ஒரு பகுப்பாய்வு:-
வீழ்ச்சியை மீட்டெடுப்போம்:
நாம் நம்மை மறு சீரமைக்கும் நேரம் இது, நமது அபிப்ராய பேதங்களை
குர்பானி கொடுத்துவிட வேண்டும்,
நாம் நமது இயக்க மதிமயக்கத்திற்குள்ளானதும்
எதிர்கால வாய்ப்புகளை மதிப்பீடு செய்வதில் பலவீனமான நிலைக்கு தள்ளப்பட்டோம்.
மத்ரஸாக்களும் பள்ளிவாசல்களும் ஐக்கியத்தின்
மையங்களாக மாற்றப்பட்டிருக்க வேண்டும்.
ஒவ்வொரு பள்ளிவாசலும் ஒவ்வொரு மத்ரஸாவும்
ஏனைய பள்ளிகளுடனும் ஏனைய மத்ரஸாக்களுடனும் நெருங்கிய தொடர்பைக் கொண்டு செயல்படுத்த
வேண்டும்.
இஸ்லாமிய சமயக் கட்டமைப்பில் "பித்ஆவுக்கு"
(innovation)இடமளித்ததும் நமது வீழ்ச்சிக்கு மற்றொரு
காரணம்..
நாம் மற்றும் உலமாக்கள் மூலம் ஐக்கிய முஸ்லிம்
சமூகமொன்றை உருவாக்க வேண்டும்..
முஸ்லீம் அமைப்புகள் தமது அடையாளங்களை
வேறுபடுத்திக்கொள்ள முடியும். ஆனால், தமக்குள் ஒவ்வொருவரும் பொது
முயற்சிகளுக்காக நல்லுறவைப் பேணவேண்டும்.
நேற்று நமது வரலாறே பொன் எழுத்துக்களால்
பொறிக்கப்பட்டு இருந்தது:-
உலகத்தில் சாம்ராஜ்யங்௧ள் உருவாவதற்கும்
வளர்வதற்றகும் பல நூற்றாண்டுகள் பிடித்திருக்கின்றன. ரோமானிய சாம்ராஜ்யமும், கிரேக்க சாம்ராஜ்யமும் பல
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அமைந்திருக்கின்றன.
ஆனால், இஸ்லாமிய சாம்ராஜ்யமோ நபி
பெருமான் (ஸல்) அவர்களின் மறைவிற்குப் பிறகு- அவர்களை பின் தொடர்த உன்னத சஹாபாக்களால்
பத்தே ஆண்டு காலத்திற்குள் உலகில் நிலை பெற்றிருக்கிறது. (இரண்டாம் கலீஃபா உமர் பின்
கத்தாப் ரலி, ஆட்சிக் காலத்தில் ஈராக், பாரசீகம், எகிப்து, பலஸ்தீனம், சிரியா, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும்
அர்மீனியா ஆகிய பகுதிகள் ஆட்சின் கீழ் வந்தன- 634 -644 CE, Rashidun
Caliphate) இதற்கெல்லாம் மூலக்காரணம்
முஸ்லிம்கள் இறைவனிடத்தில் கொண்டிருந்த பக்தியும், விசுவாசமுமேயாகும். அவர்கள்
மார்க்க போதனைகளுக்கொப்ப தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டதனாலேயேயாகும்!
நாம் ஏன் தாழ்ந்தோம்? ஏன் இந்நிலைக்கு ஆளானோம்? நமக்குள் ஏற்படும் வேற்றுமைகளை
நீக்கிக்கொள்ள சக்தியற்றவர்களாகி விட்டோம்? நமது சிறிய அபிப்பிராய பேதங்களையெல்லாம்
பெரிதுபடுத்திக்கொண்டதுதான் நமது ஒற்றுமை குலைந்த்தற்குக்
காரணங்களாகும்! நமது வேற்றுமையையும், அபிப்பிராய பேதங்களையும்
நாம் குர்பானி கொடுத்துவிட வேண்டும். சகோதர உணர்வுடன் ஒற்றுமையாக வாழவேண்டும்..💐
No comments:
Post a Comment