Thursday, 2 November 2017

மெய்யியலும் சிந்தனையும்

மெய்யியலும் சிந்தனையும்"

"ஆரம்பகால (ஆதி) முஸ்லிம்களிடம் அறிவியல் இருக்கவில்லை. ஆனால் மெய்யியல் மீதான ஆவல் அவர்களிடம் வளர்ச்சி பெற்றதற்கு இஸ்லாத்திற்குத் தான் நாம் நன்றி கூற வேண்டும். அதன் காரணமாக உலகின் பொது நடவடிக்கைகளையும் மனிதர்களுக்கான அவசியத் தன்மைகளையும் அவர்கள் ஆராயத் தொடங்கினர்."
- ஆஃப்கானி
---------------------------------
- 8ஆம் நூற்றாண்டைத் தொடர்ந்து சுமார் 400 வருட காலம் அறிவியலும் அதன் வளர்ச்சியும் முஸ்லிம்களின் கைகளில் இருந்தது.

கிரேக்கத்தில் முடிந்துபோன மெய்யியலுக்கு மீள் உயிர்ப்பு அளிப்பதிலும் இக்காலத்தில் முஸ்லிம்களே முன் நின்றனர்.
எனினும் இஸ்லாமிய நாகரிக வரலாற்றில் அந்த யுகத்திற்கான முடியுரை அழகாக எழுதப்பட்டுவிட்டது.

முதலில் அழிக்கப்பட்டது மெய்யியல் என்பதையே அந்த சோக முடியுரைப் பக்கங்கள் நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன.
அதைத்தொடர்ந்து நமது அறிவியலும் வீழ்ந்த்து.
-----------------------------------
வரலாற்றின் சோக முடிவு எதிரொலிப்பதைக் காணலாம் :-
"எந்த ஒரு தேசத்திற்கும் அதன் சீரழிவு அதன் மெய்யியல் வீழ்ச்சியிலிருந்துதான் தோற்றம் பொறுகிறது. அதன் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஏனைய அறிவியல்களுக்கும் கல்வித்துறைக்கும் அச்சீரழிவு பரவுகிறது."
-Al Alfghani  A political Biography - Nikki keddie

“வேர்களின் பெருமையை விழுதுகள் மீட்டெடுப்போம்!”

No comments:

Post a Comment