இந்தியாவின் கல்விமுறையை வரைமுறைப்படுத்த ஆங்கிலேய அரசு மெக்காலே என்பவரை அமர்த்தியது.
ஆங்கில மொழி குறித்தும் மிகவும் பெருமித உணர்வுகொண்ட மெக்காலே இயல்பிலேயே 'இந்தியர்கள் தங்களால் திருத்தப்பட்ட வேண்டியவர்கள்' என்று நினைத்தார்.
1835 -ல் இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு இந்தியாவின் கல்விநிலை குறித்து சமர்ப்பித்த அறிக்கையில் இதை வெளிப்படையாக குறிப்பிடுகிறார்.
'ஆங்கிலத்துடன் ஒப்பிடும் அருகதையுள்ள பாடப் புத்தகங்கள் இந்தியாவின் எந்த ஒரு மொழியிலும் இல்லை' என்பதுடன் 'இந்தியர்களுக்கு எந்த மொழியில் பாடம் நடத்துவது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் நம்மிடம் இருக்கிறது' என்கிறார்.
ஒரு மேலாதிக்க நாட்டின் ஆளும்வர்க்கப் பிரிதிநிதி என்ற அடிப்படையில் மெக்காலேவின் எண்ண ஒட்டங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது.
'மெக்காலே கல்வியின் நோக்கம் இந்தியர்களை மேம்படுத்துவதுதான்' என்ற புரிந்துகொள்ளத் தேவையில்லை.
'நாம் கொடுக்கும் கல்வியின் மூலம் இவர்கள் ரத்தத்தாலும் நிறத்தாலும் இந்தியர்களாக இருப்பார்கள். சிந்தனை,ரசனை மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் ஆங்கிலேயர்களாக இருப்பார்கள்' என்று மெக்காலே வெளிப்படையாக குறிப்பிடுகிறார்.
ஆக ஆங்கிலேய அரசுக்கு சேவகம் செய்வோரை உற்பத்தி செய்வதே அதன் வெளிப்படையான நோக்கம் என்பது தெளிவு.
இது அன்று, ஆனால் இன்று:-
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சந்தை ... நிறுவனங்களின் ஒரே தாரக மந்திரம் இதுதான்.
இதை அவர்கள் வெளிப்படையாக ஒப்புக்கொள்வும் செய்கின்றனர்.
2000 ம் ஆண்டு இதே அன்றைய மத்தியரசும் கார்பரேட் நிறுவனங்களும் இணைந்து
"கல்வித்துறை சீர்திருத்ததிற்கான கொள்கைச் சட்டம்"
(A policy framework for reforms in education) ஒன்றை வெளியிட்டனர்.
அதில், " கல்வியை சமூக முன்னேற்றத்தின் கருவியாகப் பார்க்கும் நமது கண்ணோட்டத்தை அடிப்படையிலேயே மாற்றி அமைக்க வேண்டும்.
புதிய திறமைகளை விரைந்து கற்றுக் கொள்ளக்கூடிய, சந்தைப் போட்டிக்கு ஏற்பத் தன்னை தகவமைத்துக் கொள்ளக்கூடிய தொழிலாளிகளை உருவாக்க வேண்டும்.
என்று வெளிப்படையாக அறிவிப்பாளர்கள்.
"கல்வி என்பது சமூக மாற்றத்துக்குக் கிடையாது;
சந்தையின் தேவைக்கு ஏற்ப ஆட்களை உற்பத்தி செய்வதற்கே'
என்ற பிரகடனம் செய்கின்றனர்...........
என்ற பிரகடனம் செய்கின்றனர்...........
விடை சொல்லவே
பழக்குகிறோம்.
பழக்கியதே இல்லை
கேள்வி கேட்க...!!!
பழக்குகிறோம்.
பழக்கியதே இல்லை
கேள்வி கேட்க...!!!
-Source: கற்க கசடற-
No comments:
Post a Comment