Friday, 10 November 2017

திப்பு சுல்தான்

 

இந்திய வரலாற்றின் முதல் பக்கத்தில், முதல் பத்தியில், முதல் வரியின் முதல் வார்த்தையக எழுதபட்டிருக் வேண்டியப் பெயர், திப்புவுடையது. இந்திய சுதந்தரப் போரட்டத்தின் வீர சகாப்தம் திப்பு சுல்தானிடமிருந்து தொடங்குகிறது. வர்த்தகம் செய்ய அல்ல, இந்தியாவை வளைத்துப் போடவே ஆங்கிலேயர்கள் வந்திருக்கிறார்கள் என்பதைத் தொலைநோக்குப் பார்வையுடன் அடையாளம் கண்டு எதிர்த்த முதல் இந்தியர் அவர்.

 


ஒட்டுமொத்த பிரிட்டனையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு விஷயம், திப்பு பயன்படுத்திய ராக்கெட்டுகள் . ராக்கெட்டுகள் புதிதல்ல , ஆனால் , திப்பு ராக்கெட்டைப் பயன்படுத்திய விதம் அவர்களைப் பிரமிப்பூட்டியது. முக்கியத் தளபதிகளுக்கு திப்பு சுல்தான் ராக்கெட் இயக்கம் குறித்த அடிப்படைப் பிரதி ஒன்றைக் கொடுத்திருந்தார் ஃபத்துல் முஜ௧ஹிதின் ( Fathul Mujahidin) என்பது அதன் பெயர். ஒவ்வொன்றும் மிகத் துல்லியமான தாக்குதல்கள்.

தவிரவும் , ஆங்கிலேயர்களின் இருப்பிடங்களையும் மறைவிடங்களையும் நோக்கி ஏவப்படவில்லை அந்த ராக்கெட்கள். ஆயுதக்கிடங்குகளை மட்டுமே தேடி குறிபார்து அழித்தன.

 
வரலாறின் போக்கையே மாற்றியமைத்த
ஒரு மகத்தான போரளியின் மிரட்டும் வாழ்க்கை.

 

 

 இன்று திப்பு சுல்தான் பிறந்த தினம்

Tuesday, 7 November 2017

சுதந்திரமும் சிந்தனையும்

 

வெறுமனே பூமியின் விடுதலை என்பது உண்மையான சுதந்திரம் கிடையாது.

பூமியின் சுதந்திரத்துடன் மனிதனும் விடுதலை செய்யப்படுவதே  காலனித்துவத்தின் ஆதிக்கத்திலிருந்து மீட்சி பெற ஓரே வழியாகும்.

சுதந்திரம் என்ற பெயரில் நாட்டின் பூகோள வரைபடம் மாற்றமடைவதும், ஒரு காலப்பிரிவில் காலனித்து வாதிகள் வகித்த பதவிகளை நாட்டு மக்கள் பெற்றுக்கொள்ள வழி செய்வதும், பொது இடங்களில் அறிவித்தல்  பலகைகளில் பிற மொழிகளுக்குப் பதிலாக உள்ளூர் மொழி இடம் பெறுவதும்,

மனிதனின் சிந்தனைப் போக்கிலும் கருத்துப்பாங்கிலும் கண்ணோட்டத்திலும் மாற்றம் ஏற்படாதவரை வெறுமனே புறக் கவர்ச்சியை ஏற்படுத்தும் அம்சங்கள் மட்டுமேயாகும்


 ஆனால் இஸ்லாமிய உலகில் தோன்றிய சுதந்திர இயக்கங்கள் இழைத்த பெரும் தவறு என்னவெனில், காலனித்துவ வாதிகளைத் தங்களது பூமியிலிருந்து வெளியேற்றும் முயற்சியை மேற்கொண்ட காலகட்டத்தில், காலனித்துவ சிந்தனைக்கு அடிமைப்பட்டியிருந்த தனிமனிதனின் புனர்நிர்மாணத்திற்கான  எந்தவொரு ஆக்கபூர்வ முயர்ச்சியையும் மேற்கொள்ளத் தவறியமையாகும். எத்தகைய புரட்சி இயக்கத்திலும் வெற்றி என்பது தனிமனிதர்களில் உள்ளார்ந்த மாற்றத்தை ஏற்படுத்துவதிலேயே தங்கியுள்ளது.

(சிந்தனையும் & கருத்துக்களும்)

Monday, 6 November 2017

நாம் ஒரு வணிக சமூகம் : மரைக்கார் வர்த்தகம்


மரைக்கார் வர்த்தகம்

 

கொச்சியிலும், கொங்கனிலும் கள்ளிக் கோட்டையிலும் நடைபெற்று வந்த அரிசி வர்த்தகம் முஸ்லிம் மரைக்கார்களின்  கைகளிலேயே இருந்துள்ளது.

 

கொச்சியில் நடைபெற்ற அரிசி வர்த்தகம் இஸ்மாயில் மரைக்காரின் தலைமையில் நடைபெற்றுள்ளது.

 

இஸ்மாயில் மரைக்கார் பெரிய செல்வந்தர். இவ்விதமான பெரிய செல்வந்த வர்த்தகர் ஒருவரை கள்ளக் கோட்டையில் சந்தித்தமை பற்றி இப்ன்  பதூதா  கூறியுள்ளார்.

 

 கொச்சின் ராஜா

 போர்த்துக்கேயருடன் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டதால் நம்பிக்கை இழந்த முஸ்லிம்களும் மரைக்கார் சமூகத்தினரும் மாப்பிள்ளைகளின் மையமான பொன்னானிக்குச் சென்று குடியேறினர்.

 

அப்போது பொன்னானி சுதந்திர வர்த்தகத் துறைமுகமாக விளங்கியது. பல நாட்டினர் அங்கு வந்து கூடினர்.

 

மன்னன் ஸமோரினின்  இராணுவ ஆயுதச்சாலைகளும் இங்கு இருந்தன. அதனால் பொன்னானி விரைவில் போர்த்துக்கேயரின் தாக்குதலுக்கு இலக்காகியது.

 

மன்னனை  அச்சுறுத்துவதும் முஸ்லிம்களின் வர்த்தகத்தை முடக்குவதும் இத்தாக்குதல்களின் பிரதான நோக்கமாகும்.

 

போர்த்துக்கேயர் பொன்னானியைத் தொடர்ந்து தாக்கி  பாரிய சேதங்களை விளைவித்தனர். அதனால் மரைக்கார் சமூகத்தினர் மீண்டும் கேரளாவின் வட பாகத்தை நோக்கி குடி பெயர்ந்தனர்.பலர் தலயானிகொல்லத்திலும் பொன்னானிலும் குடியேறினர்.

 

படை பலமும் செல்வ வளமும் கொண்ட மரைக்கார் மற்றும் மாப்பிளா சமூகத்துடன் சேர்ந்து போர்த்துக்கேயரின் எதிர்ப்பை  முறியடிக்கும்  முயற்சிகளை மன்னன் ஸமோரின் விரிவுபடுத்தினார்.

