Friday, 30 November 2018

நவநாகரிகம்:


நம்பிக்கையைக் காட்டும்
இந்த சமூகத்தின் கண்ணாடி
சிதறுகிறது,  நவீன
மேற்கத்திய சிந்தனையில்.


இவ்வுலக பண்பாட்டிலிருந்து
சமுகத்தை காப்பாற்று
சமூகமே உன்னதமான
உன் எண்ணத்தில்
மீண்டும் ஒரு கலாசாரத்தைக்
கட்டியெழுப்பு.


பல பண்பாட்டில்
நீ பயணிக்கும் போது
உனது தனித்துவ
கலாச்சாரத்தை இழந்துவிடாதே..


முதலில் உனது பண்பாட்டை
அழிப்பது பின் உன்
சிந்தனை அறிவு காணமல்
போகும் உன் அடுத்த
நகர்வு அவர்களின்
கலாச்சார சீரழிவில்
பயணிப்பாய்...
இதுவே மேற்கின் வெற்றி..

Wednesday, 28 November 2018

காலம்




எதிர்காலத்தை கணிக்கும்
ஒரு சமுகம் அதை மறந்து
எதிர்பார்ப்பை நோக்யே
காலம் கடத்துகிறது!!!


திருமறையை கையில்
ஏந்தி.. உலகை வழிநடத்த
வேண்டிய சமூகம், ஆனால்
சிந்தனையும் மறந்து
சித்தாந்தமும் தொலைத்தது
எல்லாம் பிறர் எழுதி வைத்த
ஏடுகள் சட்டம் ஆனது.
அதுவே வாழ்வும் ஆகிவிட்டது..


பெருமையாக கதைக்கிறோம்
இந்த உம்மத்துகாக தான்
உலகமே படைக்கபட்டது என்று...
ஆனால் உம்மத் இப்பொழுது
எதையும் படைக்கவில்லை,
உருவாக்கவில்லை, எது வந்தாலும்
அதை ஏற்றுக்கொள்கிற, 
உள்வாங்குகிற இந்த சமூகம்,
இது தான் வாழ்வு என்று பயணிக்கிறது!!
உன்னத உம்மத்தின் வழி மறந்த
இந்த உம்மத்தின் பிள்ளைகள்.

Saturday, 24 November 2018

மனசாட்சியே எங்கே?


மனசாட்சியே எங்கே?

அறபு தேசத்தின்
அந்த யெமனில் 1.3 கோடி
மனிதம் உணவின்றி
தவிக்கிறது, இது
உலகை வழிநடத்த
வந்த தேசங்களின் அவலம்!!!

ஒரு முனையில்
சவூதி யும் அதன்
கூட்டு படையும்,
மறுமுனையில் ஹீதி
போராளி குழுவு
இடையேயான போர்,
இந்த பேரழிவு
இம் மக்களுக்கு.

இங்கு வகுப்பறை
எல்லாம் போராளியின்
இருப்பிடமானது, அங்கு
குழந்தைகள் எல்லாம்
தெருக்களில் உணவிற்காக
உலக சமூகத்தை
எதிர்நோக்கி...

நாட்டின் ஐம்பது
சதமான மருத்துவம்
நசுக்கப்பட்டது இப்
பேரில்..

அனைத்து குழந்தையும்
பஞ்ச பட்டினியில்
இவ்வுலகை எதிர்நோகி
உணவுக்காக. உடல்களும்
விலை பேசப்படுகின்றன
ஒரு வேலை உணவுக்காக!
இது நவின உலகின் அவலம்;

இது வரை 2.5 இலட்சம்
பேர் உயிரிழப்பு இந்த
கூட்டு போரில்.

மனித உரிமை குறித்த
ஓயாமல் கூவும்
மேற்கத்தியம் வாய்யடைத்து
நிற்கிறது, ஏனெனில்
ஆயுதங்கள் விற்பனை
செய்வது அவர்கள்
தானே!!

