செங்கடலையும் மக்காவையும் ஏடனையும் நோக்கி _கள்ளிக்கோட்டை வணிகக்கப்பல்கள்_ 15, 20 எனப் பயணமாகின இவர்கள் ஜித்தாவிலும் கெய்ரோவிலும் வர்த்தகங்களை மேற்கொண்டனர்.
பின்னர் கப்பல்கள் அங்கிருந்து ஐரோப்பாவை நோக்கிச் செல்வது வழக்கம்.
இக்காலத்தில் *தமிழ் நாட்டுடனும்* மலையாளத்துடனும் அரேபியர் அதிகளவில் தொடர்புகளை கொண்டிருந்தன.
அரேபியர்களும் முஸ்லிம்களும் மரியாதையுடன் வரவேற்கப்பட்டன.
அரசவைகளிலும் அவர்களுக்கென கௌரவமான இடம் வழங்கப்பட்டது.
*கள்ளிக்கோட்டை, கொற்கை, தொண்டி, முசிறி, கொச்சி, கொல்லம், காயல், நாகப்பட்டினம், மசூலிப்பட்டினம் ஆகிய துறைமுகப்பட்டினங்களில் முஸ்லிம் வெளிநாட்டு வணிகர் பெருந்தொகையினர் வர்த்தக செயற்பாடுகளில் பங்கேற்றனர்* ்.(மஹதி 2005)
*முஸ்லிம் வர்த்தகப் பரம்பல்*
மலபார் முஸ்லிம் வர்த்தகர்கள் இந்தியாவையும் *மத்தியதரைக் கடலையும் மையப்படுத்தியதாக உலக முறைமை ஒன்றை* உருவாக்கி இருந்தார்கள்.
புவியியல் ரீதியில் மலபாரில் ஆரம்பித்து அது இயங்கிவந்தபோதும் முஸ்லிம் மற்றும் அரபு நாடுகளுடனான தொடர்புகளினால் *அகண்ட இஸ்லாமிய வர்த்தக வலைப்பின்னல் ஒன்றை அவர்கள் உருவாக்கி இருந்தனர்.*
எனினும் *போர்த்துக்கேயரின் வருகையோடு* முஸ்லிம்களின் இந்த வர்த்தகபலம் பலவீனமடைந்தது.
*முஸ்லிம்களின் வர்த்தக முன்னேற்றம் போர்த்துக்கேயரினால் தடுத்து நிறுத்தப்பட்டது.*
To be con🖋
(மறக்கப்பட்ட வரலாறு, பேராசிரியர் MSM அனஸ் -பேராதனைப் பல்கலைக்கழகம்- இலங்கை¬)
*******-------******----------
*நாம் ஏகாதிபத்தியத்திர்கும், முதலாலிதுவத்திர்கும், கார்ப்பிரேட் கம்பெனிக்கும்* நமது அறிவையும், திறமையும், உழைப்பையும் சோர்ப்ப விலைக்கு அடிமையானது போதும்..
இந்த உழைப்பையும், திறமையும் கொண்டு நாம் பாதையை மாற்றுவோம்...அதற்காக களம் கணுவோம், ... வரலாறு படைப்போம்!!
இன்ஷா அல்லாஹ்.
No comments:
Post a Comment