 

கடல் வீரரும் வர்த்தகருமான முஹமத் என்ற மரைக்கார் தலைவருக்கு மன்னன் " குஞ்ஞாலி" என்ற பட்டத்தையும் வழங்கினான்.

 

கடற்படைத் தலைமையின் முக்கிய பதவியை அப்பெயர் குறிப்பிட்டது. குஞ்ஞாலிகளுக்குப் பட்டுத்தலைப்பாகையும் அணிவிக்கப்பட்டது. குன்ஹாலி அல்லது குஞ்சாலி என்பதற்கு பல்வேறு பல்வேறு வகையில் பொருள் கூறப்பட்டாலும் கடற்படையின் உயர் அந்தஸ்துள்ள பதவி அவர்களுக்கு வழங்கப்பட்டதை அப் பெயர் உறுதி செய்தது. மேற்கொண்டு பல வசதிகளையும் மன்னன் அவர்களுக்கு வழங்கினான்.  மேலும்...✍

 

(மறக்கப்பட்ட வரலாறு

M.S.M.அனஸ்)

 

இந்த மண்ணில்

ஆழப்புதைந்திருக்கும்

வேர்களிடம் கேட்டால்

நமது வரலாற்றை கூறும்!!!

 

"உண்மையையும், நிகழ்வுகளையும் மறுப்பதைக் கண்டு நான் சீற்றமுறுகிறேன்; உண்மை உள்ளபடியே மகத்தானது. வாசியுங்கள்; அதிசயப்படுங்கள்."

 

உலகப் புகழ் பெற்ற வரலாற்றாசிரியர்

- எட்வர்டு கிப்பன்

The Decline and Fall of the Roman Empire'

Sunday, 5 November 2017

கற்றலும் கற்பித்தலும்

 


எந்த ஒரு விஞ்ஞானத்தையும் தனிமைப் படுத்தப்பட்ட நிலையில் அதன் முன்னேற்றத்தைக் காண முடியாது. அது அதற்கான உறுதித் தன்மையையும் பெற்றுக் கொள்ளாது. அதனால் எல்லா அறிவியல் துறைகளுக்கும் விரிவான ஆன்மாவாக விளங்கும் ஒரு விஞ்ஞானம் தேவை. அது அனைத்து விஞ்ஞானங்களது இருப்பையும் பாதுகாக்கும். அவை ஒவ்வொன்றுக்குமான பொருத்தமான இடத்தையும் பெற்றுத்தரும். ஒவ்வொரு விஞ்ஞானத்தினதும்  வளர்ச்சிக்காக காரணமாகவும் அது அமையும். இவ்வாறு ஒவ்வொரு துறையின் நிலையையும் உறுதி செய்து விரிவான ஆன்மாவாக இருக்கக்கூடிய விஞ்ஞானம் என்பது ஃபலாசிபா ( Philosophy) அல்லது மெய்யியலாகும். ஏனெனில் அதன் பாடப் பொருள் பிரபஞ்ச ரீதியானது, பொதுமையானது. மெய்யியல்தான் மானிடத் தேவைகளை மனிதனுக்குக் காட்டித் தருகிறது. தேவைகள் எவை என்பதை விஞ்ஞானங்களுக்குக் காட்டித் தருவதும் அதுவே.

 (ஆப்கானி: கற்றலும் கற்பித்தலும்'(1882) M.S.M. அனஸ் )

விஞ்ஞானத்தின் பல்வேறு துறைகளில் பாண்டித்தியம் பெற்றிருந்தாலும் மெய்யியலில் அவர்களிடையே வளர்ச்சி பெற்றிருக்காவிட்டால் அவ்விஞ்ஞானங்கள் அச்சமூகத்தில் நீண்டகாலம் நிலைக்காது

மிளகு சாம்ராஜ்யம்


மலபார் கடலோரத்தில்  கிடைத்திட்ட வாசனைப் பொருட்கள் மிளகு,இஞ்சி இன்னபிறப் பொருட்கள் ஐரோப்பியருக்கு  அவசியத் தேவையாய் இருந்தது.இங்கு விலையும் மிகமிகக் குறைவு.

 

மிளகு இந்தியாவில் மட்டுமே விளைந்து வந்த ஒரு பயிர்,பிரேசில் போன்ற வேறு சில நாடுகளில் பயிராவது சமீபகாலத்திய நிகழ்ச்சி.** இந்தியாவிலிருந்து கிரேக்க ரோம சாம்ராஜ்யங்களுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மிளகு ஏற்றுமதி செய்யபட்டு வந்தது.

 

15ஆம் நூற்றாண்டு வரை மிளகு வியாபாரம் அரேபியர் கையில் இருந்தது.அவர்கள் இந்தியாவின் மிளகைக் கொள்முதல் செய்து ஐரோப்பிய நாடுகளின் வியாபாரம் செய்து பெரும் பொருள் ஈட்டி வந்தனர்.அரேபியர்களிடமிருந்து மிளகு வியாபாரத்தை கைப்பற்றும் நோக்கத்துடன் வந்தவர்தான் வாஸ்கோடாகாமா .


ரோமாபுரியின் கோடிக்கணக்கான பணம் மிளகை வியாபாரம் செய்ததால் இந்தியாவிற்குக் கிடைத்தது. ஒரு கட்டத்தில் மிளகு எடைக்கு எடை தங்கத்திற்கு விற்கப்பட்டது

 

( source: -வெ.இறையன்பு, பத்தாயிரம் மைல் பயணம்.
- மிளகு சாம்ராஜ்யங்கள் அன்றும் இன்றும்.
-வரலாற்றின் வெளிச்சத்தில் போர்த்துக்கீசியர்கள் குஞ்ஞாலிகள். செ.திவான்.)💐


 இந்த சிறு மிளகு வர்த்தகம் இந்த  அகண்ட இந்தியாவின் சாம்ராஜ்ஜியத்தையே  மாற்றியது ....🖊

Saturday, 4 November 2017

மீட்டெடுப்போம்


ஒரு பகுப்பாய்வு:-
 
வீழ்ச்சியை மீட்டெடுப்போம்:

நாம் நம்மை மறு சீரமைக்கும் நேரம் இது, நமது அபிப்ராய பேதங்களை குர்பானி கொடுத்துவிட வேண்டும்,
 
நாம் நமது இயக்க மதிமயக்கத்திற்குள்ளானதும் எதிர்கால வாய்ப்புகளை மதிப்பீடு செய்வதில் பலவீனமான நிலைக்கு தள்ளப்பட்டோம்.
 
மத்ரஸாக்களும் பள்ளிவாசல்களும் ஐக்கியத்தின் மையங்களாக மாற்றப்பட்டிருக்க வேண்டும்.
 
ஒவ்வொரு பள்ளிவாசலும் ஒவ்வொரு மத்ரஸாவும் ஏனைய பள்ளிகளுடனும் ஏனைய மத்ரஸாக்களுடனும் நெருங்கிய தொடர்பைக் கொண்டு செயல்படுத்த வேண்டும்.
 
