Wednesday, 28 November 2018

காலம்




எதிர்காலத்தை கணிக்கும்
ஒரு சமுகம் அதை மறந்து
எதிர்பார்ப்பை நோக்யே
காலம் கடத்துகிறது!!!


திருமறையை கையில்
ஏந்தி.. உலகை வழிநடத்த
வேண்டிய சமூகம், ஆனால்
சிந்தனையும் மறந்து
சித்தாந்தமும் தொலைத்தது
எல்லாம் பிறர் எழுதி வைத்த
ஏடுகள் சட்டம் ஆனது.
அதுவே வாழ்வும் ஆகிவிட்டது..


பெருமையாக கதைக்கிறோம்
இந்த உம்மத்துகாக தான்
உலகமே படைக்கபட்டது என்று...
ஆனால் உம்மத் இப்பொழுது
எதையும் படைக்கவில்லை,
உருவாக்கவில்லை, எது வந்தாலும்
அதை ஏற்றுக்கொள்கிற, 
உள்வாங்குகிற இந்த சமூகம்,
இது தான் வாழ்வு என்று பயணிக்கிறது!!
உன்னத உம்மத்தின் வழி மறந்த
இந்த உம்மத்தின் பிள்ளைகள்.

No comments:

Post a Comment