ஜனநாயகத்தை உலகின்
விதைத்த மத்திய கிழக்கோ
முன்னின்றி நடத்துகின்றது.
எல்லாம் தனது அதிகாரத்திற்காக.

பல கலீபாக்களை
உருவாக்கிய இந்த
தேசங்கள் இன்று
தனது வரலாற்றை
மறந்து நிற்கின்றது மேற்கத்திய
சித்தாந்தத்தின் விளைவாக.

இங்கு ஐ.நா சபையோ
அயோக்கியற்களின்
கூடாரமக மாறுகிறது.

மனசாட்சியே இல்லாத உலகில்..

- @amt

Thursday, 22 November 2018

-பிரதிநிதி-


நாம் உலகை ஆள
பிறந்தவர்கள்,
பிறர் சிந்தனைக்கு
அடிமை அல்ல,
அவர்களுக்கு பின்
தொடர்ந்து செல்பவர்கள்
அல்ல;


இதற்காக இறைவன்
படைக்கவில்லை அவனது
பிரதிநிதியாக இந்த 
உலகில் நம்மை.


இத் திருநாட்டின்
பெரும் தியாகத்தின்
சொந்தகாரர்கள்.
மிக பெரும் வரலாற்று
உடையவர்கள்;


யாரின் இசைவுக்காக
காத்திருந்து பணிசெய்ய
அவசியம்யில்லை.
நாம் இஸ்லாமிய மைய
நீரோட்ட அரசியலை
உணர வேண்டும்.

இவ் உலகை வழிநடத்த
வந்தவர்கள் என்பதே
உண்மை.

இவ்வுலகம் ஒரு பேராபத்தை
நோக்கி நகர்கிறது..
அது மனித தன்மையை
புதைக்குழியில் புதைத்து
கொண்டிருக்கின்றது...


இதை செம்மைபடுத்த
நம்மால் தான் முடியும்
ஆனால் நாம்
பெருநிறுவனங்களுக்கு
விற்பனை பொருளாக
விலை பேசப்படுகின்றோம்
மாத சம்பளத்திற்கு
அடிமையாகிறோம்
உலக ஆசையாள்.


பெரும் பாக்கியம்
பெற்றவர்கள், நம்மை
விலை கொடுத்த
வாங்க தகுதியும்
திராணியும், உள்ளவன் நம்மை 
படைத்த இறைவன் மட்டுமே.


நம்மால் தான் முடியும்
தேசத்தை காக்க
செம்மை படுத்த
ஏனெனில் நம்மில்
தான் ஏகத்துவ நம்பிக்கை,
சமூக நீதி மற்றும் கூட்டு நிதி
தத்துவம் இருக்கிறது.


நமது வரலாற்று
பக்கங்களை புரட்டுவோம்,
ஏனெனில் இயற்கையின்
ரகசியங்களை உலகுக்குத்
திறந்து காட்டியது யார்?
புதிய நாகரித்தை முதலில்
வடித்த சிற்பி யார் ?
அது நமது உம்மத்.

  

சிந்தனையை செம்மைபடுத்துவோம்
வரும் தலைமுறை
வழிநடத்துவோம் உலகை ஆள..
கார்பெரேட் கம்பெனிக்கு
விளைபொருளாக அல்ல
--
@amt
-

Tuesday, 20 November 2018

ஔரங்கசீப்;







கிழவியும் ஆலம்கீரும்:

ஹஸன் அப்தால் என்ற பிரதேசத்தில் ஔரங்கஜேப் பிரயாணம் செய்து கொண்டிருந்த வேளையில், அங்கு ஒரு சிற்றூரில் தங்கியிருந்தார். அவர் தங்கியிருந்த இடத்தின் சுவர் ஓரத்தில் ஏழைக்கிழவியின் வீடும் இருந்தது. நீரால் ஒடும் இயந்திரத்தால் கோதுமையை மாவாக அரைத்துக் கொடுத்து அவள் ஜீவனம் செய்து வந்தாள்.


