எந்த ஒரு விஞ்ஞானத்தையும் தனிமைப் படுத்தப்பட்ட
நிலையில் அதன் முன்னேற்றத்தைக் காண முடியாது. அது அதற்கான உறுதித் தன்மையையும் பெற்றுக்
கொள்ளாது. அதனால் எல்லா அறிவியல் துறைகளுக்கும் விரிவான ஆன்மாவாக விளங்கும் ஒரு விஞ்ஞானம்
தேவை. அது அனைத்து விஞ்ஞானங்களது இருப்பையும் பாதுகாக்கும். அவை ஒவ்வொன்றுக்குமான பொருத்தமான
இடத்தையும் பெற்றுத்தரும். ஒவ்வொரு விஞ்ஞானத்தினதும் வளர்ச்சிக்காக காரணமாகவும் அது அமையும். இவ்வாறு
ஒவ்வொரு துறையின் நிலையையும் உறுதி செய்து விரிவான ஆன்மாவாக இருக்கக்கூடிய விஞ்ஞானம்
என்பது ஃபலாசிபா ( Philosophy) அல்லது மெய்யியலாகும். ஏனெனில்
அதன் பாடப் பொருள் பிரபஞ்ச ரீதியானது, பொதுமையானது. மெய்யியல்தான்
மானிடத் தேவைகளை மனிதனுக்குக் காட்டித் தருகிறது. தேவைகள் எவை என்பதை விஞ்ஞானங்களுக்குக்
காட்டித் தருவதும் அதுவே (ஆப்கானி,' கற்றலும் கற்பித்தலும்'(1882)).
No comments:
Post a Comment