1909 முதல் முஸ்லிம்களுக்கு இருந்து வந்த இரட்டை வாக்குரிமை, அரசுப்பணிகளில் ஒதுக்கீடு ஆகியவை அரசியல் சட்ட அவை விவாதங்களின் போது ஒழித்துக் கட்டப்பட்டன.
முதலில் ஏற்றுக் கொண்ட தொகுதி ஒதுக்கீட்டையும் அரசியல் சட்டம் இறுதி வடிவெடுக்கும் போது மறுத்தனர்.
அரசுப்பணிகளில் இட ஒதுக்கீடு செய்ய அரசியல் சட்டத்தில் வழி வகுக்கப்படும் என்கிற உறுதி மொழியையும் ஊத்தி மூடினர்.
அரசியல் சட்ட அவையில் விவாதம் என்கிற பெயரில் முஸ்லிம்கள் அச்சுறுத்தப்பட்னர்.
முஸ்லிம் உறுப்பினர்கள் தம் நியாயமான கோரிக்கைகளைக் கைவிடும் மன நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
நெஞ்சை நெகிழ்த்தும் இவ்வரலாற்றை சொல்கிறது இந்த நூல்.....
இரும்பு கூட துருவேறிக் கரைந்துவிடும். ஆனால், நமக்கெல்லாம் பாடப் புத்தகங்களின் வாயிலாக " உலோக மனிதனாக" ( இரும்பு மனிதன் ) - முன்னிறுத்தப்பட்ட மனிதாபிமானமற்ற மாண்புமிகு படேலின் ' வித்தியாசங்களை அழிக்கும் வகையிலான மிரட்டல்கள்.
இன்றைய வீதிக் கொலைச் செய்யும் ஆர்.எஸ்.எஸ். காரனின் வார்த்தைக்கு ஒப்பானவை. இவற்றையும் இவற்றிற்கு முன்பு மௌனமாகிப் போன முஸ்லிம் பிரதிநிகளில் சமூக உளவியல் பங்கையும் நுட்பமாக ஆங்கிலத்தில் மட்டுமே சாத்திய மாகக்கூடிய விசயங்கள் அ. மார்க்ஸ் அவர்கள் தருகிறபோது நமது மனம் நெகிழ்கிறது.
1909 முதல் முஸ்லிம்கள் அனுபவித்து வந்த உரிமைகள் சுதந்திர இந்தியாவில் மறுக்கப்பட்ட வரலாறு இது, வாசியிங்கள்...
No comments:
Post a Comment