கள்ளிக்கோட்டை யில் 13 ஆம் நூற்றாண்டளவில் 15000 மூர்கள் குடியிருந்ததாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன.
முஸ்லிம்கள் கேரளத் துறைமுகங்களில் கவர்னர்களாகவும் அரசியல் சமுதாயச் செல்வாக்குள்ளவர்களாகவும் விளங்கினர்.
திருத்தூதர் முகம்மது (ஸல்) காலத்திலிருந்தே அரபு வணிகர்கள் கேரளத்திற்கு வரத்தொடங்கிவிட்டனர்.
எனினும் கேரளாவில் அரேபியரின் வருகையும் தொடர்பும் இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முற்பட்டதாகும்.
கள்ளிக்கோட்டை அராபியக் கடலின் அரவணைப்பிற்குட்பட்ட நகரம். அதனால் கள்ளிக்கோட்டை மலபார் பிராந்தியத்தின் பிரதான துறைமுக நகராமகப் பிரசித்தி பெற்றிருந்தது.
இப்ன் பத்தூதாவின் பதிவுகள்
புகழ்பெற்ற அரபுப் பயணி இப்ன் பதூதா (1304 - 1369) தனது ரிஹ்லாவில் பின்வருமாறு விபரித்துள்ளார். 'மலபாரின் மிக மிக முக்கியமான கள்ளிக்கோட்டைக்கு நாம் சென்றோம், சீனா, ஜாவா, சிலோன், மாலைத்தீவு, யேமன், பார்சி, எனப் பல தேசத்தவர் அங்கு வந்திருந்தனர். இந்த துறைமுகம் உலகிலுள்ள துறைமுகங்களில் பெரியது.
இப்ராஹிம் இந்த நகரின் வரத்தகத்தலைவர், அவர்தான் துறைமுகத்தின் தலைவர். அவர் பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்.
வணிகர்கள் அவரது வீட்டில் ஒன்று கூடுகின்றனர். ஒன்றாக உணவு உண்கின்றனர். நகரின் 'காதி' (நீதிபதி) பர்க்தீன் உஸ்மான் ,
மிஸ்கால்இந்த நகரின் வாழும் பெரிய வர்த்தகர். பல கப்பல்களுக்கு சொந்தக்காரர். யேமன், சீனா, பாரசீகம் வரை அவரது வர்த்தகம் நடக்கின்றது. ...என்று இப்ன் பதூதா கூறுகின்றார்....வரும்🖋
(மறக்கப்பட்ட வரலாறு, பேராசிரியர் MSM அனஸ்)
--------- ------ ------ ------
ஆழமாக உரையாடுவோம், விவாதிப்போம். அவற்றினூடாக,
வெளியேறும் வழிகளையும் விடைகளையும் கண்டடைவோம்.
வரலாறு நமக்காகக் காத்திருக்காது.
நாம்தான் வரலாற்றில் தலையீடு செய்ய வேண்டும்.
அப்போதுதான் மாற்றம் சாத்தியப்படும்.
No comments:
Post a Comment