மரைக்கார் வர்த்தகம்
கொச்சியிலும், கொங்கனிலும் கள்ளிக் கோட்டையிலும் நடைபெற்று வந்த அரிசி வர்த்தகம் முஸ்லிம் மரைக்கார்களின் கைகளிலேயே இருந்துள்ளது.
கொச்சியில் நடைபெற்ற அரிசி வர்த்தகம் இஸ்மாயில் மரைக்காரின் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இஸ்மாயில் மரைக்கார் பெரிய செல்வந்தர். இவ்விதமான பெரிய செல்வந்த வர்த்தகர் ஒருவரை கள்ளக் கோட்டையில் சந்தித்தமை பற்றி இப்ன் பதூதா கூறியுள்ளார்.
கொச்சின் ராஜா
போர்த்துக்கேயருடன் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டதால் நம்பிக்கை இழந்த முஸ்லிம்களும் மரைக்கார் சமூகத்தினரும் மாப்பிள்ளைகளின் மையமான பொன்னானிக்குச் சென்று குடியேறினர்.
அப்போது பொன்னானி சுதந்திர வர்த்தகத் துறைமுகமாக விளங்கியது. பல நாட்டினர் அங்கு வந்து கூடினர்.
மன்னன் ஸமோரினின் இராணுவ ஆயுதச்சாலைகளும் இங்கு இருந்தன. அதனால் பொன்னானி விரைவில் போர்த்துக்கேயரின் தாக்குதலுக்கு இலக்காகியது.
மன்னனை அச்சுறுத்துவதும் முஸ்லிம்களின் வர்த்தகத்தை முடக்குவதும் இத்தாக்குதல்களின் பிரதான நோக்கமாகும்.
போர்த்துக்கேயர் பொன்னானியைத் தொடர்ந்து தாக்கி பாரிய சேதங்களை விளைவித்தனர். அதனால் மரைக்கார் சமூகத்தினர் மீண்டும் கேரளாவின் வட பாகத்தை நோக்கி குடி பெயர்ந்தனர்.பலர் தலயானிகொல்லத்திலும் பொன்னானிலும் குடியேறினர்.
படை பலமும் செல்வ வளமும் கொண்ட மரைக்கார் மற்றும் மாப்பிளா சமூகத்துடன் சேர்ந்து போர்த்துக்கேயரின் எதிர்ப்பை முறியடிக்கும் முயற்சிகளை மன்னன் ஸமோரின் விரிவுபடுத்தினார்.
கடல் வீரரும் வர்த்தகருமான முஹமத் என்ற மரைக்கார் தலைவருக்கு மன்னன் " குஞ்ஞாலி" என்ற பட்டத்தையும் வழங்கினான்.
கடற்படைத் தலைமையின் முக்கிய பதவியை அப்பெயர் குறிப்பிட்டது. குஞ்ஞாலிகளுக்குப் பட்டுத்தலைப்பாகையும் அணிவிக்கப்பட்டது. குன்ஹாலி அல்லது குஞ்சாலி என்பதற்கு பல்வேறு பல்வேறு வகையில் பொருள் கூறப்பட்டாலும் கடற்படையின் உயர் அந்தஸ்துள்ள பதவி அவர்களுக்கு வழங்கப்பட்டதை அப் பெயர் உறுதி செய்தது. மேற்கொண்டு பல வசதிகளையும் மன்னன் அவர்களுக்கு வழங்கினான். மேலும்...✍
(மறக்கப்பட்ட வரலாறு
M.S.M.அனஸ்)
இந்த மண்ணில்
ஆழப்புதைந்திருக்கும்
வேர்களிடம் கேட்டால்
நமது வரலாற்றை கூறும்!!!
"உண்மையையும், நிகழ்வுகளையும் மறுப்பதைக் கண்டு நான் சீற்றமுறுகிறேன்; உண்மை உள்ளபடியே மகத்தானது. வாசியுங்கள்; அதிசயப்படுங்கள்."
உலகப் புகழ் பெற்ற வரலாற்றாசிரியர்
- எட்வர்டு கிப்பன்
The Decline and Fall of the Roman Empire'
No comments:
Post a Comment