கரும்பலகையில் எழுதாதவை;
- பழ.புகழேந்தி-
- பழ.புகழேந்தி-
இந்தக் கவிதைகள் ஒவ்வொன்றும் வலிமையான கல்வி அரசியலை முன்வைக்கின்றன :-
தமிழில் பேசினால்
தண்டனை தரும் பள்ளி
தினமும் தொடங்குகிறது
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடி..
தண்டனை தரும் பள்ளி
தினமும் தொடங்குகிறது
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடி..
****
விடை சொல்லவே
பழக்குகிறோம்..
பழக்கியதே இல்லை
கேள்வி கேட்க...
விடை சொல்லவே
பழக்குகிறோம்..
பழக்கியதே இல்லை
கேள்வி கேட்க...
*****
சார் ஒரு விரல் தூக்கியபடி எழுந்தான்
அனுப்பினேன்.
அனுப்பினேன்.
சார் உடனே மற்றொருவன்.
அதட்டினேன்.
நொடிகள் நகர.
நொடிகள் நகர.
உள்ளேயே ஈரம்.
வகுப்பு முழுதும் நாற்றமடித்தது
என் அதிகாரம்.
என் அதிகாரம்.
****
No comments:
Post a Comment