அலாவுதீன் கில்ஜி என்ற மாமன்னர் டெல்லியை ஆண்ட வந்த போது அவருடைய படைத் தளபதி மாலிக்காபூர் தமிழ்நாட்டிலுள்ள மதுரை மீது படையெடுத்து வந்தார்.
மதுரை மன்னரிடம் இருபது ஆயிரம் முஸ்லிம் வீரர்கள் கொண்ட படை இருந்தது. தாய் நாட்டின் மீது படையெடுத்து வரும் மாலிக்காபூரை எதிர்க்க-தாய் நாட்டை பாதுகாக்க மதுரை முஸ்லிம் வீரர்கள் தயாராக இருந்தபோது மதுரை முஸ்லிம் படைத் தளபதிக்கு மாலிக்காபூர் தன் படையை எதிர்த்து போராடி வெற்றி பெற முடியாது.
ஆகவே முஸ்லிம்களாக இருக்கும் உங்கள் உயிரை பறிக்க விரும்பவில்லை. மதுரைப் படையிலிருந்து விலகி தன் படைகளை ஆதரிக்க வேண்டுமென ஆலோசனைக் கடிதம் அனுப்பினார்.
அந்தக் கடிதம் கண்ட மதுரைப் படை முஸ்லிம் தளபதி மாலிக்கபூருக்கு என்ன பதில் கடிதம் எழுதினார் தெரியுமா? அந்தக் கடிதம் முஸ்லிம்களின் தேசப் பற்றுக்கும் விசுவாசத்திற்கும் எடுத்துக்காட்டாக இன்றும் வரலாற்று ஏடுகளில் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.
" மதுரையைத் தங்கள் படை பிடிக்க வேண்டுமானால் முதலில் மதுரைப்படையில் இருக்கும் முஸ்லிம் வீரர்களின் பிணங்கள் மீது நடந்தே மதுரையை பிடிக்க முடியும். எங்கள் தாய்நாடு எங்களுக்கு உயிரையும் விட மேலானது"
நாங்கள் விசுவாசமிக்க குழந்தைகள். அதனை அழிக்க ஒரு போதும் விடமாட்டோம். தாய்நாட்டை காக்கும் புனிதப் போரில் ரத்தம் சிந்தி வீர மரணம் அடைந்தாலும் அடைவோமே தவிர தங்கள் படைகளுடன் ஒத்துழைக்க மாட்டோம்" என்று மதுரைப் படைத் தளபதி மாலிக்கபூருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தினார்.
அன்றும் - இன்றும்
இனி என்றும் சரி
முஸ்லிம்கள் தாங்கள்
வாழும் தாய்நாட்டிற்கு
துரோகம் செய்த்தே கிடையாது..
வேர்களின் பெருமையை
விழுதுகள் மறக்களாம !!
No comments:
Post a Comment