Thursday, 2 November 2017

விழித்திடு

"எண்ணெய்ப் பசையில் கால்கள் சிக்கிக்கொண்ட ஒரு பல்லியின் செயலற்ற நிலை எப்படியே"-
அப்படிதான் தற்போது நமது நிலை...

ஆனல் எதிரியின் நிலையோ..
" நீருக்கு மேலே ஒரே இடத்தில் சிறகடித்து நிற்கும் மீன்கொத்தியின் லாவகம்போலவும்....

சமூக கருத்துக்களை விவாதிக்கும் உரையாடல் மன்றங்களை (Dialogue Forum)
பரவலாக நடத்துவது காலத்தின் கட்டாயம். நமக்கு பரவலான அமைப்பில்,
 பல மட்டங்களில் சிந்தனைக் கூடங்கள் (Think Tank) மிகவும் இன்றியமையாதவை.

நமது சிந்தனையை பயன்படுத்தி, நமது நிலையை மாற்றியமைத்து,
நமது எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதே உண்மையான சுதந்திரம்

“அறிவுச் சுதந்திரம் என்பது, விரிந்த பரந்த அறிவுலகிலிருந்து
துண்டித்துக் கொண்டு வாழும் சூன்ய நிலையன்று”- Malik Bin Nabi

ஆழமாக உரையாடுவோம், விவாதிப்போம். அவற்றினூடாக,
வெளியேறும் வழிகளையும் விடைகளையும் கண்டடைவோம்.
வரலாறு நமக்காகக் காத்திருக்காது.
நாம்தான் வரலாற்றில் தலையீடு செய்ய வேண்டும்.
அப்போதுதான் மாற்றம் சாத்தியப்படும்.

விழித்திடு சமூகமே!!

No comments:

Post a Comment