இந்திய வரலாற்றின் முதல் பக்கத்தில், முதல் பத்தியில், முதல் வரியின் முதல் வார்த்தையக எழுதபட்டிருக் வேண்டியப் பெயர், திப்புவுடையது. இந்திய சுதந்தரப் போரட்டத்தின் வீர சகாப்தம் திப்பு சுல்தானிடமிருந்து தொடங்குகிறது. வர்த்தகம் செய்ய அல்ல, இந்தியாவை வளைத்துப் போடவே ஆங்கிலேயர்கள் வந்திருக்கிறார்கள் என்பதைத் தொலைநோக்குப் பார்வையுடன் அடையாளம் கண்டு எதிர்த்த முதல் இந்தியர் அவர்.
ஒட்டுமொத்த பிரிட்டனையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு விஷயம், திப்பு பயன்படுத்திய ராக்கெட்டுகள் . ராக்கெட்டுகள் புதிதல்ல , ஆனால் , திப்பு ராக்கெட்டைப் பயன்படுத்திய விதம் அவர்களைப் பிரமிப்பூட்டியது. முக்கியத் தளபதிகளுக்கு திப்பு சுல்தான் ராக்கெட் இயக்கம் குறித்த அடிப்படைப் பிரதி ஒன்றைக் கொடுத்திருந்தார் ஃபத்துல் முஜ௧ஹிதின் ( Fathul Mujahidin) என்பது அதன் பெயர். ஒவ்வொன்றும் மிகத் துல்லியமான தாக்குதல்கள்.
தவிரவும் , ஆங்கிலேயர்களின் இருப்பிடங்களையும் மறைவிடங்களையும் நோக்கி ஏவப்படவில்லை அந்த ராக்கெட்கள். ஆயுதக்கிடங்குகளை மட்டுமே தேடி குறிபார்து அழித்தன.
வரலாறின் போக்கையே மாற்றியமைத்த
ஒரு மகத்தான போரளியின் மிரட்டும் வாழ்க்கை.
No comments:
Post a Comment