இஸ்லாமிய சமயக் கட்டமைப்பில் "பித்ஆவுக்கு" (innovation)இடமளித்ததும் நமது வீழ்ச்சிக்கு மற்றொரு காரணம்..

நாம் மற்றும் உலமாக்கள் மூலம் ஐக்கிய முஸ்லிம் சமூகமொன்றை உருவாக்க வேண்டும்..
 
முஸ்லீம் அமைப்புகள் தமது அடையாளங்களை வேறுபடுத்திக்கொள்ள முடியும். ஆனால், தமக்குள் ஒவ்வொருவரும் பொது முயற்சிகளுக்காக நல்லுறவைப் பேணவேண்டும்.
 

நேற்று நமது வரலாறே பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இருந்தது:-
 

உலகத்தில் சாம்ராஜ்யங்௧ள் உருவாவதற்கும் வளர்வதற்றகும் பல நூற்றாண்டுகள் பிடித்திருக்கின்றன. ரோமானிய  சாம்ராஜ்யமும், கிரேக்க சாம்ராஜ்யமும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அமைந்திருக்கின்றன.


ஆனால், இஸ்லாமிய சாம்ராஜ்யமோ நபி பெருமான் (ஸல்) அவர்களின் மறைவிற்குப் பிறகு- அவர்களை பின் தொடர்த உன்னத சஹாபாக்களால் பத்தே ஆண்டு காலத்திற்குள் உலகில் நிலை பெற்றிருக்கிறது. (இரண்டாம் கலீஃபா உமர் பின் கத்தாப் ரலி, ஆட்சிக் காலத்தில் ஈராக், பாரசீகம், எகிப்து, பலஸ்தீனம், சிரியா, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் அர்மீனியா ஆகிய பகுதிகள் ஆட்சின் கீழ் வந்தன- 634 -644 CE, Rashidun Caliphate)   இதற்கெல்லாம் மூலக்காரணம் முஸ்லிம்கள் இறைவனிடத்தில் கொண்டிருந்த பக்தியும், விசுவாசமுமேயாகும். அவர்கள் மார்க்க போதனைகளுக்கொப்ப தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டதனாலேயேயாகும்!

 சிறப்பட்டைவது எவ்வாறு?


      நாம் ஏன் தாழ்ந்தோம்? ஏன் இந்நிலைக்கு ஆளானோம்? நமக்குள் ஏற்படும் வேற்றுமைகளை நீக்கிக்கொள்ள சக்தியற்றவர்களாகி விட்டோம்? நமது சிறிய அபிப்பிராய பேதங்களையெல்லாம் பெரிதுபடுத்திக்கொண்டதுதான்  நமது ஒற்றுமை குலைந்த்தற்குக் காரணங்களாகும்! நமது வேற்றுமையையும், அபிப்பிராய பேதங்களையும் நாம் குர்பானி கொடுத்துவிட வேண்டும். சகோதர உணர்வுடன் ஒற்றுமையாக வாழவேண்டும்..💐

மிளகு சாம்ராஜ்யம்

*மிளகு சாம்ராஜ்யம்*

மலபார் கடலோரத்தில்  கிடைத்திட்ட வாசனைப் பொருட்கள் மிளகு,இஞ்சி இன்னபிறப் பொருட்கள் ஐரோப்பியருக்கு  அவசியத் தேவையாய் இருந்தது.இங்கு விலையும் மிகமிகக் குறைவு.

மிளகு இந்தியாவில் மட்டுமே விளைந்து வந்த ஒரு பயிர்,பிரேசில் போன்ற வேறு சில நாடுகளில் பயிராவது சமீபகாலத்திய நிகழ்ச்சி.** இந்தியாவிலிருந்து கிரேக்க ரோம சாம்ராஜ்யங்களுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மிளகு ஏற்றுமதி செய்யபட்டு வந்தது.

*15ஆம்* *நூற்றாண்டு* வரை மிளகு வியாபாரம் அரேபியர் கையில் இருந்தது.அவர்கள் இந்தியாவின் மிளகைக் கொள்முதல் செய்து ஐரோப்பிய நாடுகளின் வியாபாரம் செய்து பெரும் பொருள் ஈட்டி வந்தனர்.அரேபியர்களிடமிருந்து மிளகு வியாபாரத்தை கைப்பற்றும் நோக்கத்துடன் வந்தவர்தான் *வாஸ்கோடாகாமா* .


ரோமாபுரியின் கோடிக்கணக்கான பணம் மிளகை வியாபாரம் செய்ததால் இந்தியாவிற்குக் கிடைத்தது. ஒரு கட்டத்தில் மிளகு எடைக்கு எடை *தங்கத்திற்கு விற்கப்பட்டது*

( source: -வெ.இறையன்பு, பத்தாயிரம் மைல் பயணம்.
- மிளகு சாம்ராஜ்யங்கள் அன்றும் இன்றும்.
-வரலாற்றின் வெளிச்சத்தில் போர்த்துக்கீசியர்கள் குஞ்ஞாலிகள். செ.திவான்.)💐


 *இந்த சிறு மிளகு வர்த்தகம் இந்த  அகண்ட இந்தியாவின் சாம்ராஜ்ஜியத்தையே  மாற்றியது* ....🖊

கல்வியின் நோக்கம்


    சமுதாயத்தின் அறிவுத் தேவை சமுதாயத்தின் படித்த வர்க்கத்தினாலும் அந்த அறிவுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் எழும் வசதியீனங்கள் பற்றிய பிரச்சினைகள் சமுதாயத்தின் வசதி படைத்தோரலும் தீர்க்கப்படல் அவசியமாகும்..

 "உண்மையான கல்வியானது ஒருவனை பரிபூரணமான வாழ்விற்கு ஆயத்தப்படுத்தல் வேண்டும்" - Herbert Spencer
 

உண்மையான இஸ்லாமிய கல்வியின் நோக்கம் ஒரு பரிபூரணமான இஸ்லாமிய வாழ்விற்கு ஆயத்தப்படுத்தல் வேண்டும் "💐

Friday, 3 November 2017

மனம்


பூமியோ  விசாலமாக இருக்கின்றது ஆனால் என் மனம்மோ நெருக்கடியில் இருக்கின்றது..
நிச்சயமாக இறைவன் கூறுகின்றான் மனிதனுக்கும் அவன் இருதயத்திர்க்கும் இடையில் ஆதிக்கம் புரிபவன் இறைவன் ஒருவன் தான்...
இந்த வானம் மற்றும் பூமியை விட விசாலமானது உங்களது மனம்..
 ஆனால் அதில் உங்களுடைய மனிதர்களையும், பொருள்களையும், அறிவையும், கொண்டு நெருக்கடிக்கு உள்ளாக்காதிர்கள் அவைகள் அனைத்தும் பொருள்கள் அழியக்கூடியது,
இறைவனின் வாக்கோ உங்களுடைய மனதிற்கு  உயிர் கொடுக்ககுடியது..
இப்போது அவனை தவிர இறைவன் இல்லை என்று உணர்வுகள்
அல்லாஹ் ஒருவன் தான்

