Tuesday, 7 November 2017

சுதந்திரமும் சிந்தனையும்

 

வெறுமனே பூமியின் விடுதலை என்பது உண்மையான சுதந்திரம் கிடையாது.

பூமியின் சுதந்திரத்துடன் மனிதனும் விடுதலை செய்யப்படுவதே  காலனித்துவத்தின் ஆதிக்கத்திலிருந்து மீட்சி பெற ஓரே வழியாகும்.

சுதந்திரம் என்ற பெயரில் நாட்டின் பூகோள வரைபடம் மாற்றமடைவதும், ஒரு காலப்பிரிவில் காலனித்து வாதிகள் வகித்த பதவிகளை நாட்டு மக்கள் பெற்றுக்கொள்ள வழி செய்வதும், பொது இடங்களில் அறிவித்தல்  பலகைகளில் பிற மொழிகளுக்குப் பதிலாக உள்ளூர் மொழி இடம் பெறுவதும்,

மனிதனின் சிந்தனைப் போக்கிலும் கருத்துப்பாங்கிலும் கண்ணோட்டத்திலும் மாற்றம் ஏற்படாதவரை வெறுமனே புறக் கவர்ச்சியை ஏற்படுத்தும் அம்சங்கள் மட்டுமேயாகும்


 ஆனால் இஸ்லாமிய உலகில் தோன்றிய சுதந்திர இயக்கங்கள் இழைத்த பெரும் தவறு என்னவெனில், காலனித்துவ வாதிகளைத் தங்களது பூமியிலிருந்து வெளியேற்றும் முயற்சியை மேற்கொண்ட காலகட்டத்தில், காலனித்துவ சிந்தனைக்கு அடிமைப்பட்டியிருந்த தனிமனிதனின் புனர்நிர்மாணத்திற்கான  எந்தவொரு ஆக்கபூர்வ முயர்ச்சியையும் மேற்கொள்ளத் தவறியமையாகும். எத்தகைய புரட்சி இயக்கத்திலும் வெற்றி என்பது தனிமனிதர்களில் உள்ளார்ந்த மாற்றத்தை ஏற்படுத்துவதிலேயே தங்கியுள்ளது.

(சிந்தனையும் & கருத்துக்களும்)

No comments:

Post a Comment