ஔரங்கசீப் தங்கியிருந்த பகுதியிலிருந்து கிழவியின் இயந்திரத்தை ஒட்டுவதற்காக நீரோட்டம் சென்றுகொண்டிருந்து. ஔரங்கஜேப்பின் பணியாளர்கள் அந்தத் தண்ணீரை அங்கு செல்லாமல் தடுத்து விட்டார்கள். இதனை மிகுந்த துக்கத்துடன் வந்த ஔரங்கஜேப்பிடம் கிழவி முறையிட்டாள். உடனே தண்ணீரைத் திறந்து விடும்படி கட்டளையிட்டார் ஔரங்கசீப். பின்னர்..


மன்னிப்பு வேண்டிய மன்னர்:

அன்று இரவு அந்த கிழவிக்கு உணவும், அதனுடன் ஒரு பண முடிப்பையும் ஔரங்கசீப் அனுப்பி வைத்தார். அத்தோடு நின்றுவிடாமல்,

" நாங்கள் இங்கு வந்த தங்கியதால், உங்களுக்கு கஷ்டம்நேர்ந்தது. ஆகையால் எங்களை மன்னுத்து விடுங்கள் " என்றும் சொல்லியனுப்பினார்.


ஔரங்கசீப்பின் கருணை உள்ளத்திற்கு எத்தனையோ சான்றுகளை சொல்லிக் கொண்ட செல்லலாம்...
இவரைதான் ஒரு கொடுங்கோலன் என்று சித்தரித்து பாடப்புத்தகங்கள் நமக்குப் பாடம் நடத்தியிருக்கின்றன.

-(செ.திவான்)

Monday, 19 November 2018

புது விடியலை நோக்கி




புலம்பெயர்ந்து வாழ்வின்
புது விடியலை நோக்கி
வாழ்வு முழுக்க மற்றொரு
தேசத்தில் !!


சுய சிந்தனை மறந்த..
வாழ்வின் ஓட்டம்
வேறொரு ஆதிக்கத்தின்
முழு சிந்தனையும்
யாரோ நம்மை
ஆளுகிறார்கள்
அந்த பெருநிறுவங்கள்
நம் உழைப்பு எல்லாம்
கார்பெரேட்டின் வளர்சிகே.. முழு வாழவும்!!!


எதை வாங்க?
எதை சாப்பிடுவது !!
எப்படி நேரத்தை
செலவழிப்பது !! என்று
அவர்கள் தீர்மானிக்கிறர்கள்..
தகவல் திருட்டில்..


மொத்ததில் நாம்
சுய சிந்தனையற்ற
ஒரு உயிர் உள்ள
ரோபோவாக அவர்களுக்கு
செயல்படுகிறோம்!!


மகிழ்விலும், துயரத்திலும்,
இணையத்தில் கழிகிறது வஞ்சிக்கப்பட்ட
வாழ்வு!!


இத்தனை காலமாய்
ஒரு பொருட்களையும்
உருவாக்கவில்லை!!
நம் உழைப்பில்!!
எல்லா கார்பெரேட்
குப்பையும் வாங்குகிறோம்
சம்பளத்தில்
நம் பாரம்பரிய
தற்சார்பு நிலையை
இழந்தோம்!!

சம்பள அடிமையில்
அதில் மொத்த
வாழ்வும் போனது
இந்த காதித பணத்தின்
ஆசையில்!!


அந்த காகித பணமும்
ஒரு நாள் காகிதம்
ஆனது ஏன் அதும்
காகிதம் தானே?


இந்த கார்பெரேட் ஆட்சியில்
பண மதிப்பிலக்கம்
என்று - முட்டாள்தனமான.
இது தான் பெட்ரோட்ரோலார்

பொருளியல்..பேக்ஸ் அமெரிக்கான.
நாம் தற்சார்பு பொருளியலை
நோக்கி நகர வேண்டும்.
நமது வாழ்முறையை
மீண்டும் அந்த அடிமை
உலகை நோக்கி அல்ல!!


