Thursday, 2 November 2017

மாற்றம்

"மாற்றம்"

தனிமனிதர்களைப் புனர்நிர்மாணம் செய்யும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்ட போது அது நிச்சயம் காலனித்துவத்தினால் ஒடுக்கப்பட்டு பலவீனமடைந்த மக்களின் எழுச்சியின் ஆரம்பமாக அமையப் போவதை மேற்கத்திய வாதிகள் உணர்ந்தனர்.
இந்நிலையில் மக்களைத் திசைதிருப்பும் நோக்கோடும், அவர்களை பலவீனப்படுத்தும் நோக்கோடும் உலக வாழ்வின் புறக்கவர்ச்சியினை அழகுபடுத்திச் சித்தரித்ததுக் காட்டவும்,
வாழ்க்கையின் யதார்த்தத்தைத் திரித்தும் சிதைத்தும் சித்தரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
கடமைகளை விட உரிமைகளுக்கு மிக அழுத்தம் கொடுக்கப்பட்டது.
சமூக நன்மையை விட தனிமனித வாதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் முயற்சி காணப்பட்டது.
இது முஸ்லிம் சமூகத்தின் ஒருமைப்பாட்டையும் கட்டுக்கோப்பையும் குழைத்து, காலனித்துவ விடுதலைக்குப் பின்னர் ஏற்பட்ட சமூக எழுச்சியைத் தடுப்பதற்கு மிகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும்
ஏனெனில் தனிமனிதவாதக் கோட்பாடு மிகப் பாரதூரமான விளைவுகளைக் கொண்டது.
மனித இனத்தின் முன்னேற்றம், வளர்ச்சி, நல்வாழ்வு என்பன தனிமனிதர்களின் பரஸ்பர ஒத்துழைப்பிலேயே தங்கியுள்ளது.

No comments:

Post a Comment