஹசன்)

No comments:

Post a Comment