கிழவியும் ஆலம்கீரும்:
ஹஸன் அப்தால் என்ற பிரதேசத்தில் ஔரங்கஜேப் பிரயாணம் செய்து கொண்டிருந்த வேளையில், அங்கு ஒரு சிற்றூரில் தங்கியிருந்தார். அவர் தங்கியிருந்த இடத்தின் சுவர் ஓரத்தில் ஏழைக்கிழவியின் வீடும் இருந்தது. நீரால் ஒடும் இயந்திரத்தால் கோதுமையை மாவாக அரைத்துக் கொடுத்து அவள் ஜீவனம் செய்து வந்தாள்.
ஔரங்கசீப் தங்கியிருந்த பகுதியிலிருந்து கிழவியின் இயந்திரத்தை ஒட்டுவதற்காக நீரோட்டம் சென்றுகொண்டிருந்து. ஔரங்கஜேப்பின் பணியாளர்கள் அந்தத் தண்ணீரை அங்கு செல்லாமல் தடுத்து விட்டார்கள். இதனை மிகுந்த துக்கத்துடன் வந்த ஔரங்கஜேப்பிடம் கிழவி முறையிட்டாள். உடனே தண்ணீரைத் திறந்து விடும்படி கட்டளையிட்டார் ஔரங்கசீப். பின்னர்..
மன்னிப்பு வேண்டிய மன்னர்:
அன்று இரவு அந்த கிழவிக்கு உணவும், அதனுடன் ஒரு பண முடிப்பையும் ஔரங்கசீப் அனுப்பி வைத்தார். அத்தோடு நின்றுவிடாமல்,
" நாங்கள் இங்கு வந்த தங்கியதால், உங்களுக்கு கஷ்டம்நேர்ந்தது. ஆகையால் எங்களை மன்னுத்து விடுங்கள் " என்றும் சொல்லியனுப்பினார்.
ஔரங்கசீப்பின் கருணை உள்ளத்திற்கு எத்தனையோ சான்றுகளை சொல்லிக் கொண்ட செல்லலாம்...
இவரைதான் ஒரு கொடுங்கோலன் என்று சித்தரித்து பாடப்புத்தகங்கள் நமக்குப் பாடம் நடத்தியிருக்கின்றன.
-(செ.திவான்)

No comments:
Post a Comment