மீட்டு எடுப்போம்
நம் சித்தாந்தத்தை
கற்று கொடுப்போம்
வரும் தலைமுறைக்கு
சுயமாக நிற்க
பொருளீட்ட நம்
நிலத்தை ஆள...

@amt


வீழ்ச்சியின் சின்னங்கள்;



" தற்போதைய உலக ஒழுங்கு மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையிலான பல போர்களுக்கும், இரு உலகப் போர்களுக்கும் இடையில் மேற்கத்திய நாடுகளால் உருவாக்கப்பட்டதாகும்.

இந்த உலகு ஒழுங்கு பெருமளவில் இஸ்லாத்தை நஷ்டப்படுத்தியதிலிருந்து கட்டப்பட்டதாகும். இஸ்லாமிய உலகு சிறு சிறு தேசிய அரசுகளாகத் துண்டாடப்படுவிட்டன. இந்தத் தேசிய அரசுகள் எந்தவிதத்திலும் முஸ்லிம் நாடுகளோ இஸ்லாமிய அரசுகளோ அல்ல.

ஏகாதிபத்திய சக்திகளை வழிபடுவதற்காக உருவாக்கப்பட்ட இந்நாடுகள் நமது வீழ்ச்சியின் சின்னங்கள். இஸ்லாமிய மைய வரலாற்றுத் தொடர்ச்சியுடன் இத்தேசங்களுக்கு எவ்விதத் தொடர்பும் கிடையாது .- ( கலீம் சித்திக்கீ , 1981)

இது இஸ்லாமிய ஆதிபத்தியத்தையும் நாகரிக ஒழுங்கையும் மேற்குலகு கடந்த 200 வருடங்களாகத் திட்டமிட்டுச் இவ்வாறு சீர்குலைத்தது...

Sunday, 18 November 2018

ஒரு துருவ உலகம்


மேற்கல்லாத நாகரிகங்களை எதிர்த்துப் போராடு; வெற்றிகொள்; கட்டுப்படுத்து. இதுவே புதிய நூற்றாண்டை ஆள்வதற்கான அமெரிக்க அரசியல் மந்திரம்.
 - சாமுவெல் பி.ஹன்டிங்டன்.
 (அமெரிக்க வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்)



செப்டம்பர் 11 தான் சர்வதேச அரசியலைப் பாதித்த முக்கிய நிகழ்வு என்று பலரும் நம்புவது முற்றிலும் யதார்த்தங்களுக்குப் புறம்பானது.



நீண்டகாலமாக இஸ்லாமிய உலகின் மீது தனது இராணுவ, அரசியல் ஆதிக்கத்தினை நிலைநிறுத்துவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த அமெரிக்காவுக்கு ஒர் உடனடி வாய்ப்பையே அது திறந்து கொடுத்தது, ஆக, அனைத்து அரசியல் மாற்றங்களினதும் திருப்புமுனை செப்டம்பர் 11 இல் நடந்த நிகழ்வன்று என்பதை நாம் கவனமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.



கடந்த முப்பதாண்டு கால வரலாற்றைப் பின்னோக்கி பார்க்கையில், இந்த யதார்த்தம் இன்னும் தெளிவாகப் புலப்படும். 



1970களுக்குப் பின்னர் அமெரிக்காவின் எதிராளியாகவும் மாபெரும் வல்லரசாகவும் விளங்கிய சோவியத் யூனியன் படிப்படியாகத் தளர்வடையத் தொடங்கியது.