கற்றலும் கற்பித்தலும்


 
எந்த ஒரு விஞ்ஞானத்தையும் தனிமைப் படுத்தப்பட்ட நிலையில் அதன் முன்னேற்றத்தைக் காண முடியாது. அது அதற்கான உறுதித் தன்மையையும் பெற்றுக் கொள்ளாது. அதனால் எல்லா அறிவியல் துறைகளுக்கும் விரிவான ஆன்மாவாக விளங்கும் ஒரு விஞ்ஞானம் தேவை. அது அனைத்து விஞ்ஞானங்களது இருப்பையும் பாதுகாக்கும். அவை ஒவ்வொன்றுக்குமான பொருத்தமான இடத்தையும் பெற்றுத்தரும். ஒவ்வொரு விஞ்ஞானத்தினதும்  வளர்ச்சிக்காக காரணமாகவும் அது அமையும். இவ்வாறு ஒவ்வொரு துறையின் நிலையையும் உறுதி செய்து விரிவான ஆன்மாவாக இருக்கக்கூடிய விஞ்ஞானம் என்பது ஃபலாசிபா ( Philosophy) அல்லது மெய்யியலாகும். ஏனெனில் அதன் பாடப் பொருள் பிரபஞ்ச ரீதியானது, பொதுமையானது. மெய்யியல்தான் மானிடத் தேவைகளை மனிதனுக்குக் காட்டித் தருகிறது. தேவைகள் எவை என்பதை விஞ்ஞானங்களுக்குக் காட்டித் தருவதும் அதுவே (ஆப்கானி,' கற்றலும் கற்பித்தலும்'(1882)).

ரிக் வேதகால ஆரியர்கள்



 மாமிசம்

ரிக்வேத கால ஆரியர்கள் விவசாயம் செய்து வந்தாலும், பசுக்கள், குதிரைகள், ஆடுகள், செம்மறியாடுகள் இவைகள் அவர்களுடைய பெருஞ்செல்வமாக இருந்தன.

ஆகவே அவர்களிலே *மாமிசம் உண்ணாதவர்களே எவரும் இல்லை* எனலாம்.

பெரிய பெரிய ரிஷிகள், முனிவர்களுக்கு விருந்து படைக்க வேண்டுமென்றாலும் புலால் மிகவும் அவசியமான ஒன்றாகும்.  " *புலால் இல்லாமல்"* மதுயர்க்கமே உணவே இருக்க முடியாது என்று பிற்கால மதசூத்திரக்காரா்கள் சொல்லியும் வைத்தார்கள்*

வேதங்களுக்குப் பின்னர் பிராமன நூல்களின் காலத்திலும் (கி.மு. 800) *மாமிசம் ஆரியர்களின் முக்கிய உணவாகவே இருந்தது.*

*தன்மகன் புலவனாகவும், புகழ்பெற்றவனாகவும்,* நல்ல பேச்சாளனகவும், எல்லா வேதங்களையும் படித்தவனாகவும், இருக்க வேண்டுமென விரும்பினால்,  *நெய்யுடன் கலந்த பொலி எருதுவின் மாமிசம் சேர்ந்த சாதம் சாப்பிட வேண்டும்* ் என்று பிரகதாரண்யகம் (6-8-18) கூறுகிறது.

 *புத்தர் காலத்திலும் பசு மாமிசம் ஆரியர்கள்* அதிகமாகவே சாப்பிட்டு வந்தார்கள்.
பவுத்தமத நூலான "மஜ்ஜிம் நிகாய்" (3-5-4) கூறுகிறது.

(நூல்: ரிக் வேத கால ஆரியர்கள் - ராகுல சாங்கிருத்தியாயன்)

-----*****-------*****-------

வரலாறு இல்லாத இந்த  ஆரியம் தனது இருப்பை நிலைநிறுத்த மிக பெரும் தியாகம் செய்தது புத்த காலத்தில் புலால் உண்ணாமை, என்ற நிலைக்கு வந்து அடுத்து மாட்டை தெய்வமாக்கியது அதை இப்போது மாட்டிறைச்சி அரசியலக மாற்றியது..எல்லாம் அரசியல் லாபத்திற்காக.. எளிய மக்கள், சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தனது அரசியல் வெறுப்பு உணர்வை ஆதிக்கம் செலுத்தி வருகிறது....

நாம் ஒரு வணிக சமூகம்


 செங்கடலையும் மக்காவையும் ஏடனையும் நோக்கி _கள்ளிக்கோட்டை  வணிகக்கப்பல்கள்_  15, 20 எனப் பயணமாகின இவர்கள் ஜித்தாவிலும் கெய்ரோவிலும் வர்த்தகங்களை மேற்கொண்டனர்.

பின்னர் கப்பல்கள் அங்கிருந்து ஐரோப்பாவை நோக்கிச் செல்வது வழக்கம்.

இக்காலத்தில் *தமிழ் நாட்டுடனும்* மலையாளத்துடனும் அரேபியர் அதிகளவில் தொடர்புகளை கொண்டிருந்தன.


அரேபியர்களும் முஸ்லிம்களும் மரியாதையுடன் வரவேற்கப்பட்டன.

அரசவைகளிலும் அவர்களுக்கென கௌரவமான இடம் வழங்கப்பட்டது.


 *கள்ளிக்கோட்டை, கொற்கை, தொண்டி, முசிறி, கொச்சி, கொல்லம், காயல், நாகப்பட்டினம், மசூலிப்பட்டினம்  ஆகிய துறைமுகப்பட்டினங்களில்  முஸ்லிம் வெளிநாட்டு வணிகர் பெருந்தொகையினர் வர்த்தக செயற்பாடுகளில் பங்கேற்றனர்* ்.(மஹதி 2005)


 *முஸ்லிம் வர்த்தகப் பரம்பல்*


மலபார் முஸ்லிம் வர்த்தகர்கள் இந்தியாவையும் *மத்தியதரைக் கடலையும் மையப்படுத்தியதாக உலக முறைமை ஒன்றை* உருவாக்கி இருந்தார்கள்.


புவியியல் ரீதியில் மலபாரில் ஆரம்பித்து அது இயங்கிவந்தபோதும் முஸ்லிம் மற்றும் அரபு நாடுகளுடனான தொடர்புகளினால் *அகண்ட இஸ்லாமிய வர்த்தக வலைப்பின்னல் ஒன்றை அவர்கள் உருவாக்கி இருந்தனர்.*

எனினும் *போர்த்துக்கேயரின் வருகையோடு* முஸ்லிம்களின் இந்த வர்த்தகபலம் பலவீனமடைந்தது.

 *முஸ்லிம்களின் வர்த்தக முன்னேற்றம் போர்த்துக்கேயரினால் தடுத்து நிறுத்தப்பட்டது.*
 To be con🖋

(மறக்கப்பட்ட வரலாறு, பேராசிரியர் MSM அனஸ் -பேராதனைப் பல்கலைக்கழகம்- இலங்கை¬)

*******-------******----------

 *நாம் ஏகாதிபத்தியத்திர்கும், முதலாலிதுவத்திர்கும், கார்ப்பிரேட் கம்பெனிக்கும்*  நமது அறிவையும், திறமையும், உழைப்பையும் சோர்ப்ப விலைக்கு அடிமையானது போதும்..


