Sunday, 4 November 2018

தேசிய கல்வி தினம்.





நவம்பர் 11.

தேசிய கல்வி தினம்.

இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த தலைவரும், நவீனக் கல்வியின் சிற்பியுமான மவுலானா அபுல் கலாம் ஆசாத் (Maulana Abul Kalam Azad) பிறந்த தினம் இன்று (நவம்பர் 11).

சுதந்திர இந்தியாவின் முதல் கல்வியமைச்சர் " மௌலானா அபுல்கலாம் ஆசாத் "

தொலை நோக்குப் பார்வையோடு IIT போன்ற மிகச்சிறந்த கல்வி நிலையங்களை உருவாக்கி, சுதந்திர இந்தியாவின் கல்வித் தரத்தை உலகறியச் செய்தவர்.

இவரது தலைமையின் கீழ் 1951-ல் முதலாவது ஐஐடி (IIT) கல்வி நிறுவனம், 1953-ல் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தொடங்கப்பட்டது. 20-ம் நூற்றாண்டின் தலைசிறந்த உருது எழுத்தாளராகப் போற்றப்பட்டார். கல்வித் துறைக்கு இவரது பங்களிப்பைப் போற்றும் வகையில் இவரது பிறந்த நாள், தேசியக் கல்வி தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜாதி, மத, இனப் பாகுபாடின்றி அனைவரும் தரமான கல்வி பெற வேண்டும். 14 வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ‘பிளாட்டோ, அரிஸ்டாட்டில் பிதாகரஸ் ஆகிய மூவரும் சேர்ந்த ஆளுமை இவர்’ என்று காந்தியடிகள் இவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.


இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர், மிகப்பெரும் அறிவுஜீவி மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவர்களைப் போன்ற ஆளுமைகள் இந்திய சமூகத்தின் இன்றைய தேவை என்பதையும் மாணவர்களுக்கு நினைவூட்டுவோம். 💐


(அன்றைய வெளியிடப்பட்ட தேசிய கல்விக் கொள்கைக்கும் மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள கல்விக் கொள்கையின் வரைவிற்கும் ( draft of new education policy -2016 ) உள்ள வேறுபாடுகளை மாணவர்களுக்கும் , பெற்றோர்களுக்கும் விளக்குவோம். )

No comments:

Post a Comment