Friday, 3 November 2017

ரிக் வேதகால ஆரியர்கள்



 மாமிசம்

ரிக்வேத கால ஆரியர்கள் விவசாயம் செய்து வந்தாலும், பசுக்கள், குதிரைகள், ஆடுகள், செம்மறியாடுகள் இவைகள் அவர்களுடைய பெருஞ்செல்வமாக இருந்தன.

ஆகவே அவர்களிலே *மாமிசம் உண்ணாதவர்களே எவரும் இல்லை* எனலாம்.

பெரிய பெரிய ரிஷிகள், முனிவர்களுக்கு விருந்து படைக்க வேண்டுமென்றாலும் புலால் மிகவும் அவசியமான ஒன்றாகும்.  " *புலால் இல்லாமல்"* மதுயர்க்கமே உணவே இருக்க முடியாது என்று பிற்கால மதசூத்திரக்காரா்கள் சொல்லியும் வைத்தார்கள்*

வேதங்களுக்குப் பின்னர் பிராமன நூல்களின் காலத்திலும் (கி.மு. 800) *மாமிசம் ஆரியர்களின் முக்கிய உணவாகவே இருந்தது.*

*தன்மகன் புலவனாகவும், புகழ்பெற்றவனாகவும்,* நல்ல பேச்சாளனகவும், எல்லா வேதங்களையும் படித்தவனாகவும், இருக்க வேண்டுமென விரும்பினால்,  *நெய்யுடன் கலந்த பொலி எருதுவின் மாமிசம் சேர்ந்த சாதம் சாப்பிட வேண்டும்* ் என்று பிரகதாரண்யகம் (6-8-18) கூறுகிறது.

 *புத்தர் காலத்திலும் பசு மாமிசம் ஆரியர்கள்* அதிகமாகவே சாப்பிட்டு வந்தார்கள்.
பவுத்தமத நூலான "மஜ்ஜிம் நிகாய்" (3-5-4) கூறுகிறது.

(நூல்: ரிக் வேத கால ஆரியர்கள் - ராகுல சாங்கிருத்தியாயன்)

-----*****-------*****-------

வரலாறு இல்லாத இந்த  ஆரியம் தனது இருப்பை நிலைநிறுத்த மிக பெரும் தியாகம் செய்தது புத்த காலத்தில் புலால் உண்ணாமை, என்ற நிலைக்கு வந்து அடுத்து மாட்டை தெய்வமாக்கியது அதை இப்போது மாட்டிறைச்சி அரசியலக மாற்றியது..எல்லாம் அரசியல் லாபத்திற்காக.. எளிய மக்கள், சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தனது அரசியல் வெறுப்பு உணர்வை ஆதிக்கம் செலுத்தி வருகிறது....

No comments:

Post a Comment