இந்த உழைப்பையும், திறமையும் கொண்டு நாம் பாதையை மாற்றுவோம்...அதற்காக களம் கணுவோம்,  ... வரலாறு படைப்போம்!!
இன்ஷா அல்லாஹ்.

சமூக புனரமைப்பில் மஸ்ஜிதுகளின் பங்கு

 https://youtu.be/WUdd4a9JSuU

சமூக புனரமைப்பில் மஸ்ஜிதுகளின் பங்கு

மஸ்ஜிதானது இஸ்லாமிய சமூகத்தின் சமூக வாழ்வின் மைய நிலையமாகக் செயற்பட வேண்டும். அங்கு மார்க்க கடமைகளுடன் சமூக நடவடிக்கைகளும் விரிவுபடுத்தப்பட வேண்டும்

இவ்வாறே  நமது வரலாறு உள்ளது.

இந்திய சுதந்திரப் பெரும்போரில் பள்ளிவாசல்களில் பேரெழுச்சி

பள்ளிவாசல்களில் முஸ்லிம்களின் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற ஆரம்பித்தன. இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்களை விரட்டுவதற்காக முஸ்லிம்கள் அனைவரும் பள்ளிவாசல்களில் இருந்து உருதிப் பிரமாணம் செய்தனர்.

சிந்தனைக்கு !


Thursday, 2 November 2017

விழித்திடு

"எண்ணெய்ப் பசையில் கால்கள் சிக்கிக்கொண்ட ஒரு பல்லியின் செயலற்ற நிலை எப்படியே"-
அப்படிதான் தற்போது நமது நிலை...

ஆனல் எதிரியின் நிலையோ..
" நீருக்கு மேலே ஒரே இடத்தில் சிறகடித்து நிற்கும் மீன்கொத்தியின் லாவகம்போலவும்....

சமூக கருத்துக்களை விவாதிக்கும் உரையாடல் மன்றங்களை (Dialogue Forum)
பரவலாக நடத்துவது காலத்தின் கட்டாயம். நமக்கு பரவலான அமைப்பில்,
 பல மட்டங்களில் சிந்தனைக் கூடங்கள் (Think Tank) மிகவும் இன்றியமையாதவை.

நமது சிந்தனையை பயன்படுத்தி, நமது நிலையை மாற்றியமைத்து,
நமது எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதே உண்மையான சுதந்திரம்

“அறிவுச் சுதந்திரம் என்பது, விரிந்த பரந்த அறிவுலகிலிருந்து
துண்டித்துக் கொண்டு வாழும் சூன்ய நிலையன்று”- Malik Bin Nabi

ஆழமாக உரையாடுவோம், விவாதிப்போம். அவற்றினூடாக,
வெளியேறும் வழிகளையும் விடைகளையும் கண்டடைவோம்.
வரலாறு நமக்காகக் காத்திருக்காது.
நாம்தான் வரலாற்றில் தலையீடு செய்ய வேண்டும்.
அப்போதுதான் மாற்றம் சாத்தியப்படும்.

விழித்திடு சமூகமே!!

மெய்யியலும் சிந்தனையும்

மெய்யியலும் சிந்தனையும்"

"ஆரம்பகால (ஆதி) முஸ்லிம்களிடம் அறிவியல் இருக்கவில்லை. ஆனால் மெய்யியல் மீதான ஆவல் அவர்களிடம் வளர்ச்சி பெற்றதற்கு இஸ்லாத்திற்குத் தான் நாம் நன்றி கூற வேண்டும். அதன் காரணமாக உலகின் பொது நடவடிக்கைகளையும் மனிதர்களுக்கான அவசியத் தன்மைகளையும் அவர்கள் ஆராயத் தொடங்கினர்."
- ஆஃப்கானி
---------------------------------
- 8ஆம் நூற்றாண்டைத் தொடர்ந்து சுமார் 400 வருட காலம் அறிவியலும் அதன் வளர்ச்சியும் முஸ்லிம்களின் கைகளில் இருந்தது.

கிரேக்கத்தில் முடிந்துபோன மெய்யியலுக்கு மீள் உயிர்ப்பு அளிப்பதிலும் இக்காலத்தில் முஸ்லிம்களே முன் நின்றனர்.
எனினும் இஸ்லாமிய நாகரிக வரலாற்றில் அந்த யுகத்திற்கான முடியுரை அழகாக எழுதப்பட்டுவிட்டது.

முதலில் அழிக்கப்பட்டது மெய்யியல் என்பதையே அந்த சோக முடியுரைப் பக்கங்கள் நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன.
அதைத்தொடர்ந்து நமது அறிவியலும் வீழ்ந்த்து.
-----------------------------------
வரலாற்றின் சோக முடிவு எதிரொலிப்பதைக் காணலாம் :-
"எந்த ஒரு தேசத்திற்கும் அதன் சீரழிவு அதன் மெய்யியல் வீழ்ச்சியிலிருந்துதான் தோற்றம் பொறுகிறது. அதன் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஏனைய அறிவியல்களுக்கும் கல்வித்துறைக்கும் அச்சீரழிவு பரவுகிறது."
-Al Alfghani  A political Biography - Nikki keddie

“வேர்களின் பெருமையை விழுதுகள் மீட்டெடுப்போம்!”

வர்த்தகமும் இஸ்லாமியர்களும்

" வேர்களின் பெருமையை விழுதுகள் மீட்டெடுப்போம் "

வர்த்தகமும் இஸ்லாமியர்களும் 

14 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பாண்டியப் பேரரசுக்கு பாரசீக வளைகுடாவில் இருந்து போர் குதிரைகள் இறக்குமதி வர்த்தகத்தில்( கீழக்கரை மற்றும் காயல்பட்டினம்) முஸ்லிம் வணிகர்கள் ஈடுபட்டனர்.


இரத்தினக்கற்கள் முத்துக்கள், பவளங்கள், மற்றும் விளை உயர்ந்த பொருள்களின் வர்த்தகம் இந்த பிராந்தியத்தின் பெரும் பகுதி முஸ்லிம் வணிகர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.


பாண்டிய மற்றும் சோழர் காலங்களில் தென்னிந்திய ஆட்சியாளர்கள் பாக்கு- நீரிணையின் பண்டைய முத்துக்கள் மற்றும் சங் (ancient pearling and chank diving industries) தொழில்களில் இருந்து பரந்த அளவில் வருவாய்களை பெற்றனர்.
இது தெற்கு முஸ்லிம் கடற்பகுதி நகரங்களாக இருந்து.


பல முஸ்லிம் ஏற்றுமதி மையங்களும் பருத்தி மற்றும் ஜவுளி பொருட்களை சர்வதேச சந்தைபடுத்துதலில் ஈடுபட்டன.

இது பிராந்திய அரசுக்கு  மற்றொரு வருவாய்கு முக்கிய ஆதாரமாக இருந்தது.

