Sunday, 4 November 2018

பல்லின சமூகத்தில் முன்மாதிரி முஸ்லிம் இளைஞன்.


கிறிஸ்துவுக்கு பின் 711 ஆம் ஆண்டு, வட ஆப்பிரிக்காவில் இருந்து Strait of Gibraltar  என்று சொல்லப்படுகின்ற ஜிப்ரால்டர் நீரிணை கடந்து ஒரு பெரும் இஸ்லாமிய படை ஸ்பெயினுடைய கரையை அடைந்தார்கள்.


அடைந்து விட்டு அந்த படைக்கு தலைமை தாங்கிய தளபதி தன்னுடைய படை வீரர்களை நோக்கி கட்டலை பிறப்பிக்கின்றார் நாங்கள் ஸ்பெயின் கரையை வந்து அடைந்த இந்த கப்பல்களை எல்லாம் தீ மூட்டி எறிந்துவிடுங்கள் என்று அவர் கூறினார்.


அப்பொழுது, அந்த படை வீரர்களுக்கு கொஞ்சம் ஆச்சிரியமாக இருக்கின்றது, தாங்கள் எப்படி திரும்ப போவது என்று சிந்திகின்றார்கள்.


அப்பொழுது அந்த படை தளபதி சொன்னார் நாம் ஏன் இந்த கப்பல்களை தீ மூட்டி எரிக்கிரோம் என்றால் ஒன்று நாம் ஐரோப்பாவின் ஸ்பெயினுடைய ஆட்சியாளர்களாக மாறுவோம்.


 அந்த நாட்டை நாங்கள் ஆட்சி செய்வோம், இல்லையெனில் நாங்கள் எதிர்கொள்கிறோம் விஸ்கோதிக்கு மன்னனுக்கு  எதிராக போர் செய்து மரணிப்போம் என்றார். எனவே நாம் திரும்பி செல்ல வேண்டிய தேவையில்லை என்றார் படை தளபதி.


 அந்த மக்கள் விரோத ஆட்சிக்கு  எதிராக போர் நடைபெற்றது, ஸ்பெயினில் அந்த படை வெற்றி கொன்றது. ஐரோப்பா வரலாற்றில் ஒரு திருப்பம் இஸ்லாமிய வரலாறு தொடங்கியது.


அந்த அத்தியத்தை தொடங்கிவைப்பதர்கான போரட்ட படையை வழிநடத்திய அந்த படை வீரர் வட ஆப்பிரிக்க பா்பர் இனத்தை சார்ந்த மிக முக்கியமான ஒரு படை தளபதி " தாரிக் இப்னு சியாத் " Tariq ibn Ziyad அவர்கள்.


மிக குறைந்த வயதிலே ஒரு மிக பெரிய படையை வழிநடத்தி சென்று ஐரோப்பாவில் ஸ்பெயினில் இஸ்லாத்தை கொண்டு சென்று வெற்றியை ஈட்டினார், தாரிக் பின் சியாத் என்ற ஒரு இளைஞர்.


இஸ்லாமிய வரலாற்றில் இது போன்ற வெற்றிகொண்ட இளைய படை தளபதிகள்

Usama Ibn Zayd
Musa bin Nusayr
Muhammad bin Qasim போன்றவர்கள்...


இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாத்தின் தூதை பறப்பியதிலும் அதனை உலகிற்கு கொண்டு சென்றதிலும் மிக பெரிய பங்களிப்பினை அற்றியவர்கள் எங்களுடைய இளைஞர்கள் என்பதை நாம் வரலாற்றிலிருந்து அறிகின்றோம்.


சிந்தனைக்கு

இளைஞர்கள் இப்படி வரலாற்றை திசை மாற்றுவதில் வலிமை உள்ளவர்கள். இளைஞர்களை நெறிப்படுத்தாத எந்த ஒரு சமூகமும் வரலாற்றில் வெற்றி பெற்றதில்லை என்ற உண்மையை நாம் வரலாற்றில் படிக்கிறோம்..💐

No comments:

Post a Comment