Saturday, 27 October 2018

தேர்வு


தேர்வில் " கரும்பு எங்கு விளைகிறது " என்பது கேள்வி. ஒரு மாணவருக்கு பாடப் புத்தகத்தில் உள்ள விடை தெரியும். எழுதினார்; மதிப்பெண் கிடைத்தது.

இன்னொருவருக்கு பாடப் புத்தகவிடை தெரியாது. அவரது கிராமத்தில் கரும்பு விளைகிறது என்றாலும் அதை எழுத முடியாது. புத்தகத்தில் உள்ள விடையைத்தான் எழுத வேண்டும். அது நினைவுக்கு வரவில்லை; ஆகவே எழுதவில்லை; அதனால் மதிப்பெண்ணும் இல்லை.

இப்போது இரண்டு பேருக்கும் முன்பாக ஒரு கரும்பை வைத்து இது என்ன என்று கேட்கப்படுகிறது. தேர்வில் சரியான விடை எழுதியவருக்கு அது என்ன என்றே தெரியவில்லை. விடை எழுதாத மாணவர் சட்டென்று "கரும்பு" என்று சொன்னார்.

நடைமுறையில் இருந்து துண்டிக்கப்பட்டதாக இருக்கும் "நமது கல்வி முறையின் அபத்தத்தை இது உணர்த்துகிறது"... என்றபோதிலும், இரண்டுமே அறிவுதான்.

ஒன்று எழுத்தறிவு என்றால் மற்றது சொல்வதன் வழியே வெளிப்படும் அறிவு. எழுதுதல், பேசுதல், கேட்டல் ஆகிய மூன்று திறன்களுக்கும் கல்வியில் சம முக்கியத்துவம் உண்டு. மூன்றும் ஒருங்கிணையும் போதுதான் கல்வி முழுமை அடைகிறது.

-கற்க கசடற

No comments:

Post a Comment