16ஆம் நூற்றண்டில் அதிராம்பட்டினம் , கீழக்கரை , மற்றும் பழவேற்காடு ஆகிய பிராந்தியங்கள் மிக அதிக ஜவுளி ஏற்றுமதி மையங்களில் ஒன்றாக இருந்தன..


பழவேற்காடு மற்றும் நாகப்பட்டினம் இந்த துறைமுகத்திலிருந்து சோழ மண்டல பொருட்களை இஸ்லாமிய வணிகர்கள் மலாக்கா, மற்றும் மக்காவு (மலேசிய & சீனா) இந்த நகரங்களுக்கு  பெருமளவில் ஏற்றுமதி செய்தனர் ..

இந்திய கடல் நகரங்களில் இஸ்லாமிய வணிகர்களே மிக உயர்ந்த ஆதிக்கத்தில் இருந்தனர்.

இவர்கள் வர்த்தக பாரம்பரியமிக்க சமூகம், மாரைகார் என அறியப்படனர் ( from tarn ' marakkalalam )

தமிழக இஸ்லாமிய வர்த்தகர்கள், கப்பல் உரிமையாளர்கள், நெருங்கமான அரபு வர்த்தகத்துடனும், புனித யாத்ரீகர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தனர்.

தெற்காசிய நாடுகள் மற்றும் இந்தியாவின் மேற்கு கடற்கரை குஜராத் முதல் மலபார் , தமிழகத்தின் பழவேற்காடுவரை இந்த பரந்த கடலோர நகரங்களில்

 இஸ்லாமியர்களின் கடல் வாணிபம் சிறப்புற்று விளங்கியது...

 மறக்கப்பட்ட வரலாறு 🖋

Source Book : Saints, Goddesses and Kings : Muslims and Christians in South Indian Society, 1700-1900 - Susan Bayly (Page: 78 - 79)

அஞ்சு வண்ணத்தார் வாணிகம்"


 " அஞ்சு வண்ணத்தார் வாணிகம்"

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் காணப்படும் பழைய பாடற் திரட்டு.

இப்பாடலில் நாகப்பட்டினம் வர்ணிக்கப்படுகிறது. அங்குள்ள வியாபார நடவடிக்கைகள் குறிப்பிடப்படுகின்றன. 

மேற்கே இருந்து குதிரைகள் கொண்டு வரப்படுகின்றன, வடக்கிலிருந்து  பிடவை கிழக்கேயிருந்து பொன்,  தெற்கிலிருந்து முத்துக்கள் எடுத்து வரப்படுகின்றன.

இங்ஙனம் கப்பல்களிலே பல்வேறு வகையான பண்டங்கள் நாகைக்குக் கொண்டு வரப்படுகின்றன.

இப்பண்டமாற்று வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர் அஞ்சு வண்ணத்தார்.  இதன் பயனாக அஞ்சு வண்ணத்தவர் சிறப்புடன் வாழ்கின்றனர். 

அது காரணமாக அங்கு அறம் வளர்கிறது. அத்தகைய சிறப்புடைய ஊரிலே உள்ள கடற்கரையிலே சந்தனம் குவிந்து கிடக்கின்றது. ஏனைய பொருள்களும் அங்கும் இங்குமாகச் சிந்திக் கிடக்கின்றன. உப்பும் அங்கு உண்டு.

இத்தகைய கண்கவர் காட்சி மிக்கது நாகை என்னும் நாகப்பட்டினம். இந்த நாகப்பட்டினத்திலே அஞ்சுவண்ணத்தார் , Anju Vannar என அழைக்கப்பட்ட  முஸ்லிம் மக்கள் வணிகத்தில் சிறந்து விளங்கினார் என்பதையே இப்பழைய பாடல் குறிக்கிறது.

(நூல்: வரலாற்றின் வெளிச்சத்தில் போர்த்துக்கீசியர்கள் குஞ்ஞாலிகள் - செ.திவான் 
and Meera Abraham, Two Medieval Merchant Guilders of south India, New Delhi 1988.

------    ---     --------      --------- 

இந்த வரலாறு மீட்டு எடுக்கப்பட வேண்டும். நாம் மீண்டும் அந்தப் பொற்காலத்திற்குச் செல்ல வேண்டும்.

வேலை செய்கின்ற சமுதாயம், என்று பெயர் எடுத்து விட்டோம். இனி நாம் அடுத்தக் கட்ட நகர்வுக்கு தயார் செய்யவேண்டும். இனி நாம் மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் சமுதாயமாக மாற வேண்டும். ஒரு முதாலாளியாக மாற வேண்டும். தொழிலாளி ( சம்பள அடிமையிலிருந்து )  என்கின்ற ‘நிரந்திர’ த்திலிருந்து விடுபட வேண்டும், தற்சார்பு பொருளாதாரதை நோக்கி...

நாம் ஒரு வணிக சமூகம்



கள்ளிக்கோட்டை யில்  13 ஆம் நூற்றாண்டளவில் 15000 மூர்கள் குடியிருந்ததாக வரலாற்று ஆவணங்கள்  கூறுகின்றன.

முஸ்லிம்கள் கேரளத் துறைமுகங்களில் கவர்னர்களாகவும் அரசியல் சமுதாயச் செல்வாக்குள்ளவர்களாகவும் விளங்கினர்.

திருத்தூதர் முகம்மது (ஸல்) காலத்திலிருந்தே அரபு வணிகர்கள் கேரளத்திற்கு வரத்தொடங்கிவிட்டனர்.

எனினும் கேரளாவில் அரேபியரின் வருகையும் தொடர்பும் இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முற்பட்டதாகும்.

கள்ளிக்கோட்டை  அராபியக் கடலின் அரவணைப்பிற்குட்பட்ட நகரம். அதனால் கள்ளிக்கோட்டை மலபார் பிராந்தியத்தின் பிரதான துறைமுக நகராமகப் பிரசித்தி பெற்றிருந்தது.

 இப்ன் பத்தூதாவின் பதிவுகள்

புகழ்பெற்ற அரபுப் பயணி இப்ன் பதூதா (1304 - 1369) தனது ரிஹ்லாவில் பின்வருமாறு விபரித்துள்ளார். 'மலபாரின் மிக மிக முக்கியமான கள்ளிக்கோட்டைக்கு நாம் சென்றோம், சீனா, ஜாவா, சிலோன், மாலைத்தீவு, யேமன், பார்சி, எனப் பல தேசத்தவர் அங்கு வந்திருந்தனர். இந்த துறைமுகம் உலகிலுள்ள துறைமுகங்களில் பெரியது.

 இப்ராஹிம் இந்த நகரின் வரத்தகத்தலைவர், அவர்தான் துறைமுகத்தின் தலைவர். அவர் பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்.