1990களின் முற்கூறுகளில் அது முற்றாகவே உடைந்து சரிந்த வீழ்ந்தது. 1945இல் தொடங்கி 90கள் வகையான சுமார்  அரை நூற்றாண்டு காலப்பகுதியில் உலகம் அரசியல், இராணுவ, பொருளாதார ரீதியாக இருகூறுகளாகப் பிரிந்து நின்றது. மேற்கத்திய அரசியல் மொழி மரபில் இக்கூறுநிலையை இரு துருவ உலகம் (Bipolar world system)

- இஸ்லாமிய எழுச்சியும் மேற்குலகும்

Friday, 16 November 2018

மதுரை:




அலாவுதீன் கில்ஜி என்ற மாமன்னர் டெல்லியை ஆண்ட வந்த போது அவருடைய படைத் தளபதி மாலிக்காபூர் தமிழ்நாட்டிலுள்ள மதுரை மீது படையெடுத்து வந்தார்.


மதுரை மன்னரிடம் இருபது ஆயிரம் முஸ்லிம் வீரர்கள் கொண்ட படை இருந்தது. தாய் நாட்டின் மீது படையெடுத்து வரும் மாலிக்காபூரை எதிர்க்க-தாய் நாட்டை பாதுகாக்க மதுரை முஸ்லிம் வீரர்கள் தயாராக இருந்தபோது மதுரை முஸ்லிம் படைத் தளபதிக்கு மாலிக்காபூர் தன் படையை எதிர்த்து போராடி வெற்றி பெற முடியாது.


ஆகவே முஸ்லிம்களாக இருக்கும் உங்கள் உயிரை பறிக்க விரும்பவில்லை. மதுரைப் படையிலிருந்து விலகி தன் படைகளை ஆதரிக்க வேண்டுமென ஆலோசனைக் கடிதம் அனுப்பினார்.


அந்தக் கடிதம் கண்ட மதுரைப் படை முஸ்லிம் தளபதி மாலிக்கபூருக்கு என்ன பதில் கடிதம் எழுதினார் தெரியுமா? அந்தக் கடிதம் முஸ்லிம்களின் தேசப் பற்றுக்கும் விசுவாசத்திற்கும் எடுத்துக்காட்டாக இன்றும் வரலாற்று ஏடுகளில் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.


" மதுரையைத் தங்கள் படை பிடிக்க வேண்டுமானால் முதலில் மதுரைப்படையில் இருக்கும் முஸ்லிம் வீரர்களின் பிணங்கள் மீது நடந்தே மதுரையை பிடிக்க முடியும். எங்கள் தாய்நாடு எங்களுக்கு உயிரையும் விட மேலானது"


நாங்கள்  விசுவாசமிக்க குழந்தைகள். அதனை அழிக்க ஒரு போதும் விடமாட்டோம். தாய்நாட்டை காக்கும் புனிதப் போரில் ரத்தம் சிந்தி வீர மரணம் அடைந்தாலும் அடைவோமே தவிர தங்கள் படைகளுடன் ஒத்துழைக்க மாட்டோம்" என்று மதுரைப் படைத் தளபதி மாலிக்கபூருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தினார்.


அன்றும் - இன்றும்
இனி என்றும் சரி
முஸ்லிம்கள் தாங்கள்
வாழும் தாய்நாட்டிற்கு
துரோகம் செய்த்தே கிடையாது..


வேர்களின் பெருமையை
விழுதுகள் மறக்களாம !!

Wednesday, 14 November 2018

வீழ்ச்சியை மீட்டெடுப்போம்:





வீழ்ச்சியை மீட்டெடுப்போம்:

கொள்கையோ இயக்கமோ
என்பதல்ல பிரச்சினை
கடர்கரையில்
ஆழிப்பேரலைக்கு
முன்னால் அழிவதை
போல, கொள்கை பிரிவினையால்
பாசிச சத்திகள்
அழித்து செல்லுமானல் -
முஸ்லிம்களே இந்த நிலப்பரப்பில்
நீங்கள் வாழ்ந்த இடத்தை
இழப்பீர்கள்;


நாம் வாழ்ந்த வடிவு கூட
இருக்காது அடுத்த தலைமுறைக்கு.

