நாங்கள் எங்களது பின்னடைவுக்காகப் பிறரைக் குறை கூறுவதை எப்போது நிறுத்துகின்றோமோ.
அந்தப் பொழுதிலேயே உண்மையான சுதந்திரம் எங்களுக்காகக் காத்திருக்கின்றது' என மாலிக் பின் நபி கூறுகின்றார்.
எங்களது சித்தனையைப் பயன் படுத்தி எங்களது நிலையை மாற்றியமைத்து எங்களது எதிர் காலத்தைக் கட்டியெழுப்புவதே உண்மையான சுதந்திரம் என அவர் கருதுகின்றார்.
சிந்தனா ரீதியாக நாம் பிறரின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறல் வேண்டும் என மாலிக் பின் நபி கூறம்போது அவர் மேற்கத்த்ய பாரம்பரியத்தை முற்றிலும் புறக்கணிக்கவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ளல் வேண்டும்.
அதற்குப் பதிலாக மேற்கத்திய சிந்தனைப் பாரம்பரியம் பற்றி மிக அறிவுபூர்வமாகப் பகுப்பாய்வு செய்து மேற்கத்தியப் பாரம்பரியத்தின் முன்னேற்றத்திற்குக் காரணமாக அமைந்த உள்ளார்ந்த இயக்க சக்திகளை அவர் புலப்படுத்தினார்.
மேற்கத்திய உலகம் பிற இனங்களின் அறிவுப் பாரம்பரியத்தைத் தனக்குள் இணைத்துப் பயன் பெற்று வளர்ச்சியடைந்ததை முஸ்லிம்களின் அவதானத்திற்கு அவர் சமர்பித்தார்.
எனவே,
' அறிவுச் சுதந்திரம் என்பது, விரிந்த பரந்த அறிவுலகிலிருந்து துண்டித்துக் கொண்டு வாழும் சூன்ய நிலையன்று' எனக் குறிப்பிடும் மாலிக் பின் நபி ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உயர்ச்சிக்கும் பன்முகப்பட்ட சிந்தனைப் பரிமாற்றம் அவசியமாகும் என்ற கருத்தை வலியுறுத்தினார்.
மாலிக் பின் நபி: சிந்தனைகளும் கருத்துக்களும்.
nice
ReplyDelete