வணிகர்கள் அவரது வீட்டில் ஒன்று கூடுகின்றனர். ஒன்றாக உணவு உண்கின்றனர். நகரின் 'காதி' (நீதிபதி)  பர்க்தீன் உஸ்மான் ,

மிஸ்கால்இந்த நகரின் வாழும் பெரிய வர்த்தகர். பல கப்பல்களுக்கு சொந்தக்காரர். யேமன், சீனா, பாரசீகம் வரை அவரது வர்த்தகம் நடக்கின்றது. ...என்று இப்ன் பதூதா கூறுகின்றார்....வரும்🖋

(மறக்கப்பட்ட வரலாறு, பேராசிரியர் MSM அனஸ்)
---------       ------ ------    ------

ஆழமாக உரையாடுவோம், விவாதிப்போம். அவற்றினூடாக,
வெளியேறும் வழிகளையும் விடைகளையும் கண்டடைவோம்.
வரலாறு நமக்காகக் காத்திருக்காது.
நாம்தான் வரலாற்றில் தலையீடு செய்ய வேண்டும்.
அப்போதுதான் மாற்றம் சாத்தியப்படும்.

பாண்டியர் மேடையில் முஸ்லிம்கள்

பாண்டியர் மேடையில் முஸ்லிம்கள்

கிஷோரி சரன்லால்

 History of khaljis (A.D. 1290- 1320) என்ற நூலில் .....

"About 20,000 Musalmans, who had settled for long in South India and who were fighting on the side of the Hindu's deserted to the imperialists and were spared'.
----
பாண்டிய மன்னர்  மாலிக்காபூரை எதிர்த்து போரிட்டவர்கள் 20,000 முஸ்லிம்கள்.

-- N. Venkataramanyya
History and Archaeology, University of Madras
---------

பாண்டியர் மேடையில் முஸ்லிம்கள்

மாலிக்காபூர் தென்னகத்தில் படையெடுத்து வந்தபோது, பாண்டிய மன்னரின் படையில் பெரும் பங்காற்றியவர்கள் முஸ்லிம்கள்.

 இது, மன்னர்களுக்கு இடையே பொன்னாசையாலும் நடைபெற்ற போரே தவிர, மாதங்களுக்கு இடையே நடைபெற்ற போர் அல்ல என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்றைக்காட்டிட முடியுமா?

தலைநகரில் இருந்து பாண்டிய மன்னர் தப்பினார். மாலிக்காபூர் அவரைப் பின்தொடர்ந்தார். Ariz-l-Mamalik ஆன குவாஜா காஜி (Khwaja Haji) தலைமையின் கீழ் ஒரு பெரும் ராணுவம் பிர்துலைக் கண்காணிக்குமாறு செய்துவிட்டு மாலிக்காபூர் தொடர்ந்தார்....

- நூல்: மாலிக்காபூர் ஒரு மாவீரனின் மறுபக்கம் - செ. திவான்

மறக்கப்பட்ட வரலாறு 🖋

பெருமகன் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள்.

பெருமகன் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களில் ஒருவராக 1948 ஆம் ஆண்டு அவர் நியமிக்கப்பட்டார்.

14.9.49 அன்று அரசியல் நிர்ணய சபை கூடி இந்தியாவின் தேசிய மொழி பற்றி விவாதித்தபோது இந்தியாவின் தேசிய மொழியாக இருக்கும் தகுதி தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு என ஆணித்தரமாக எடுத்துரைத்தார். வரலாற்றின் பொன்னேட்டில் அன்று அவர் பொறித்துச் சென்ற வைர வரிகள் இவை:

“ஒரு மொழி இந்திய மொழியாக மட்டும் இருந்தால் போதாது. அம்மொழி இந்நாட்டின் பழமையான மொழியாகவும் இருக்க வேண்டும். அத்தகைய மொழியையே இந்நாட்டின் தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்து இங்கே முன்வைக்கப்பட்டது.

அக்கருத்தை ஏற்று அரசியல் நிர்ணய சபை தேசிய மொழி பற்றிய முடிவை எடுக்குமானால், ஒரு உண்மையை இச்சபை முன்பு துணிவோடு கூற விரும்புகிறேன். இந்த நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும், ஆரம்ப காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ்தான். எனது கூற்றை எந்த வரலாற்று ஆசிரியராலும் மறுக்க முடியாது. எந்தப் புதை பொருள் ஆராய்ச்சியாளராலும் எதிர்க்க முடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும், நயங்களும் நிறைந்த மொழி தமிழ். இது எனது தாய் மொழி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மொழியை நான் நேசிக்கிறேன்.

அம்மொழியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். பழமையான மொழியைத்தான் இந்நாட்டின் தேசிய மொழியாக்க வேண்டுமென்றால் இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்”

ஆனால், விவாத முடிவில் இந்தியை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பது வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, வாக்குககுள் இருதரப்புக்கும் சரிசமமாகப் பிரிந்த நிலையில், அவைத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் தனது ஒரு வாக்கை இந்திக்கு சாதகமாக அளித்ததால் இந்தி அரியணை ஏறியது.

ஹைதர் அலி

நஞ்சாரஜிடமிருந்து ஹைதர் அலி பெற்றுக்கொண்ட பாடம் இது.
தன் வாழ்நாள் முழுவதும் இந்தப் பாடத்தை மறக்கவில்லை அவர். யாராக இருந்தாலும் இதுதான் நிலைமை.
 " பலம் இருக்கும் வரை ஒதுங்கி இருப்பார்கள் எதிரிகள். கொஞ்சம் ஆட்டம் காண ஆரம்பித்தால்போதும். தரையோடு தரையாக வைத்து அழுத்தி, இறுதியில் அழித்தே விடுவார்கள். என்ன ஆனாலும் சரி, பலத்தை மட்டும் இழக்கவே கூடாது".
--         ---      ----    -----    ----
இது தான் இப்போது நமது நிலைமையில்-
சிந்தனையும், அறிவையும் கூர்மை படுத்த வேண்டும், இல்லையெனில் எதிரியின் இலக்கிற்க்கு முழுமையாக இறையாகிவிடுவோம்…

Malik bin Nabi


நாங்கள் எங்களது பின்னடைவுக்காகப் பிறரைக் குறை கூறுவதை எப்போது நிறுத்துகின்றோமோ.
அந்தப் பொழுதிலேயே உண்மையான சுதந்திரம்  எங்களுக்காகக் காத்திருக்கின்றது' என மாலிக் பின் நபி கூறுகின்றார்.
எங்களது சித்தனையைப் பயன் படுத்தி எங்களது நிலையை மாற்றியமைத்து எங்களது எதிர் காலத்தைக் கட்டியெழுப்புவதே உண்மையான சுதந்திரம் என அவர் கருதுகின்றார்.
சிந்தனா ரீதியாக நாம் பிறரின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறல் வேண்டும் என மாலிக் பின் நபி கூறம்போது அவர் மேற்கத்த்ய பாரம்பரியத்தை முற்றிலும் புறக்கணிக்கவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ளல் வேண்டும்.
அதற்குப் பதிலாக மேற்கத்திய சிந்தனைப் பாரம்பரியம் பற்றி மிக அறிவுபூர்வமாகப் பகுப்பாய்வு செய்து மேற்கத்தியப் பாரம்பரியத்தின் முன்னேற்றத்திற்குக் காரணமாக அமைந்த உள்ளார்ந்த இயக்க சக்திகளை அவர் புலப்படுத்தினார்.
மேற்கத்திய உலகம் பிற இனங்களின் அறிவுப் பாரம்பரியத்தைத் தனக்குள் இணைத்துப் பயன் பெற்று வளர்ச்சியடைந்ததை முஸ்லிம்களின் அவதானத்திற்கு அவர் சமர்பித்தார்.
எனவே,
' அறிவுச் சுதந்திரம் என்பது, விரிந்த பரந்த அறிவுலகிலிருந்து துண்டித்துக் கொண்டு வாழும் சூன்ய நிலையன்று' எனக் குறிப்பிடும் மாலிக் பின் நபி ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உயர்ச்சிக்கும் பன்முகப்பட்ட சிந்தனைப் பரிமாற்றம் அவசியமாகும் என்ற கருத்தை வலியுறுத்தினார்.
 மாலிக் பின் நபி: சிந்தனைகளும் கருத்துக்களும்.