நாம் நம்மை மறு சீரமைக்கும் நேரம் இது, நமது அபிப்ராய பேதங்களை குர்பானி கொடுத்துவிட வேண்டும்,

நாம் நமது இயக்க மதிமயக்கத்திற்குள்ளானதும் எதிர்கால வாய்ப்புகளை மதிப்பீடு செய்வதில் பலவீனமான நிலைக்கு தள்ளப்பட்டோம்.

மத்ரஸாக்களும் பள்ளிவாசல்களும் ஐக்கியத்தின் மையங்களாக மாற்றப்பட்டிருக்க வேண்டும்.

ஒவ்வொரு பள்ளிவாசலும் ஒவ்வொரு மத்ரஸாவும் ஏனைய பள்ளிகளுடனும் ஏனைய மத்ரஸாக்களுடனும் நெருங்கிய தொடர்பைக் கொண்டு செயல்படுத்த வேண்டும்.

இஸ்லாமிய சமயக் கட்டமைப்பில் "பித்ஆவுக்கு" (innovation)இடமளித்ததும் நமது வீழ்ச்சிக்கு மற்றொரு காரணம்..

நாம் மற்றும் உலமாக்கள் மூலம் ஐக்கிய முஸ்லிம் சமூகமொன்றை உருவாக்க வேண்டும்..

முஸ்லீம் அமைப்புகள் தமது அடையாளங்களை வேறுபடுத்திக்கொள்ள முடியும். ஆனால், தமக்குள் ஒவ்வொருவரும் பொது முயற்சிகளுக்காக நல்லுறவைப் பேணவேண்டும்.

நேற்று நமது வரலாறே பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இருந்தது:-


உலகத்தில் சாம்ராஜ்யங்௧ள் உருவாவதற்கும் வளர்வதற்றகும் பல நூற்றாண்டுகள் பிடித்திருக்கின்றன. ரோமானிய  சாம்ராஜ்யமும், கிரேக்க சாம்ராஜ்யமும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அமைந்திருக்கின்றன.


ஆனால், இஸ்லாமிய சாம்ராஜ்யமோ நபி பெருமான் (ஸல்) அவர்களின் மறைவிற்குப் பிறகு- அவர்களை பின் தொடர்த உன்னத சஹாபாக்களால் பத்தே ஆண்டு காலத்திற்குள் உலகில் நிலை பெற்றிருக்கிறது. (இரண்டாம் கலீஃபா உமர் பின் கத்தாப் ரலி, ஆட்சிக் காலத்தில் ஈராக், பாரசீகம், எகிப்து, பலஸ்தீனம், சிரியா, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் அர்மீனியா ஆகிய பகுதிகள் ஆட்சின் கீழ் வந்தன- 634 -644 CE, Rashidun Caliphate)   இதற்கெல்லாம் மூலக்காரணம் முஸ்லிம்கள் இறைவனிடத்தில் கொண்டிருந்த பக்தியும், விசுவாசமுமேயாகும். அவர்கள் மார்க்க போதனைகளுக்கொப்ப தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டதனாலேயேயாகும்!

சிறப்பட்டைவது எவ்வாறு?

      நாம் ஏன் தாழ்ந்தோம்? ஏன் இந்நிலைக்கு ஆளானோம்? நமக்குள் ஏற்படும் வேற்றுமைகளை நீக்கிக்கொள்ள சக்தியற்றவர்களாகி விட்டோம்? நமது சிறிய அபிப்பிராய பேதங்களையெல்லாம் பெரிதுபடுத்திக்கொண்டதுதான்  நமது ஒற்றுமை குலைந்த்தற்குக் காரணங்களாகும்! நமது வேற்றுமையையும், அபிப்பிராய பேதங்களையும் நாம் குர்பானி கொடுத்துவிட வேண்டும். சகோதர உணர்வுடன் ஒற்றுமையாக வாழவேண்டும்..💐