மேற்கல்லாத நாகரிகங்களை எதிர்த்துப் போராடு; வெற்றிகொள்; கட்டுப்படுத்து. இதுவே புதிய நூற்றாண்டை ஆள்வதற்கான அமெரிக்க அரசியல் மந்திரம்.
- சாமுவெல் பி.ஹன்டிங்டன்.
(அமெரிக்க வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்)
செப்டம்பர் 11 தான் சர்வதேச அரசியலைப் பாதித்த முக்கிய நிகழ்வு என்று பலரும் நம்புவது முற்றிலும் யதார்த்தங்களுக்குப் புறம்பானது.
நீண்டகாலமாக இஸ்லாமிய உலகின் மீது தனது இராணுவ, அரசியல் ஆதிக்கத்தினை நிலைநிறுத்துவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த அமெரிக்காவுக்கு ஒர் உடனடி வாய்ப்பையே அது திறந்து கொடுத்தது, ஆக, அனைத்து அரசியல் மாற்றங்களினதும் திருப்புமுனை செப்டம்பர் 11 இல் நடந்த நிகழ்வன்று என்பதை நாம் கவனமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
கடந்த முப்பதாண்டு கால வரலாற்றைப் பின்னோக்கி பார்க்கையில், இந்த யதார்த்தம் இன்னும் தெளிவாகப் புலப்படும்.
1970களுக்குப் பின்னர் அமெரிக்காவின் எதிராளியாகவும் மாபெரும் வல்லரசாகவும் விளங்கிய சோவியத் யூனியன் படிப்படியாகத் தளர்வடையத் தொடங்கியது.
1990களின் முற்கூறுகளில் அது முற்றாகவே உடைந்து சரிந்த வீழ்ந்தது. 1945இல் தொடங்கி 90கள் வகையான சுமார் அரை நூற்றாண்டு காலப்பகுதியில் உலகம் அரசியல், இராணுவ, பொருளாதார ரீதியாக இருகூறுகளாகப் பிரிந்து நின்றது. மேற்கத்திய அரசியல் மொழி மரபில் இக்கூறுநிலையை இரு துருவ உலகம் (Bipolar world system)
No comments:
Post a Comment