மாற்றம்

"மாற்றம்"

தனிமனிதர்களைப் புனர்நிர்மாணம் செய்யும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்ட போது அது நிச்சயம் காலனித்துவத்தினால் ஒடுக்கப்பட்டு பலவீனமடைந்த மக்களின் எழுச்சியின் ஆரம்பமாக அமையப் போவதை மேற்கத்திய வாதிகள் உணர்ந்தனர்.
இந்நிலையில் மக்களைத் திசைதிருப்பும் நோக்கோடும், அவர்களை பலவீனப்படுத்தும் நோக்கோடும் உலக வாழ்வின் புறக்கவர்ச்சியினை அழகுபடுத்திச் சித்தரித்ததுக் காட்டவும்,
வாழ்க்கையின் யதார்த்தத்தைத் திரித்தும் சிதைத்தும் சித்தரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
கடமைகளை விட உரிமைகளுக்கு மிக அழுத்தம் கொடுக்கப்பட்டது.
சமூக நன்மையை விட தனிமனித வாதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் முயற்சி காணப்பட்டது.
இது முஸ்லிம் சமூகத்தின் ஒருமைப்பாட்டையும் கட்டுக்கோப்பையும் குழைத்து, காலனித்துவ விடுதலைக்குப் பின்னர் ஏற்பட்ட சமூக எழுச்சியைத் தடுப்பதற்கு மிகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும்
ஏனெனில் தனிமனிதவாதக் கோட்பாடு மிகப் பாரதூரமான விளைவுகளைக் கொண்டது.
மனித இனத்தின் முன்னேற்றம், வளர்ச்சி, நல்வாழ்வு என்பன தனிமனிதர்களின் பரஸ்பர ஒத்துழைப்பிலேயே தங்கியுள்ளது.

கந்து வட்டி



இந்த தேசத்தின் நடக்கும்  ஒவ்வொரு
நிகழ்வுகளையும் நாம் வேடிக்கை
 பார்க்கும் சமூகம் இல்லை.
நம் கண் முன்னே தீயில் கருகிய பிஞ்சு உயிர்
 அனைத்துக்கும் தீர்வு கூரிய சமூகம்.
அதை வாழ்ந்து காட்டிய சமுதாயம்.
காலத்தால் மாறாத சட்டம் கையில் இருந்தும்
பொது சமூகத்திற்கு எடுத்து சொல்ல மறந்து விட்டோமோ!!!
இல்லை அதை படிக்க மறுத்து விட்டோமா...
நாம் நம் சமூகத்தில் இஸ்லாமிய பொருளாதார நிபுணர்களை உருவாக்குவோம்..
"இஸ்லாமிய வங்கி"

மெய்யியலும் சிந்தனையும்

""

"ஆரம்பகால (ஆதி) முஸ்லிம்களிடம் அறிவியல் இருக்கவில்லை. ஆனால் மெய்யியல் மீதான ஆவல் அவர்களிடம் வளர்ச்சி பெற்றதற்கு இஸ்லாத்திற்குத் தான் நாம் நன்றி கூற வேண்டும். அதன் காரணமாக உலகின் பொது நடவடிக்கைகளையும் மனிதர்களுக்கான அவசியத் தன்மைகளையும் அவர்கள் ஆராயத் தொடங்கினர்."
- ஆஃப்கானி

- 8ஆம் நூற்றாண்டைத் தொடர்ந்து சுமார் 400 வருட காலம் அறிவியலும் அதன் வளர்ச்சியும் முஸ்லிம்களின் கைகளில் இருந்தது.

கிரேக்கத்தில் முடிந்துபோன மெய்யியலுக்கு மீள் உயிர்ப்பு அளிப்பதிலும் இக்காலத்தில் முஸ்லிம்களே முன் நின்றனர்.
எனினும் இஸ்லாமிய நாகரிக வரலாற்றில் அந்த யுகத்திற்கான முடியுரை அழகாக எழுதப்பட்டுவிட்டது.

முதலில் அழிக்கப்பட்டது மெய்யியல் என்பதையே அந்த சோக முடியுரைப் பக்கங்கள் நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன.
அதைத்தொடர்ந்து நமது அறிவியலும் வீழ்ந்த்து.

வரலாற்றின் சோக முடிவு எதிரொலிப்பதைக் காணலாம் :-
"எந்த ஒரு தேசத்திற்கும் அதன் சீரழிவு அதன் மெய்யியல் வீழ்ச்சியிலிருந்துதான் தோற்றம் பொறுகிறது. அதன் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஏனைய அறிவியல்களுக்கும் கல்வித்துறைக்கும் அச்சீரழிவு பரவுகிறது."
-Al Alfghani  A political Biography - Nikki keddie

“வேர்களின் பெருமையை விழுதுகள் மீட்டெடுப்போம்!”

சிந்தனை

 

 

கருத்துக்கள் வாழ்வின் முக்கிய வளமாகும். ஒரு சமூகத்தின் உயிரோட்டம்,

 

முன்னேற்றம், வளர்ச்சி என்பனவற்றை பெற்றுள்ள கருத்துக்களே பிரதிபலிக்கின்றன.

 

அதன் தேக்க நிலை பின்னடைவையும் கருத்துக்களே பிரதிபலிக்கின்றன.

 

கருத்துக்களின் அடிப்படையில் ஒரு தனி மனிதனோ சமூகமோ அடையும் வெற்றியே அரசியல், பொருளியல் துறைகளில் அதன் வெற்றிகளுக்குக் காரணமாக அமைகிறது.

 

இஸ்லாமிய வரலாற்றை நாம் பின்னோக்கிப் பார்த்தால், குர்ஆனின் சிந்தனைகளும் , பெறுமானங்களுமே இஸ்லாத்தை விசுவாசித்த ஆரம்ப முஸ்லிம்களின் உள்ளங்களில் முதலில் செல்வாக்குச் செலுத்தியதையும் அதுவே...

 

அவர்கள் அரசியல், வரலாறு, பொருளாதார, நாகரிகத் துறைகளில் அடைந்த வெற்றிகளுக்கு அடிப்படையாக அமைந்த்து என்பதையும் காண முடியும்..