Thursday, 2 November 2017

வர்த்தகமும் இஸ்லாமியர்களும்

" வேர்களின் பெருமையை விழுதுகள் மீட்டெடுப்போம் "

வர்த்தகமும் இஸ்லாமியர்களும் 

14 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பாண்டியப் பேரரசுக்கு பாரசீக வளைகுடாவில் இருந்து போர் குதிரைகள் இறக்குமதி வர்த்தகத்தில்( கீழக்கரை மற்றும் காயல்பட்டினம்) முஸ்லிம் வணிகர்கள் ஈடுபட்டனர்.


இரத்தினக்கற்கள் முத்துக்கள், பவளங்கள், மற்றும் விளை உயர்ந்த பொருள்களின் வர்த்தகம் இந்த பிராந்தியத்தின் பெரும் பகுதி முஸ்லிம் வணிகர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.


பாண்டிய மற்றும் சோழர் காலங்களில் தென்னிந்திய ஆட்சியாளர்கள் பாக்கு- நீரிணையின் பண்டைய முத்துக்கள் மற்றும் சங் (ancient pearling and chank diving industries) தொழில்களில் இருந்து பரந்த அளவில் வருவாய்களை பெற்றனர்.
இது தெற்கு முஸ்லிம் கடற்பகுதி நகரங்களாக இருந்து.


பல முஸ்லிம் ஏற்றுமதி மையங்களும் பருத்தி மற்றும் ஜவுளி பொருட்களை சர்வதேச சந்தைபடுத்துதலில் ஈடுபட்டன.

இது பிராந்திய அரசுக்கு  மற்றொரு வருவாய்கு முக்கிய ஆதாரமாக இருந்தது.

16ஆம் நூற்றண்டில் அதிராம்பட்டினம் , கீழக்கரை , மற்றும் பழவேற்காடு ஆகிய பிராந்தியங்கள் மிக அதிக ஜவுளி ஏற்றுமதி மையங்களில் ஒன்றாக இருந்தன..


பழவேற்காடு மற்றும் நாகப்பட்டினம் இந்த துறைமுகத்திலிருந்து சோழ மண்டல பொருட்களை இஸ்லாமிய வணிகர்கள் மலாக்கா, மற்றும் மக்காவு (மலேசிய & சீனா) இந்த நகரங்களுக்கு  பெருமளவில் ஏற்றுமதி செய்தனர் ..

இந்திய கடல் நகரங்களில் இஸ்லாமிய வணிகர்களே மிக உயர்ந்த ஆதிக்கத்தில் இருந்தனர்.

இவர்கள் வர்த்தக பாரம்பரியமிக்க சமூகம், மாரைகார் என அறியப்படனர் ( from tarn ' marakkalalam )

தமிழக இஸ்லாமிய வர்த்தகர்கள், கப்பல் உரிமையாளர்கள், நெருங்கமான அரபு வர்த்தகத்துடனும், புனித யாத்ரீகர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தனர்.

தெற்காசிய நாடுகள் மற்றும் இந்தியாவின் மேற்கு கடற்கரை குஜராத் முதல் மலபார் , தமிழகத்தின் பழவேற்காடுவரை இந்த பரந்த கடலோர நகரங்களில்

 இஸ்லாமியர்களின் கடல் வாணிபம் சிறப்புற்று விளங்கியது...

 மறக்கப்பட்ட வரலாறு 🖋

Source Book : Saints, Goddesses and Kings : Muslims and Christians in South Indian Society, 1700-1900 - Susan Bayly (Page: 78 - 79)

No comments:

Post a Comment